தனியுரிமைக் கொள்கை
கடைசியாக மாற்றப்பட்டது: 18 டிசம்பர், 2017 (காப்பகப்படுத்தியப் பதிப்புகளைக் காண்க)
எங்கள் சேவைகளைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம் – தகவலை தேடுவதற்கும் தகவலைப் பகிர்ந்து கொள்வதற்கும், பிறருடன் தொடர்புகொள்ள அல்லது புதிய உள்ளடக்கத்தை உருவாக்கவும் பயன்படுத்தலாம். எங்களுடன் தகவலைப் பகிரும்போது, எடுத்துக்காட்டாக Google கணக்கை உருவாக்குதல், அந்த சேவைகளை மேலும் சிறப்பாக செய்வோம் – மிகவும் தொடர்புடைய தேடல் முடிவுகளையும் விளம்பரங்களையும் காண்பித்தல், நபருடன் இணைக்க உதவியாகவோ அல்லது மற்றவர்களுடன் விரைவாகவும் எளிமையாகவும் பகிரச் செய்தல். எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் பொழுது , தகவலை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதையும் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் வழிகளையும் நீங்கள் தெளிவாக அறிந்திருக்க விரும்புகிறோம்.
எங்கள் தனியுரிமைக் கொள்கை விளக்குவது யாதெனில்:
- எந்தத் தகவலைச் சேகரிக்கிறோம், மேலும் ஏன் சேகரிக்கிறோம்.
- அந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்தும் விதம்.
- நாங்கள் அளிக்கும் விருப்பத் தேர்வுகள், அந்த தகவலை கையாளும் வழிமுறை மற்றும் புதுப்பிக்கும் முறை உட்பட.
இதனை முடிந்தவரை எளிமையாக வைக்க முயற்சித்தோம், ஆயினும் குக்கீகள், இணைய நெறிமுறை முகவரிகள், பிக்சல் குறிச்சொற்கள் மற்றும் உலாவிகள் போன்ற சொற்களை பற்றி அறியாமல் இருப்பின் முதலில் இந்த முக்கியச் சொற்களைப் பற்றிப் படிக்கவும். உங்கள் தனியுரிமைக்கு Google முக்கியத்துவம் வழங்குகிறது. அதனால் நீங்கள் Google க்கு புதியவராயினும் அல்லது நெடுங்காலப் பயனாளராயினும், எங்கள் செயல்பாடுகளை அறிவதற்கு நேரம் ஒதுக்கவும் – மேலும் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்க.
நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்
எங்களின் எல்லா பயனாளர்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்க தகவலைச் சேகரிக்கிறோம் – நீங்கள் பேசும் மொழி போன்ற அடிப்படை விஷயங்கள் முதல் நீங்கள் எவ்வகை விளம்பரங்களை அதிகமாகப் பயன்படுத்துவீர்கள், இணையத்தில் உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் யார், அல்லது எந்த YouTube வீடியோக்களை விரும்புவீர்கள் என்பது போன்ற கடினமான விஷயங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறோம்.
பின்வரும் வழிகளில் தகவலைச் சேகரிக்கிறோம்:
-
நீங்கள் எங்களிடம் வழங்கும் தகவல். எடுத்துக்காட்டாக, எங்களின் பல சேவைகளுக்கு, நீங்கள் Google கணக்கில் பதிவு பெறுவது அவசியமானதாகும். பதிவு பெறும் போது, உங்கள் கணக்கில் சேமிக்க, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது கிரெடிட் கார்டு போன்ற தனிப்பட்ட தகவலைக் கேட்போம். நாங்கள் வழங்கும் பகிர்வு அம்சங்களின் முழு பலனைப் பெற விரும்பினால், உங்கள் பெயர் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட Google சுயவிவரம், பொதுவில் தெரியும்படி உருவாக்குமாறு கூறுவோம்.
-
எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் நாங்கள் பெறும் தகவல். நீங்கள் பயன்படுத்தும் சேவைகள் பற்றிய தகவலையும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பவை பற்றிய தகவலையும் சேகரிப்போம், உதாரணத்திற்கு, YouTube இல் வீடியோவைப் பார்க்கும் போது, எங்கள் விளம்பரச் சேவைகளைப் பயன்படுத்தும் இணையதளத்துக்குச் செல்லும் போது அல்லது எங்கள் விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கத்தைப் பார்க்கும் போது மற்றும் ஊடாடும் போது கிடைக்கும் தகவலைச் சேகரிப்போம். இந்தத் தகவலில் அடங்குபவை:
-
சாதனம் சார்ந்த தகவலைச் சேகரிப்போம் (வன்பொருள் வடிவம், இயக்க முறைமைப் பதிப்பு, தனிநபர் சாதன அடையாளங்காட்டிகள் மற்றும் ஃபோன் எண் உள்ளிட்ட மொபைல் நெட்வொர்க் தகவல்). Google கணக்குடன் உங்கள் சாதனத்தின் அடையாளங்காட்டிகளை அல்லது ஃபோன் எண்ணை Google இணைக்கும்.
-
பதிவுத் தகவல்
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது அல்லது Google வழங்கிய உள்ளடக்கத்தை நீங்கள் பார்வையிடும்போது, சேவையக பதிவுகளில் சில தகவலைத் தானாகவே சேகரிப்போம். இதில் அடங்குபவை:
- உங்கள் தேடல் வினவல்களைப் போன்று எங்கள் சேவையை எப்படி பயன்படுத்தினீர்கள் என்பதன் விவரங்கள்.
- தொலைபேசி எண், அழைக்கும்-தரப்பினர் எண், அனுப்பும் எண்கள், அழைப்புகளின் நேரமும் தேதியும், அழைப்புகளின் காலவரை, SMS அனுப்பும் தகவல் மற்றும் அழைப்புகளின் வகைகள் போன்ற தொலைபேசிப் பதிவுத் தகவல்.
- இணைய நெறிமுறை முகவரி.
- சிதைவுகள், கணினியின் செயல்பாடு, வன்பொருள் அமைப்புகள், உலாவி வகை, உலாவி மொழி, உங்கள் கோரிக்கையின் தேதியும் நேரமும் மற்றும் பரிந்துரைக்கப்படும் URL போன்ற சாதன நிகழ்வுத் தகவல்.
- உங்கள் உலாவி அல்லது Google கணக்கைத் தனித்து அடையாளங்காணும் குக்கீகள்.
-
இருப்பிடத் தகவல்
நீங்கள் Google சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் அசல் இருப்பிடம் பற்றிய தகவலைச் சேகரித்துச் செயலாக்குவோம். இருப்பிடத்தைக் கண்டறிய, IP முகவரி, GPS மற்றும் பிற உணர்விகள் உட்பட பலவிதமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோம், அவை அருகிலுள்ள சாதனங்களைக் குறித்த, அதாவது வைஃபை அணுகும் இடங்கள் மற்றும் செல்லுலார் டவர்கள் போன்ற தகவலை Googleக்கு வழங்கலாம்.
-
தனித்துவமான பயன்பாட்டின் எண்கள்
சில சேவைகள் தனிப்பட்ட பயன்பாட்டின் எண்ணையும் உள்ளடக்கும். அந்த சேவையை நீங்கள் நிறுவும்போதோ அல்லது நிறுவல் நீக்கம் செய்யும்போதோ அல்லது தன்னியக்கப் புதுப்பிப்புகளுக்காக தொடர்ந்து சேவையகங்களை தொடர்புகொள்ளும்போதோ, உங்கள் நிறுவலைப் பற்றிய எண் மற்றும் தகவல் (எடுத்துக்காட்டாக, இயக்க முறைமை வகை மற்றும் பயன்பாட்டுப் பதிப்பின் எண்) Google க்கு அனுப்பப்படும்.
-
அக சேமிப்பகம்
உலாவி வலை சேமிப்பகம் (HTML 5 உள்பட) மற்றும் பயன்பாட்டுத் தரவு தேக்ககங்கள் போன்ற இயக்கமுறைகளைப் பயன்படுத்தி உங்களின் சாதனத்தில் தகவலைச் (தனிப்பட்டத் தகவல் உள்பட) சேகரித்து சேமிப்போம்.
-
குக்கீகள் மற்றும் அதைப் போன்ற தொழில்நுட்பங்கள்
Google சேவையைப் பார்வையிடும் போது, தகவலைச் சேகரிக்கவும் சேமிக்கவும் பலவிதத் தொழில்நுட்பங்களை நாங்களும் எங்கள் கூட்டாளர்களும் பயன்படுத்துகிறோம், மேலும் இதில் உங்கள் உலாவி அல்லது சாதனத்தை அடையாளங்காண, குக்கீகள் அல்லது அதைப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதும் அடங்கும். விளம்பரச் சேவைகள் அல்லது பிற தளங்களில் தோன்றக்கூடிய Google அம்சங்கள் போன்ற, எங்கள் கூட்டாளர்களுக்கு வழங்கும் சேவைகளைப் பயன்படுத்தும் போது அவை தொடர்பான தகவலைச் சேகரிக்கவும் சேமிக்கவும் இந்தத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோம். வணிக நிறுவனங்களும் தள உரிமையாளர்களும், தங்கள் இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான டிராஃபிக்கைப் பகுப்பாய்வு செய்ய, எங்கள் Google Analytics தயாரிப்பு உதவுகிறது. DoubleClick குக்கீயைப் பயன்படுத்துவோர், எங்கள் விளம்பரப்படுத்தல் சேவைகளுடன் ஒன்றிணைத்துப் பயன்படுத்தப்படும் போது, Google Analytics தகவல்கள், Google Analytics வாடிக்கையாளர் அல்லது Google மூலமாக, Google தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பல தளங்களைப் பார்வையிடுவது தொடர்பான தகவலுடன் இணைக்கப்படும்.
-
கூட்டாளர்களிடமிருந்து உங்களைப் பற்றி நாங்கள் பெறும் தகவலுடன் சேர்த்து, Google இல் நீங்கள் உள்நுழைந்திருக்கும் போது கூடுதலாக நாங்கள் சேகரிக்கும் தகவலானது, உங்கள் Google கணக்குடன் தொடர்புபடுத்தப்படலாம். அந்தத் தகவல் உங்கள் Google கணக்குடன் தொடர்புபடுத்தப்பட்டதும், தனிப்பட்ட தகவலாக அதைக் கருதுவோம். உங்கள் Google கணக்குடன் தொடர்புபடுத்தப்பட்ட தகவலை எவ்வாறு அணுகுவது, நிர்வகிப்பது அல்லது நீக்குவது என்பது குறித்து மேலும் அறிய, இந்தக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ள ஒளிவுமறைவின்மையும் விருப்பமும் என்ற பிரிவைப் பார்க்கவும்.
சேகரிக்கும் தகவலை நாங்கள் எப்படி பயன்படுத்துகிறோம்
எங்கள் சேவைகள் எல்லாவற்றிலும் சேகரிக்கும் தகவலை, அந்தச் சேவைகளுக்கு வழங்கவும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் புதியவற்றை உருவாக்கவும் மேலும் Google ஐயும் பயனர்களையும் பாதுகாக்கவும் பயன்படுத்துகிறோம். மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகள் மற்றும் விளம்பரங்களை உங்களுக்கு வழங்கும் பொருட்டு, இந்தத் தகவலை, தொகுக்கப்பட்ட உள்ளடக்கத்தை வழங்கவும் பயன்படுத்துகிறோம்.
Google கணக்குத் தேவைப்படக்கூடிய நாங்கள் வழங்கும் எல்லா சேவைகளிலும் உங்கள் Google சுயவிவரத்திற்காக நீங்கள் வழங்கிய பெயரைப் பயன்படுத்துவோம். கூடுதலாக Google கணக்குடன் இணங்கும் பழைய பெயர்களை மாற்றுவோம், அப்போதுதான் எங்களின் எல்லா சேவைகளிலும் ஒரே மாதிரி தெடர்ந்து குறிப்பிடப்படுவீர்கள். பிற பயனர்கள் ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலை வைத்திருந்தாலோ அல்லது உங்களை அடையாளமிடும் பிற தகவல் இருந்தாலோ, பெயர் மற்றும் புகைப்படம் போன்ற உங்கள் Google சுயவிவரத் தகவலைப் பொதுவில் தெரியும்படி காண்பிப்போம்.
உங்களிடம் Google கணக்கு இருந்தால், Google இல் அல்லது உங்கள் Google கணக்குடன் இணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் பயன்பாடுகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களுடன் (அதாவது +1கள், நீங்கள் எழுதும் மதிப்புரைகள் மற்றும் நீங்கள் இடுகையிடும் கருத்துகள் ஆகியவற்றுடன்) உங்கள் சுயவிவரப் பெயர், சுயவிவரப் புகைப்படம் ஆகியவற்றை எங்கள் சேவைகளில் நாங்கள் காண்பிக்கலாம், மேலும் விளம்பரங்கள் மற்றும் பிற தொழில்ரீதியிலான சூழல்களிளும் காண்பிக்கலாம். உங்கள் Google கணக்கில் பகிர்தல் அல்லது தெரிவுநிலை அமைப்புகளை வரம்பிடுவது தொடர்பான உங்கள் தேர்விற்கு நாங்கள் மதிப்பளிப்போம்.
Googleஐத் தொடர்புகொள்ளும்போது நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவியாக உங்களுடனான பரிமாற்றத்தை பதிவில் வைப்போம். எங்கள் சேவைகளில் வரும் மாற்றங்கள் அல்லது மேம்படுத்தல்கள் போன்றவற்றைப் பற்றி நீங்கள் அறிவதற்காக உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவோம்.
உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் எங்கள் சேவைகளின் தரத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தவும், குக்கீகள் மற்றும் பிக்சல் குறிச்சொற்கள் போன்ற பிற தொழில்நுட்பங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்துகிறோம். எங்கள் சொந்த சேவைகளில் இதைச் செய்வதற்கு நாங்கள் பயன்படுத்தும் பல தயாரிப்புகளில் ஒன்று Google Analytics ஆகும். எடுத்துக்காட்டாக, உங்கள் மொழி விருப்பங்களைச் சேமிப்பதன் மூலம் நீங்கள் தேர்வுசெய்யும் மொழியில் எங்கள் சேவைகளை எங்களால் வழங்க முடியும். உங்களுக்கென உருவாக்கப்பட்ட விளம்பரங்களைக் காண்பிக்கும் போது இனம், மதம், பாலினம் தொடர்பான சார்நிலை அல்லது உடல்நலம் போன்ற முக்கிய வகைகளுடன் குக்கீகள் அல்லது அது போன்ற தொழில்நுட்பங்கள் வழங்கும் அடையாளங்காட்டியைத் தொடர்புபடுத்த மாட்டோம்.
தனிப்பயனாக்கப்பட்ட தேடல் முடிவுகள், தொகுக்கப்பட்ட விளம்பரங்கள் மற்றும் ஸ்பேமையும் தீம்பொருளையும் கண்டறிதல் போன்ற தனிப்பட்டதுடன் தொடர்புடைய தயாரிப்பு அம்சங்களை உங்களுக்கு வழங்க எங்கள் தானியங்கு அமைப்புகளானது உங்கள் உள்ளடக்கத்தை (மின்னஞ்சல்கள் உள்பட) ஆய்வு செய்யும்.
தனிப்பட்ட தகவல் உட்பட, ஒரு Google சேவையிலிருந்து வரும் தனிப்பட்ட தகவலை பிற Google சேவைகளிலிருந்து வரும் தகவலோடு நாங்கள் ஒன்றிணைக்கக்கூடும் – எடுத்துக்காட்டாக, உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் நீங்கள் விரும்புபவற்றைப் பகிர்வதை எளிதாக்குவதற்காக இப்படிச் செய்வோம்.. Google சேவைகளையும் Google வழங்கும் விளம்பரங்களையும் மேம்படுத்தும் பொருட்டு, உங்கள் கணக்கு அமைப்புகளின் அடிப்படையில், பிற தளங்களிலும் பயன்பாடுகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடு உங்கள் தனிப்பட்ட தகவலுடன் தொடர்புப்படுத்தப்படலாம்.
இந்த தனியுரிமைக் கொள்கையில் அமைக்கப்பட்டிருப்பதை தவிர்த்து எந்த நோக்கத்திற்காகவும் உங்கள் தகவலைப் பயன்படுத்தும் முன்னர் உங்கள் அனுமதியைக் கேட்போம்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், எங்கள் சேவையகங்களில் தனிப்பட்ட தகவலை Google செயலாக்குகிறது. நீங்கள் இருக்கும் இடத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும் இடத்தில் உள்ள சேவையகத்தில் உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் செயலாக்கக்கூடும்.
ஒளிவுமறைவின்மையும் விருப்பமும்
ஒவ்வொருவரின் தனிப்பட்ட அக்கரைகளும் வேறுபட்டு இருக்கும். நாங்கள் சேகரிக்கும் தகவலைப் பற்றி உங்களுக்குத் தெளிவுப்படுத்துவதே எங்களின் நோக்கம், அதனால் அவை பயன்படுத்தப்படும் விதம் குறித்து உகந்த விருப்பங்களை நீங்கள் தேர்வுசெய்யலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் செய்யக்கூடியவை:
- Google சேவைகளைப் பயன்படுத்தும் போது, எந்த வகையான தரவை (எடுத்துக்காட்டாக, YouTube இல் பார்த்த வீடியோக்கள் அல்லது முந்தைய தேடல்கள்) உங்கள் கணக்கில் சேமிக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவுசெய்ய, உங்கள் Google செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளைச் சரிபார்த்து, புதுப்பிக்கவும். நீங்கள் கணக்கிலிருந்து வெளியேறியிருக்கும் போது எங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், குறிப்பிட்ட செயல்பாட்டை உங்கள் சாதனத்தில் குக்கீ அல்லது அது போன்ற தொழில்நுட்பத்தில் சேமிப்பதை நிர்வகிக்க இந்தக் கட்டுப்பாடுகளுக்கும் செல்லலாம்.
- Google டாஷ்போர்டைப் பயன்படுத்தி, உங்கள் Google கணக்கில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள சில தகவலை பரிசீலித்து கட்டுப்படுத்தலாம்.
- விளம்பர அமைப்புகளைப் பயன்படுத்தி, Google மற்றும் இணையம் முழுவதும் உங்களுக்குக் காட்டப்படும் Google விளம்பரங்கள் குறித்த விருப்பத்தேர்வுகளைப் (நீங்கள் ஆர்வம் கொண்டுள்ள வகைகள் போன்றவை) பார்க்கலாம், மாற்றலாம். அந்தப் பக்கத்திற்குச் சென்று, குறிப்பிட்ட Google விளம்பரப்படுத்தல் சேவைகளிலிருந்தும் விலகலாம்.
- உங்கள் Google கணக்குடன் தொடர்புடைய சுயவிவரம் எவ்வாறு பிறருக்கு தோன்ற வேண்டும் என்பதைச் சரிசெய்யலாம்.
- உங்கள் Google கணக்கு மூலமாக யாருடனெல்லாம் தகவலைப் பகிரலாம் என்பதைக் கட்டுப்படுத்தலாம்.
- உங்கள் Google கணக்குடன் எங்கள் பல சேவைகளின் தகவல்களை இணைத்து வைக்கலாம்.
- விளம்பரங்களில் தோன்றும் பரிந்துரைப்புகளில் உங்கள் சுயவிவரப் பெயர் மற்றும் சுயவிவரப் புகைப்படம் காட்ட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.
உங்கள் உலாவியை எங்கள் சேவைகளுடன் உள்ள குக்கீகள் உள்பட எல்லா குக்கீகளையும் தடுக்கும் வகையிலும் அல்லது எங்களால் குக்கீ அமைக்கப்படுவதைத் தெரியப்படுத்தும் வகையிலும் அமைக்கலாம். எனினும், உங்கள் குக்கீகள் முடக்கப்பட்டிருந்தால் எங்களின் பல சேவைகள் சரியாக இயங்காது என்பதை நினைவில் கொள்க. எடுத்துக்காட்டாக, உங்கள் மொழி விருப்பத்தேர்வுகளை நாங்கள் மறக்கலாம்.
நீங்கள் பகிரும் தகவல்
எங்கள் சேவைகளில் பல உங்கள் தகவலைப் பிறருடன் பகிர்வதற்கு வழி செய்கிறது. நீங்கள் பொதுவான முறையில் பகிரும் எந்தத் தகவலும் Google உள்பட தேடு பொறிகளால் அட்டவணைப்படுத்தப்படலாம் என்பதை நினைவில்கொள்க. உங்கள் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கும் அகற்றுவதற்கும் வெவ்வேறான விருப்பங்களை எங்கள் சேவைகள் வழங்குகின்றன.
உங்கள் தனிப்பட்ட தகவலை அணுகுவது மற்றும் புதுப்பிப்பது
எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போதெல்லாம், உங்கள் தனிப்பட்ட தகவலை அணுகுவதற்கான வழிமுறைகளையும் தர விரும்புகிறோம். அந்தத் தகவல் தவறாக இருந்தால், அதை விரைவாக புதுப்பிக்க மற்றும் நீக்க நாங்கள் முயற்சிப்போம் – சட்டப்படியான வணிகம் அல்லது வணிக நோக்கங்களுக்காக நாங்கள் அந்தத் தகவலை வைத்திருந்தால் தவிர.
பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எதிர்பாராத அல்லது தீங்கான தாக்குதலில் இருந்து தகவலைப் பாதுகாக்கும் விதமாக எங்கள் சேவைகளை பராமரிக்க முயற்சிக்கிறோம். இதனால், எங்கள் சேவைகளில் உங்கள் தகவலை நீக்கிய பின்பும், எங்கள் செயலிலுள்ள சேவையகங்களில் தேங்கிய நகல்களை உடனடியாக நீக்க முடியாமல் போகலாம் மேலும் காப்புப் பிரதிக் கணினியிலிருந்து தகவலை அகற்ற முடியாமல் போகலாம்.
நாங்கள் பகிரும் தகவல்
பின்வரும் சூழ்நிலைகளில் ஒன்று பொருந்தும் வரையில் Google க்கு வெளியேயுள்ள நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களுடன் தனிப்பட்ட தகவலை பகிரமாட்டோம்:
-
உங்கள் ஒப்புதலுடன்
உங்கள் ஒப்புதல் எங்களிடம் இருப்பின், Google க்கு வெளியேயுள்ள நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்களுடன் தனிப்பட்ட தகவலை பகிர்வோம். உணர்ச்சியுடைய தனிப்பட்டத் தகவலைப் பகிர்வதற்கான உங்களின் ஒப்புதலை நாங்கள் பெற வேண்டும்.
-
கள நிர்வாகிகளுடன்
உங்கள் Google கணக்கு களத்தின் நிர்வாகியால் (எடுத்துக்காட்டாக, G Suite பயனர்களுக்காக) உங்களுக்காக நிர்வகிக்கப்பட்டால், உங்கள் அமைப்பிற்குப் பயனர் ஆதரவை வழங்கும் களத்தின் நிர்வாகி மற்றும் மறுவிற்பணையாளர்கள், உங்கள் Google கணக்கின் தகவலுக்கான அணுகலைக் (உங்கள் மின்னஞ்சல் மற்றும் பிற தரவு உட்பட) கொண்டிருப்பார்கள். உங்கள் கள நிர்வாகி கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்:
- நீங்கள் நிறுவும் பயன்பாடுகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் போன்ற உங்கள் கணக்கு தொடர்புடைய புள்ளிவிவரங்களைக் காணலாம்.
- உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றலாம்.
- உங்கள் கணக்கின் அணுகலை இடைநீக்கலாம் அல்லது நீக்கலாம்.
- உங்கள் கணக்கின் ஒரு பகுதியாக சேமிக்கப்பட்ட தகவலை அணுகலாம் அல்லது தக்கவைத்துக் கொள்ளலாம்.
- பொருந்தக்கூடிய சட்டம், கட்டுப்பாடு, சட்டச் செயலாக்கம் அல்லது பின்பற்ற வேண்டிய அரசுக் கோரிக்கை ஆகியவற்றுடன் இணங்கும் பொருட்டு உங்கள் கணக்குத் தகவலைப் பெறலாம்.
- தகவல் அல்லது தனியுரிமை அமைப்புகளைத் திருத்துதல் அல்லது நீக்குவதற்கான உங்கள் திறனைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் தகவலுக்கு உங்கள் கள நிர்வாகியின் தனியுரிமை கொள்கையைப் பார்க்கவும்.
-
வெளிப்புற செயலாக்கத்திற்கு
எங்கள் தனியுரிமைக் கொள்கை, பிற ரகசியமானவை, பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுடன் இணக்கமாகவும் எங்கள் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் எங்களது துணைநிறுவனங்கள் அல்லது பிற நம்பகமான வணிகங்கள் அல்லது நபர்களுக்கு தனிப்பட்ட தகவலை முறையாகச் செயல்படுத்தும் பொருட்டு வழங்குகிறோம்.
-
சட்டபூர்வ காரணங்களுக்கு
தகவலின் அணுகல், பயன், பாதுகாத்தல் அல்லது வெளியிடுதல் ஆகியவை நல்லெண்ண நம்பிக்கையின் அடிப்படையில், பின்வரும் காரணங்களுக்காகத் தேவைப்பட்டால் தனிப்பட்ட தகவலை Google க்கு வெளியே உள்ள நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்களுடன் பகிர்வோம்:
- பொருந்தும் சட்டம், கட்டுப்பாடு, சட்டச் செயலாக்கம் அல்லது பின்பற்ற வேண்டிய அரசுக் கோரிக்கை ஆகியவற்றுடன் இணங்குதல்.
- சாத்தியக்கூறு உள்ள மீறுதல்களை விசாரிப்பது உள்பட, பொருந்தும் சேவை விதிமுறைகளை செயலாக்குதல்.
- மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்ப சிக்கல்களைக் கண்டறிதல், தடுத்தல் அல்லது அவற்றைத் தெரியப்படுத்தல்.
- சட்டத்திற்கு தேவைப்படும்படி அல்லது அனுமதிக்கப்பட்டபடி Google-ன் தயாரிப்பு சொத்துக்கள் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி எங்கள் பயனாளர்கள் அல்லது பொதுமக்கள் ஆகியோரின் உரிமை மீறல்களை பாதுகாத்தல்.
தனிப்பட்ட முறையில் அடையாளங்காண முடியாத தகவலை பொதுவில் மற்றும் வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள் அல்லது தொடர்புடைய தளங்கள் போன்ற எங்கள் கூட்டாளர்களுடன் பகிர நேரிடலாம். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளின் பொதுவான பயனைப் பற்றிய போக்குகளைக் காண்பிப்பதற்காக தகவலைப் பொதுவில் பகிர்வோம்.
இணைத்தல், கையகப்படுத்தல் அல்லது சொத்து விற்பனை போன்றவற்றில் Google ஈடுபட்டால், தனிப்பட்ட தகவலின் நம்பகத்தன்மையைத் தொடர்ந்து உத்தரவாதமளிப்போம், தனிப்பட்டத் தகவல் பரிமாற்றுவதற்கு முன்பு அல்லது வேறு தனியுரிமைக் கொள்கைக்கு பொருளாகும் போது பாதித்தப் பயனர்களுக்கு அறிவிப்போம்.
தகவல் பாதுகாப்பு
அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது அங்கீகரிக்கப்படாத மாற்றம், வெளியிடுதல் அல்லது நாங்கள் கொண்டிருக்கும் தகவலை அழித்தல் ஆகியவைகளில் இருந்து Google மற்றும் எங்களது பயனர்களைப் பாதுகாக்க கடுமையாக உழைப்போம். குறிப்பாக:
- எங்கள் சேவைகளில் பலவற்றை SSL பயன்படுத்தி முறைமையாக்குவோம்.
- உங்கள் Google கணக்கை அணுகும்போதும், Google Chrome இல் பாதுகாப்பு உலாவல் அம்சத்திலும், இரு படி சரிபார்த்தலை வழங்குகிறோம்.
- சேகரிக்கும் தகவல், சேமித்தல் மற்றும் பயிற்சிகளைச் செயல்படுத்தல், நிஜ பாதுகாப்பு அளவிடுகள், கணினிகளின் அங்கீகரிக்கப்படாத அணுகலின் பாதுகாப்பிற்காகத் மதிப்பாய்வு செய்வோம்.
- தனிநபர் தகவலை கையாளும் வழிமுறைகளை அந்த தகவலை எங்களுக்காகச் செயல்படுத்த விரும்பும் Google பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் முகவர்கள், மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடுமையான ரகசிய கேட்பாட்டிற்கு உட்பட்டவர்கள் மேலும் இந்த கடமைகளைச் செய்ய மறுத்தால் பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.
எப்போது இந்தத் தனியுரிமைக் கொள்கைப் பொருந்தும்
எங்கள் தனியுரிமைக் கொள்கையானது Google LLC மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்படும் எல்லா சேவைகளுக்கும் பொருந்தும், இதில் Youtube, Android சாதனங்களில் Google வழங்கும் சேவைகளும், பிற தளங்களில் (எங்கள் விளம்பரச் சேவைகள் போன்றவை) வழங்கும் சேவைகளும் அடங்கும், ஆனால் இந்தத் தனியுரிமைக் கொள்கை அல்லாது, தனிப்பட்ட தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்ட சேவைகளுக்கு இது பொருந்தாது.
பிற நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், தேடல் முடிவுகளில் உங்களுக்குக் காண்பிக்கப்படும் தயாரிப்புகள் அல்லது தளங்கள், Google சேவைகளில் அடங்கியுள்ள தளங்கள் அல்லது எங்கள் சேவைகளிலிருந்து இணைக்கப்பட்ட பிற தளங்கள் போன்றவற்றிற்கான சேவைகளுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கைப் பொருந்தாது. எங்கள் சேவைகளை விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், குக்கீகளைப் பயன்படுத்துபவர்கள், பிக்சல் குறிச்சொற்கள் மேலும் தொடர்புடைய விளம்பரங்களை வழங்க பிற தொழில்நுட்பங்கள் வழங்கக்கூடிய பிற நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் தகவல் நடத்தை முறைகளை எங்கள் தனியுரிமைக் கொள்கை ஏற்காது.
ஒழுங்குமுறை அதிகாரிகளுடனான இணக்கத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு
எங்கள் தனியுரிமைக் கொள்கையுடன் நாங்கள் இணங்கிச் செயல்படுவதைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறோம். EU-US மற்றும் Swiss-US Privacy Shield Frameworks உட்பட, பல சுய ஒழுங்குமுறை கட்டமைப்புகளுடனும் இணங்கிச் செயல்படுகிறோம். எழுத்துப்பூர்வமாக முறையான புகார்களைப் பெறும் போது, சிக்கலைத் தீர்ப்பதற்காகப் புகார் அளித்தவரைத் தொடர்புகொள்வோம். எங்கள் பயனர்களுடன் நேரடியாகத் தீர்க்க முடியாத தனிப்பட்ட தரவின் இடமாற்றம் தொடர்பான புகார்களைத் தீர்ப்பதற்கு, அகத் தரவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளடங்கிய உரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் நாங்கள் வேலை செய்கிறோம்.
மாற்றங்கள்
எங்கள் தனியுரிமைக் கொள்கை காலத்தைப் பொருத்து மாறலாம். இந்த தனியுரிமைக் கொள்கையின் கீழ், உங்களின் தெளிவான ஒப்புதல் இல்லாமல் உங்கள் உரிமைகளை குறைக்கமாட்டோம். தனியுரிமைக் கொள்கையின் மாற்றங்களை இந்தப் பக்கத்தில் இடுகையிடுவோம், மேலும் அந்த மாற்றங்கள் முக்கியமானதாக இருப்பின் மிகவும் முக்கியமான அறிவிப்பை (சில சேவைகளில் தனியுரிமை கொள்கையின் மாற்றங்கள் குறித்த மின்னஞ்சல் அறிவிப்பு உள்ளிட்டவை) வழங்குவோம். உங்கள் மதிப்பாய்விற்காக இந்த தனியுரிமைக் கொள்கையின் முந்தைய பதிப்புகளைப் காப்பகத்தில் வைத்திருப்போம்.
குறிப்பிட்ட தயாரிப்பு நடைமுறைகள்
நீங்கள் பயன்படுத்த இருக்கும் சில Google தயாரிப்புகள், சேவைகள் குறித்த குறிப்பிட்ட தனியுரிமை நடைமுறைகளை பின்வரும் அறிவிப்புகள் விளக்குகின்றன:
- Chrome மற்றும் Chrome OS
- Play புத்தகங்கள்
- Payments
- Fiber
- Project Fi
- G Suite for Education
- YouTube கிட்ஸ்
- Family Link மூலம் நிர்வகிக்கப்படும் Google கணக்குகள்
எங்களின் மிகவும் பிரபலமான சில சேவைகளைப் பற்றி மேலும் அறிய, Google தயாரிப்பின் தனியுரிமைக்கான வழிகாட்டியைப் பார்க்கவும்.
தனியுரிமை மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய பிற பயனுள்ள உள்ளடக்கம்
Google இன் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் பக்கங்கள் என்பதில் தனியுரிமை மற்றும் பாதுகாப்புத் தொடர்பான உள்ளடக்கம் பற்றிய கூடுதல் தகவலை அறியலாம், அவற்றில் உள்ளடங்குவன:
- பின்வரும் விஷயங்களைச் சேர்த்து, பிற கூடுதல் தகவல் அடங்கிய, எங்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றிய தகவல்
- Google எப்படிக் குக்கீகளைப் பயன்படுத்துகிறது.
- விளம்பரத்திற்காக நாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்.
- நாங்கள் முகங்கள் போன்ற வகை அறிதல்களை அடையாளங்காணும் விதம்.
- எங்கள் விளம்பரங்கள், பகுப்பாய்வுகள் மற்றும் சமூகத் தயாரிப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் இணையதளங்களை நீங்கள் பார்வையிடும்போது, Google உடன் பகிரப்படும் தரவைப் பற்றி விவரிக்கும் பக்கம்.
- தனியுரிமை சரிபார்ப்புக் கருவி உங்கள் முக்கிய தனியுரிமை அமைப்புகளைச் சரிபார்ப்பதை எளிதாக்குகிறது.
- ஆன்லைனில் எப்படிப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பது என்பது குறித்தத் தகவலை வழங்கும் Google இன் பாதுகாப்பு மையம்.