தரவுப் பரிமாற்றங்களுக்கான சட்டப்பூர்வக் கட்டமைப்புகள்
பயனுள்ள 16 செப்டம்பர், 2024 | காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகள்
உலகம் முழுவதும் நாங்கள் சேவையகங்களைப் பராமரித்து வருகிறோம். நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே அமைந்துள்ள சேவையகங்களில் உங்கள் தகவல்களை நாங்கள் செயலாக்கலாம். தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் நாடுகளுக்கிடையே வேறுபடும். சில நாடுகளின் சட்டங்கள் மற்றவற்றை விட அதிகப் பாதுகாப்பை வழங்கும். உங்கள் தகவல் எங்கு செயல்படுத்தப்பட்டாலும், தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள அதே பாதுகாப்புகளை நாங்கள் பயன்படுத்துவோம். கீழே விவரிக்கப்பட்டுள்ள கட்டமைப்புகள் போன்ற, தரவுப் பரிமாற்றம் தொடர்பான சில சட்டப்பூர்வக் கட்டமைப்புகளுடனும் இணங்குவோம்.
அவசியத் தீர்மானங்கள்
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதிக்கு (EEA) வெளியே இருக்கும் சில நாடுகள் போதுமான வகையில் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பதாக ஐரோப்பிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது ஐரோப்பிய ஒன்றியம், நார்வே, லீக்டென்ஸ்டெய்ன், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து அந்த நாடுகளுக்குத் தரவைப் பரிமாற்றலாம். யுனைடெட் கிங்டம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இதுபோன்ற அவசிய வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. நாங்கள் கீழ்கண்ட அவசிய வழிமுறைகளைச் சார்ந்திருக்கிறோம்:
- ஐரோப்பிய கமிஷனின் அவசியத் தீர்மானங்கள்
- யுனைடெட் கிங்டமின் அவசியத் தீர்மானங்கள்
- சுவிட்சர்லாந்தின் அவசியத் தீர்மானங்கள்
EU-U.S. (ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்கா) மற்றும் Swiss-U.S. (சுவிஸ்-அமெரிக்கா) Data Privacy Frameworks (தரவுத் தனியுரிமைக் கட்டமைப்புகள்)
எங்கள் Data Privacy Framework (தரவுத் தனியுரிமைக் கட்டமைப்பு) சான்றிதழில் விவரிக்கப்பட்டுள்ளபடி, முறையே ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA), சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளிலிருந்து தனிப்பட்ட தகவலைச் சேகரித்தல், பயன்படுத்துதல், தக்கவைத்தல் ஆகியவை தொடர்பாக அமெரிக்க வணிகத்துறை வகுத்துள்ள EU-U.S. Data Privacy Frameworks (DPF) (ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்கா தரவுத் தனியுரிமைக் கட்டமைப்புகள்), Swiss-U.S. Data Privacy Frameworks (DPF) (சுவிஸ்-அமெரிக்கா தரவுத் தனியுரிமைக் கட்டமைப்புகள்), EU-U.S. DPFக்கான யுனைடெட் கிங்டம் நீட்டிப்பு ஆகியவற்றுக்கு இணங்கும் வகையில் செயல்படுகிறோம். DPF (தரவுத் தனியுரிமைக் கட்டமைப்பு) கோட்பாடுகளுடன் இணங்குவதாக Google LLC (மற்றும் அதற்கு முற்றிலும் சொந்தமான அமெரிக்கத் துணை நிறுவனங்கள் அனைத்தும், வெளிப்படையாக விலக்கப்பட்டாலே தவிர) சான்றளித்துள்ளது. எங்கள் தனியுரிமைக் கொள்கையில் உள்ள "உங்கள் தகவலைப் பகிர்தல்" பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி எங்கள் சார்பாகப் பிறர் செயல்படுத்துவதற்காக, தரவை மூன்றாம் தரப்பினருக்குப் பரிமாற்றுவதற்கான கோட்பாட்டின் கீழ், மூன்றாம் தரப்பினருடன் பகிரும் எந்தத் தனிப்பட்ட தகவலுக்கும் Google தொடர்ந்து பொறுப்பேற்கும். DPF (தரவுத் தனியுரிமைக் கட்டமைப்பு) குறித்து மேலும் அறிவதற்கும் Googleளின் சான்றளிப்பைப் பார்ப்பதற்கும் DPF இணையதளத்திற்குச் செல்லவும்.
DPF (தரவுத் தனியுரிமைக் கட்டமைப்பு) சான்றளிப்பு தொடர்பான எங்கள் தனியுரிமை நடைமுறைகளைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளவும். அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷனின் விசாரணை மற்றும் அமலாக்க அதிகாரங்களுக்கு Google உட்பட்டதாகும். உங்கள் உள்ளூர் தரவுப் பாதுகாப்பு அதிகாரியிடமும் புகாரளிக்கலாம். சிக்கலைத் தீர்க்க, அவர்களுடன் இணைந்து செயல்படுவோம். சில சூழல்களில், DPF கோட்பாடுகளுக்கான இணைப்பு Iல் விவரிக்கப்பட்டுள்ளபடி, பிற முறைகளைப் பயன்படுத்தித் தீர்க்க முடியாத புகார்களைத் தீர்க்கும் வகையில் சமாதானப் பேச்சைத் தொடங்குவதற்கான உரிமையை DPF வழங்குகிறது.
வழக்கமான ஒப்பந்தக் கூறுகள்
வழக்கமான ஒப்பந்தக் கூறுகள் (SCCகள்) என்பவை தரப்பினருக்கிடையேயான எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகள் ஆகும். பொருத்தமான தரவுப் பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதன் மூலம் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியிலிருந்து (EEA) மூன்றாம் நாடுகளுக்குத் தரவைப் பரிமாற்றுவதற்குரிய அடிப்படையாகத் தரப்பினர்கள் இவற்றைப் பயன்படுத்தலாம். SCCகளுக்கு ஐரோப்பிய கமிஷன் அனுமதியளித்துள்ளது. SCCகளைப் பயன்படுத்தும் தரப்பினர் அவற்றைத் திருத்த முடியாது (ஐரோப்பிய கமிஷனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட SCCகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே பார்க்கலாம்). யுனைடெட் கிங்டம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு வெளியே தரவைப் பரிமாற்றுவதற்கும் இந்த ஒப்பந்தக் கூறுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்திலும் ஓர் அவசியத் தீர்மானத்தின் கீழ் அவை வராத சூழல்களிலும் தரவுப் பரிமாற்றங்களுக்கு நாங்கள் SCCகளைச் சார்ந்திருக்கிறோம். SCCகளின் நகலைப் பெற விரும்பினால் நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.
Google Workspace, Google Cloud Platform, Google Ads, பிற விளம்பரங்கள், அளவீட்டுத் தயாரிப்புகள் உட்பட, தனது பிசினஸ் சேவைகளின் வாடிக்கையாளர்கள் ஒப்பந்தங்களிலும் SCCகளை Google சேர்க்கக்கூடும். privacy.google.com/businesses என்ற பக்கத்தில் மேலும் அறிக.