இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.
"பிற Google சேவைகளிலிருந்து, தனிப்பட்டத் தகவல் உட்பட, தகவலுடன் கூடிய ஒரு சேவையிலிருந்து தனிப்பட்டத் தகவலை இணைத்தல்"
எடுத்துக்காட்டுகள்
- எடுத்துக்காட்டாக, உங்கள் Google கணக்கில் உள்நுழைந்து, Google இல் தேடும்போது, பொது இணையத்திலிருந்து, பக்கங்கள், படங்கள் மற்றும் உங்கள் நண்பர்களின் Google+ இடுகைகளுடன்கூடிய தேடல் முடிவுகளைப் பார்க்கலாம், மேலும் உங்களைத் தெரிந்தவர்கள் அல்லது Google+ இல் உங்களைப் பின்தொடர்பவர்கள், தங்களின் தேடல் முடிவுகளில் உங்கள் இடுகைகளையும், சுயவிவரத்தையும் பார்க்கலாம். நீங்கள் பயன்படுத்தும் Gmail அல்லது Google கேலெண்டர் போன்ற பிற Google தயாரிப்புகளில் இருக்கும் உங்கள் உள்ளடக்கத்திலிருந்தும் பொருத்தமான தகவலைக் கண்டறியலாம்.
- நீங்கள் இத்தாலி நாட்டிற்குச் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்து, Google இல் "புளோரன்ஸ்" என்று தேடினால், உங்கள் தேடல் முடிவுகளில் புளோரன்ஸ் குறித்த படங்கள் அல்லது உங்கள் நண்பர்களின் கட்டுரைகளைப் பார்க்கலாம். அவர்களின் பரிந்துரைகளை ஆராய்வதையும், அங்கு பார்க்கக்கூடிய இடங்களைக் குறித்த உரையாடலைத் தொடங்குவதையும் இந்தத் தேடல் முடிவுகள் எளிதாக்குகின்றன. மேலும் அறிக.
- நீங்கள் பிற Google தயாரிப்புகளில் சேமித்திருக்கக்கூடிய தரவை Google Now பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் தேடல்கள் இணைய வரலாற்றில் சேமிக்கப்பட்டிருந்தால், அந்தப் பழைய தேடல்களின் அடிப்படையில் விளையாட்டுகளின் ஸ்கோர்கள், விமானத்தின் நிலை, மேலும் பலவற்றின் அடிப்படையில் தகவல் கார்டுகளை Google Now காண்பிக்கலாம். உங்கள் இணைய வரலாற்றை நிர்வகிக்க, google.com/history/ ஐப் பார்வையிடவும். உங்கள் இணைய வரலாற்றை நீங்கள் நீக்கவோ, இடைநிறுத்தவோ செய்யலாம், மேலும் Google Now ஐத் தொடர்ந்து பயன்படுத்தலாம் ஆனால் தகவலின் குறிப்பட்ட சில வகைகள் காண்பிக்கப்படாது. மேலும் அறிக.
- உங்களிடம் வணிகச் சந்திப்பிற்கான Google கேலெண்டர் உள்ளீடு இருந்தால், Google Now ஆல் டிராஃபிக்கைச் சரிபார்த்து, சந்திப்பிற்குச் சரியான நேரத்திற்குச் செல்ல எப்போது கிளம்ப வேண்டும் என்பதைத் தெரிவிக்க முடியும்.