உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவுவதில் Google மகிழ்ச்சி கொள்கிறது. எங்கள் சேவைகளில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தி, உலகெங்கும் உள்ள இடங்களையும் உங்களுக்கு அருகிலுள்ள இடங்களையும் மாதிரிக்காட்சியாகப் பார்த்து உலாவ உதவும் நோக்கில் படத்தொகுப்பு வெளியிடப்படுகிறது. எங்கள் பயனர்களுக்குப் படத்தொகுப்பு பயனுள்ளதாக இருப்பதையும், அவர்கள் நிஜ உலகில் உலாவும் போது உணரும் அதே அனுபவத்தைப் படத்தொகுப்பில் வழங்கவும் மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

'வீதிக் காட்சிப்' படத்தொகுப்புக்கு Googleளோ அல்லது பிற தரப்பினரோ பங்களித்திருக்கலாம். ஒவ்வொரு படத்துடனும் வழங்கப்படும் பங்களிப்பாளர் பெயர் அல்லது ஐகான் மூலம் வேறுபாட்டை அறியலாம். வெளிப் பங்களிப்பாளர்களால் படமெடுக்கப்பட்டு Google Mapsஸில் வெளியிடப்பட்ட படத்தொகுப்பு பங்களிப்பாளருக்கே (அல்லது அவர்கள் நியமிக்கும் வாரிசுக்கு) சொந்தமாகும்.

இந்தப் பக்கத்தில் Google வழங்கும் Street View படங்களுக்கான கொள்கை விவரிக்கப்பட்டுள்ளது. பயனர் பங்களிக்கும் Street View படங்களுக்கு, Maps பயனர் பங்களித்த உள்ளடக்கக் கொள்கையைப் பார்க்கவும்.

Google வழங்கும் Street View
படக் கொள்கை

Street View படங்களைக் காணும் அனைவருக்கும் நல்லவிதமான, பயனளிக்கும் அனுபவம் கிடைக்கும்படி, Google வழங்கும் Street Viewக்கான இந்தக் கொள்கையை வடிவமைத்துள்ளோம். தகாத உள்ளடக்கத்தை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பற்றியும், Google Mapsஸில் Street View படங்களை வெளியிடுவதற்குப் பயன்படுத்தும் வரையறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் நேரங்களில் இந்தக் கொள்கையில் சில மாற்றங்களை நாங்கள் செய்யலாம் என்பதால் அவ்வப்போது இந்தப் பக்கத்திற்கு வருகை தந்து மாற்றங்கள் பற்றி அறிந்துகொள்ளவும்.

’வீதிக் காட்சிப்’ படத்தொகுப்பு நிகழ் நேரத்திற்குரியதல்ல

குறிப்பிட்ட இடத்தைக் கடந்து சென்ற நாளில் எங்கள் கேமராக்களில் பதிவானவற்றை மட்டுமே Street View படங்கள் காட்டும். அதற்குப் பின், அவற்றைச் செயல்படுத்த சில மாதங்கள் ஆகும். அதாவது நீங்கள் பார்க்கும் காட்சிகள் சில மாதங்களில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எடுக்கப்பட்டதாக இருக்கலாம். பல ஆண்டுகளாகப் படத்தொகுப்பை சேகரித்துள்ள சில இடங்களில், காலப்போக்கில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் எங்கள் கால இயந்திரச் செயல்பாட்டின் மூலம் பார்க்கலாம்.

மங்கலாக்குதல்

’வீதிக் காட்சிப்’ படத்தொகுப்பை Google Mapsஸில் வெளியிடும்போது தனிநபர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க Google பல நடவடிக்கைகளை எடுக்கிறது.

Street Viewவில் Google வழங்கும் படத்தொகுப்பில் அடையாளம் தெரியக்கூடிய முகங்களையும் நம்பர் பிளேட்களையும் மங்கலாக்க, முகம் மற்றும் வாகன எண்ணை மங்கலாக்கும் மிக நவீனத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் முகத்தையோ வாகன எண்ணையோ கூடுதலாக மங்கலாக்க விரும்பினாலோ உங்கள் வீடு, கார், உடல் ஆகியவற்றை முழுவதுமாக மங்கலாக்க விரும்பினாலோ "சிக்கலைப் பற்றிப் புகாரளி" கருவியின் மூலம் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

தகாத உள்ளடக்கம்

"சிக்கலைப் பற்றிப் புகாரளி" என்ற இணைப்பைப் பயன்படுத்தி, தகாத உள்ளடக்கம் குறித்து நீங்கள் புகாரளிக்கலாம். கலைநயமான, கல்வி தொடர்பான அல்லது ஆவணரீதியான மதிப்பு கொண்ட உள்ளடக்கத்தைத் தவிர, பின்வரும் வகைகளைத் தகாத உள்ளடக்கமாகவே கருதுகிறோம்.

அறிவுசார் உடைமை மீறல்கள்

அறிவுசார் உடைமை மீறல்கள்

பதிப்புரிமை உட்பட எவருடைய சட்டரீதியான உரிமைகளையும் மீறும் படங்களையோ உள்ளடக்கத்தையோ நாங்கள் அனுமதிப்பதில்லை. மேலும் தகவலைப் பெற அல்லது DMCA கோரிக்கையைத் தாக்கல் செய்ய பதிப்புரிமை நடைமுறைகளைப் பார்க்கவும்.

வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் என்று காட்டும் ஐகான்

வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்

வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை.

சட்டவிரோதமான, ஆபத்தான அல்லது வன்முறை அடங்கிய உள்ளடக்கம் என்று காட்டும் ஐகான்

சட்டவிரோதமான, ஆபத்தான அல்லது வன்முறை அடங்கிய உள்ளடக்கம்

இயல்பாகவே சட்டவிரோதமான, ஆபத்தான அல்லது சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கிற, கோரமான அல்லது அவசியமற்ற வன்முறை அடங்கிய உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை.

தொந்தரவும் அச்சுறுத்தல்களும் என்று காட்டும் ஐகான்

தொந்தரவும் அச்சுறுத்தல்களும்

பிறருக்கு உபத்திரவம் கொடுக்கவோ, பிறரைக் கொடுமைப்படுத்தவோ, தாக்கவோ, Street Viewவைப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை.

வெறுப்பைத் தூண்டும் பேச்சு

வெறுப்பைத் தூண்டும் பேச்சு

இனம், மதம், உடல்சார்ந்த இயலாமை, பாலினம், வயது, பிறந்த நாடு, ராணுவப் பணி அனுபவ நிலை, பாலியல் நாட்டம், பாலின அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக வன்முறையை ஊக்குவிக்கும் அல்லது அனுமதிக்கும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை.

பயங்கரவாத உள்ளடக்கம் என்று காட்டும் ஐகான்

பயங்கரவாத உள்ளடக்கம்

ஆள்சேர்ப்புகள் உட்பட எந்த நோக்கத்திற்காகவும் பயங்கரவாத இயக்கங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, வன்முறையைத் தூண்டுவது அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களைக் கொண்டாடுவது போன்றவை தொடர்பான உள்ளடக்கத்தையும் அகற்றிவிடுவோம்.

சிறாருக்குத் தீங்கு விளைவித்தல் என்று காட்டும் ஐகான்

சிறாருக்குத் தீங்கு விளைவித்தல்

சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது அவர்களுக்குக் கேடு விளைவிக்கும் உள்ளடக்கத்தை முற்றிலும் அனுமதிக்காத கொள்கையை Google கொண்டுள்ளது. இதில் சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்த படங்களும் சிறுவர்களைப் பாலியல் ரீதியாகக் காட்டும் எல்லா உள்ளடக்கமும் அடங்கும். சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் வகையிலான ஏதேனும் உள்ளடக்கத்தை நீங்கள் கண்டால், Googleளின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கமாக இருந்தாலும், அந்த உள்ளடக்கத்தை மீண்டும் பகிரவோ அதில் கருத்து தெரிவிக்கவோ வேண்டாம். இணையத்தில் வேறு எங்காவது அத்தகைய உள்ளடக்கத்தைப் பார்த்தால், காணாமல் போன மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் சிறார்களுக்கான தேசிய மையம் (NCMEC - National Center for Missing and Exploited Children) அமைப்பை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.

தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காணக்கூடிய தகவல் என்று காட்டும் ஐகான்

தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காணக்கூடிய தகவல்

கிரெடிட் கார்டு விவரங்கள், மருத்துவ ஆவணங்கள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் போன்று தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காணக்கூடிய தகவல் அடங்கிய உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை (உங்களுடையதானாலும் சரி பிறருடையதானாலும் சரி).