அறிவுசார் உடைமை மீறல்கள்
பதிப்புரிமை உட்பட எவருடைய சட்டரீதியான உரிமைகளையும் மீறும் படங்களையோ உள்ளடக்கத்தையோ நாங்கள் அனுமதிப்பதில்லை. மேலும் தகவலைப் பெற அல்லது DMCA கோரிக்கையைத் தாக்கல் செய்ய பதிப்புரிமை நடைமுறைகளைப் பார்க்கவும்.
உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைக் கண்டறியவும், அதை உற்சாகமான, கிரியேட்டிவான வழிகளில் ஆராயவும் உங்களுக்கு உதவ Google தொடர்ந்து பணியாற்றி வருகிறது. எங்கள் Maps அனுபவத்தை மேம்படுத்தி, உலகெங்கும் உள்ள இடங்களையும் அருகிலுள்ள இடங்களையும் மாதிரிக்காட்சியாகப் பார்த்து, மேலும் தெரிந்து கொள்ளும் நோக்கத்திற்காகவே எங்கள் பிளாட்ஃபார்ம்களில் படங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் பயனுள்ளதாக இருப்பதையும், எங்கள் பயனர்களுக்கு நிஜ உலகில் கிடைக்கும் அதே அனுபவத்தை வழங்குவதையும் உறுதிசெய்ய மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எங்கள் படங்கள் AI மூலம் கற்பனைத்திறன்மிக்க புதிய அனுபவங்களையும் வழங்குகின்றன. புதுமையான டிஜிட்டல் உள்ளடக்கம் மூலம் உலகை ஆராயவும், புதிய வகையான படைப்பாற்றல் மற்றும் கண்டறிதலுக்கு உந்துதலாக இருக்கவும் இவை உங்களுக்கு உதவலாம். எங்கள் தனியுரிமை உறுதிப்பாடுகளுக்கு இணங்க, AI மூலம் இந்தப் படங்களைச் சரியாகப் பயன்படுத்த Google உறுதிகொண்டுள்ளது.
'வீதிக் காட்சிப்' படத்தொகுப்புக்கு Googleளோ அல்லது பிற தரப்பினரோ பங்களித்திருக்கலாம். ஒவ்வொரு படத்துடனும் வழங்கப்படும் பங்களிப்பாளர் பெயர் அல்லது ஐகான் மூலம் வேறுபாட்டை அறியலாம். வெளிப் பங்களிப்பாளர்களால் படமெடுக்கப்பட்டு Google Mapsஸில் வெளியிடப்பட்ட படத்தொகுப்பு பங்களிப்பாளருக்கே (அல்லது அவர்கள் நியமிக்கும் வாரிசுக்கு) சொந்தமாகும்.
இந்தப் பக்கத்தில் Google வழங்கும் Street View படங்களுக்கான கொள்கை விவரிக்கப்பட்டுள்ளது. பயனர் பங்களிக்கும் Street View படங்களுக்கு, Maps பயனர் பங்களித்த உள்ளடக்கக் கொள்கையைப் பார்க்கவும்.
Google வழங்கும் Street View படக் கொள்கை
Street View படங்களைக் காணும் அனைவருக்கும் நல்லவிதமான, பயனளிக்கும் அனுபவம் கிடைக்கும்படி, Google வழங்கும் Street Viewக்கான இந்தக் கொள்கையை வடிவமைத்துள்ளோம். தகாத உள்ளடக்கத்தை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பற்றியும், Google Mapsஸில் Street View படங்களை வெளியிடுவதற்குப் பயன்படுத்தும் வரையறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் நேரங்களில் இந்தக் கொள்கையில் சில மாற்றங்களை நாங்கள் செய்யலாம் என்பதால் அவ்வப்போது இந்தப் பக்கத்திற்கு வருகை தந்து மாற்றங்கள் பற்றி அறிந்துகொள்ளவும்.
குறிப்பிட்ட இடத்தைக் கடந்து சென்ற நாளில் எங்கள் கேமராக்களில் பதிவானவற்றை மட்டுமே Street View படங்கள் காட்டும். அதற்குப் பின், அவற்றைச் செயல்படுத்த சில மாதங்கள் ஆகும். அதாவது நீங்கள் பார்க்கும் காட்சிகள் சில மாதங்களில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எடுக்கப்பட்டதாக இருக்கலாம். பல ஆண்டுகளாகப் படத்தொகுப்பை சேகரித்துள்ள சில இடங்களில், காலப்போக்கில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் எங்கள் கால இயந்திரச் செயல்பாட்டின் மூலம் பார்க்கலாம்.
Google Mapsஸில் Street View படங்களை வெளியிடும்போதும், புதிய AI திறன்களை உருவாக்க அந்தப் படங்களை நாங்கள் பயன்படுத்தும்போதும் தனிநபர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க Google பல நடவடிக்கைகளை எடுக்கிறது.
தானியங்குத் தனியுரிமைப் பாதுகாப்புகள்: Street Viewவில் Google வழங்கும் படங்களில் அடையாளம் தெரியக்கூடிய முகங்களையும் வாகன எண்ணையும் மங்கலாக்க, முகம் மற்றும் வாகன எண்ணை மங்கலாக்கும் அதிநவீனத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம்.
ஜெனரேட்டிவ் AIக்கு Street Viewவைப் பயன்படுத்துதல்: எங்கள் பயனர்களும் பார்ட்னர்களும் நிஜ உலகக் காட்சிகளை மீண்டும் கற்பனை செய்யும் புதுமையான டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்க உதவுவது போன்ற மதிப்புமிக்க கருவிகளை வழங்க, Gemini, Nano Banana, Veo போன்ற எங்கள் சக்திவாய்ந்த ஜெனரேட்டிவ் AI மாடல்களைப் பயிற்றுவிக்கவும் அவற்றிற்கு ப்ராம்ப்ட் வழங்கவும் Street View படங்களைப் பயன்படுத்துகிறோம். எங்கள் கடுமையான தனியுரிமைத் தரநிலைகளைப் பராமரிக்கவும், AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய மற்றும் பாதுகாக்கவேண்டிய தகவல்கள் இருப்பதைக் குறைக்கவும், ஜெனரேட்டிவ் ப்ராம்ப்ட்டிங்கிற்குப் பயன்படுத்தப்படும் படங்கள் கூடுதல் தானியங்கு ஃபில்டரிங்கிற்கு உட்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, முழு உடல்கள் மற்றும் வாகனங்களை அகற்றுவது.
கூடுதல் மங்கலாக்கல்களைக் கேட்டல்: உங்கள் முகத்தையோ வாகன எண்ணையோ கூடுதலாக மங்கலாக்க விரும்பினாலோ உங்கள் வீடு, கார், உடல் ஆகியவற்றை முழுவதுமாக மங்கலாக்க விரும்பினாலோ "சிக்கலைப் பற்றிப் புகாரளி" கருவியின் மூலம் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். வெளியிடப்பட்ட Street View படத்தின் அனைத்து நகல்களிலும் மங்கலாக்கலைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தக் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.
மங்கலாக்கலும் AI ஜெனரேட்டட் உள்ளடக்கமும்: புதிய மங்கலாக்கல் கோரிக்கையைப் பெற்று அதைப் பயன்படுத்தும்போது, புதிதாக மங்கலாக்கப்பட்ட Street View படம் அந்தத் தருணத்திலிருந்து ஜெனரேட்டிவ் AI ப்ராம்ப்ட்டிங்கில் இருந்து விலக்கப்படுவதையும் உறுதிசெய்கிறோம். இதன் மூலம் உங்கள் தனியுரிமைத் தேர்வை மதிக்கிறோம். இருப்பினும், மூன்றாம் தரப்பினரால் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட AI ஜெனரேட்டட் படங்கள் எதையும் புதிய மங்கலாக்கல் கோரிக்கைகள் பாதிக்காது.
"சிக்கலைப் பற்றிப் புகாரளி" என்ற இணைப்பைப் பயன்படுத்தி, தகாத உள்ளடக்கம் குறித்து நீங்கள் புகாரளிக்கலாம். கலைநயமான, கல்வி தொடர்பான அல்லது ஆவணரீதியான மதிப்பு கொண்ட உள்ளடக்கத்தைத் தவிர, பின்வரும் வகைகளைத் தகாத உள்ளடக்கமாகவே கருதுகிறோம்.
பதிப்புரிமை உட்பட எவருடைய சட்டரீதியான உரிமைகளையும் மீறும் படங்களையோ உள்ளடக்கத்தையோ நாங்கள் அனுமதிப்பதில்லை. மேலும் தகவலைப் பெற அல்லது DMCA கோரிக்கையைத் தாக்கல் செய்ய பதிப்புரிமை நடைமுறைகளைப் பார்க்கவும்.
வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை.
இயல்பாகவே சட்டவிரோதமான, ஆபத்தான அல்லது சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கிற, கோரமான அல்லது அவசியமற்ற வன்முறை அடங்கிய உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை.
பிறருக்கு உபத்திரவம் கொடுக்கவோ, பிறரைக் கொடுமைப்படுத்தவோ, தாக்கவோ, Street Viewவைப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை.
இனம், மதம், உடல்சார்ந்த இயலாமை, பாலினம், வயது, பிறந்த நாடு, ராணுவப் பணி அனுபவ நிலை, பாலியல் நாட்டம், பாலின அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக வன்முறையை ஊக்குவிக்கும் அல்லது அனுமதிக்கும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை.
ஆள்சேர்ப்புகள் உட்பட எந்த நோக்கத்திற்காகவும் பயங்கரவாத இயக்கங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, வன்முறையைத் தூண்டுவது அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களைக் கொண்டாடுவது போன்றவை தொடர்பான உள்ளடக்கத்தையும் அகற்றிவிடுவோம்.
சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது அவர்களுக்குக் கேடு விளைவிக்கும் உள்ளடக்கத்தை முற்றிலும் அனுமதிக்காத கொள்கையை Google கொண்டுள்ளது. இதில் சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்த படங்களும் சிறுவர்களைப் பாலியல் ரீதியாகக் காட்டும் எல்லா உள்ளடக்கமும் அடங்கும். சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் வகையிலான ஏதேனும் உள்ளடக்கத்தை நீங்கள் கண்டால், Googleளின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கமாக இருந்தாலும், அந்த உள்ளடக்கத்தை மீண்டும் பகிரவோ அதில் கருத்து தெரிவிக்கவோ வேண்டாம். இணையத்தில் வேறு எங்காவது அத்தகைய உள்ளடக்கத்தைப் பார்த்தால், காணாமல் போன மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் சிறார்களுக்கான தேசிய மையம் (NCMEC - National Center for Missing and Exploited Children) அமைப்பை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.
கிரெடிட் கார்டு விவரங்கள், மருத்துவ ஆவணங்கள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் போன்று தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காணக்கூடிய தகவல் அடங்கிய உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை (உங்களுடையதானாலும் சரி பிறருடையதானாலும் சரி).