360 டிகிரி படங்களை நாங்கள் எப்போது, எங்கே எப்படிச் சேகரிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

Googleளின் வண்ணமயமான Street View வாகனங்களைப் பாருங்கள், அத்துடன் உலக வரைபடத்தை மேம்படுத்த 360 டிகிரி படங்களை நாங்கள் எப்படிச் சேகரிக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Google Street View படங்கள் சேகரிப்பு
Google Street View படங்களைச் சேகரிக்கும் காரின் அனிமேஷன்

புகைப்பட ஆதாரங்கள்

Street View படங்கள் Googleளிடம் இருந்தும், எங்கள் பங்களிப்பாளர்களிடம் இருந்தும் பெறப்படுகின்றன.

எங்கள் உள்ளடக்கம்
பங்களிப்பாளர்களின் உள்ளடக்கம்

எங்கள் உள்ளடக்கம்

Googleளுக்குச் சொந்தமான உள்ளடக்கத்தில் “வீதிக் காட்சி” அல்லது "Google வரைபடம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். எங்கள் படத்தொகுப்பில் முகங்களையும் வாகன எண்களையும் தானாக மங்கலாக்குகிறோம்.

கொள்கை விவரங்கள்

ஜோர்டானில் உள்ள பெட்ராவின் Google Street View படம்

பங்களிப்பாளர்களின் உள்ளடக்கம்

பயனர் பங்களிக்கும் உள்ளடக்கத்தில் கிளிக் செய்யக்கூடிய/தட்டக்கூடிய கணக்குப் பெயர் இருக்கும், சில சந்தர்ப்பங்களில் சுயவிவரப் படம் இருக்கும்.

கொள்கை விவரங்கள்

Street Viewவில் பங்களியுங்கள்

சான்சிபாரை வரைபடமாக்கும் ஃபெடெரிகோ டெபேட்டோவின் Google Street View படம்

இந்த மாதம் எந்த இடத்தை வரைபடமாக்குகிறோம்?

உங்கள் அனுபவத்தை மேம்படுத்தவும் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை நீங்கள் கண்டறிய உதவவும் படங்களை வழங்குவதற்காக உலகைச் சுற்றி சாகசப் பயணத்தை மேற்கொள்கிறோம். எங்கள் குழுவைச் சந்திக்க விரும்பினால் உங்களுக்கு அருகில் உள்ள இடத்திற்கு அவர்கள் எப்போது வருவார்கள் என்பதை அறிந்துகொள்ள கீழே பாருங்கள்.

தேதி மாவட்டம்
தேதி மாவட்டம்

எங்களால் சமாளிக்க முடியாத சூழ்நிலைகளில் (வானிலை, மூடிய சாலைகள் போன்றவை) எங்கள் கார்களால் பயணிக்க முடியாமல் போகலாம் அல்லது சிறு மாற்றங்கள் ஏற்படலாம். பட்டியலில் ஏதேனும் மாநகரம் குறிப்பிடப்பட்டிருந்தால், அதோடு வாகனம் செல்லும் தூரத்திற்குள் உள்ள சிறு நகரங்களும் ஊர்களும் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

உலகின் ஆச்சரியங்களைக் கண்டறிவதற்காகத் தயாரிக்கப்பட்ட வாகனம்

ஏழு கண்டங்களிலும் உள்ள அற்புதமான இடங்களுக்குச் சென்றிருக்கிறோம், இன்னும் பல இடங்களை வரைபடமாக்கத் திட்டமிட்டுள்ளோம். சரியான வாகனத்தைப் பயன்படுத்தி சிறந்த படங்களைச் சேகரிக்க வேண்டுமென்பதற்காக நிலப்பகுதி, காலநிலை நிலவரம், மக்கள் தொகை அடர்த்தி உள்ளிட்ட பல காரணிகளைக் கணக்கிலெடுத்த பிறகே வீதிகளைப் படமெடுக்கத் தொடங்குகிறோம்.

Street View கார்

படங்களைச் சேகரிக்க, மேற்கூரையில் கேமரா சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும் Street View கார்களை நாங்கள் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். உலகம் முழுவதும் 1 கோடி மைல்களுக்கும் மேல் சென்று குதிரை வாழைப்பழம் சாப்பிடுறது என்கிற படம் உள்ளிட்ட பலவற்றை எடுக்க இது எங்களுக்கு உதவியது.
Street View கார்

ட்ரெக்கர்

இந்தப் போர்டபிள் கேமரா சிஸ்டத்தை பேக்பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது பிக்-அப் டிரக், ஸ்னோமொபைல், மோட்டார் பைக் போன்றவற்றின் மேற்பகுதியில் பொருத்தலாம். இன்கா கோட்டையாகிய மச்சு பிச்சு போன்ற, நடந்து மட்டுமே செல்லக்கூடிய வகையில் அமைந்த குறுகலான இடங்களிலும் தெருக்களிலும் படங்களைச் சேகரிக்க இது எங்களுக்கு உதவுகிறது.
ட்ரெக்கர்

வரைபடங்களுக்கு உயிரூட்டுதல்

படங்களைச் சேகரித்து முடித்தபிறகு அவை அனைத்தையும் காட்சிப்படுத்துவோம். பின்னணியில் எங்கள் குழு செய்பவற்றைப் பாருங்கள்.

  • படத்தொகுப்பைச் சேகரித்தல்

    முதலில் நாங்கள் வீதிக் காட்சியில் காட்டும் இடங்களைச் சுற்றி வந்து, அவற்றின் படங்களை எடுக்க வேண்டும். மிகச் சிறந்த படத்தொகுப்பை எப்போது, எங்கே சேகரிக்கலாம் என்பதைத் தீர்மானிக்க, பல்வேறு பகுதிகளின் வானிலை மற்றும் மக்கள்தொகை அடர்த்தி உள்ளிட்ட பல காரணிகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.

  • படத்தொகுதியைச் சீரமைத்தல்

    ஒவ்வொரு படத்தையும் வரைபடத்திலுள்ள அதன் புவியியல்சார் இருப்பிடத்துடன் பொருந்தச் செய்வதற்கு, GPS, வேகம், திசை ஆகியவற்றை அளக்கின்ற காரிலுள்ள சென்சார்களின் சிக்னல்களை ஒன்றிணைக்கிறோம். இது, காரின் உண்மையான வழியை மீண்டும் அமைக்கவும், தேவைக்கேற்ப படங்களைச் சாய்க்கவும், மீண்டும் சீரமைக்கவும் எங்களுக்கு உதவுகிறது.

  • படங்களை 360 டிகிரி படங்களாக மாற்றுதல்

    360 படங்களிடையே இடைவெளிகள் ஏற்படுவதைத் தவிர்க்க, அடுத்தடுத்த கேமராக்கள் லேசாக மேற்பொருந்தும் படங்களை எடுக்கும், அதன்பின் அந்தப் படங்களை ஒரு ஒற்றை 360 டிகிரி படமாக ‘இணைப்போம்’. "விளிம்புக் கோடுகளைக்" குறைத்து, சீரான நிலைமாற்றங்களை உருவாக்க, சிறப்புப் படச் செயலாக்க அல்காரிதங்களைப் பயன்படுத்துகின்றோம்.

  • சரியான படத்தை உங்களுக்குக் காட்டுகின்றோம்

    காரின் லேசர்கள் பிற பரப்புகளின் மீது மோதி எவ்வளவு விரைவாகப் பிரதிபலிக்கின்றன என்பதன் மூலம் ஒரு கட்டடம் அல்லது பொருள் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு உலகின் 3D மாடலைக் கட்டமைக்கின்றோம். Street Viewவில் தொலைவில் உள்ள ஒரு பகுதிக்கு நீங்கள் நகரும்போது அந்த இடத்தைச் சிறப்பாகக் காட்டுவதற்கான பனோரமாவை இந்த மாடல் தீர்மானிக்கிறது.

நாங்கள் இதுவரை சென்ற இடங்கள்

வரைபடத்தில் உள்ள நீல நிறப் பகுதிகள் Street Viewவில் காட்டப்படும் இடங்களைக் குறிக்கின்றன. இன்னும் விரிவாகப் பார்க்க பொிதாக்குங்கள் அல்லது Google Mapsஸில் தேடுங்கள்.

மேலும் அறிக