புதிய சுற்றுப்புறங்கள், சுற்றுலாத் தளங்கள், உள்ளூர் பிசினஸ்கள் ஆகியவற்றைப் படமெடுப்பது இன்னும் எளிதாகிவிட்டது. கேமராவைத் தேர்ந்தெடுத்து, 360 டிகிரி வீடியோக்கள் எடுத்து அவற்றை Street View Studioவில் பதிவேற்றுங்கள்.
உங்கள் சுற்றுப்புறம், கலாச்சாரப் பாரம்பரியம், உள்ளூர் பிசினஸ்கள் போன்றவற்றை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் காட்டலாம்.
சாலைப் போக்குவரத்தைக் கண்காணித்தல், உள்கட்டமைப்பில் உள்ள சேதங்களை மதிப்பாய்வு செய்தல், பராமரிப்புப் பணிகளை மேம்படுத்துதல், பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவுதல் போன்றவற்றிற்கு நகரங்களுக்கு உதவலாம்.
நடைபாதைகளையும் அணுகல்தன்மை வசதிகள் இருக்கும் இடங்களையும் மேப்பிங் செய்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தலாம்.
மூன்றே படிகளில் 360 டிகிரி படங்களை உலகளவில் வெளியிடுங்கள்
தெருக்கள், நடைபாதைகள், சுற்றுலாத் தலங்கள், பிசினஸ்கள் ஆகியவற்றை Street Viewவிற்கு இணக்கமான கேமராவின் மூலம் படமெடுக்கவும். Google Mapsஸில் உங்கள் தெரு இல்லை எனில் எங்கள்
Google Maps உள்ளடக்கக் கூட்டாளர்கள் பக்கத்திற்குத் தரவை வழங்கவோ அதில் உள்ள தரவை நிர்வகிக்கவோ வேறு வழிகளைக் கண்டறியவும்.
*Note that Google does not certify any operational or mechanical functions. Any specific technical or logistical issues should be addressed directly with the supplier.
வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, பயணத்தின்போது அல்லது நடந்து செல்லும்போது உங்கள் கேமராவை எடுத்துச் செல்லுங்கள்
வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே 360 டிகிரி படங்களை உருவாக்கலாம். உங்கள் தெருவை மேப்பிங் செய்யும்போது வாகனம் அல்லது ஹெல்மெட்டின் மீது பொருத்தும் மவுண்ட்டைப் பயன்படுத்தலாம். உட்புறப் படங்களை உருவாக்குகிறீர்கள் எனில் கேமராவைச் சிறிய டிரைபாடு அல்லது மோனோபாடில் பொருத்தலாம்.
ஒரே நேரத்தில் பல ஃபைல்களைப் பதிவேற்றலாம், பதிவேற்றம் முடியும்முன் படங்களின் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம். உங்கள் 360 டிகிரி படங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அணுகலாம், எதிர்காலத்தில் படமெடுக்க வேண்டிய வழிகளை எளிதில் திட்டமிடலாம்.
தங்கள் இருப்பிடத்தின் தெரிவுநிலையை உலக அளவில் மேம்படுத்த பொது நிறுவனங்களும் சுற்றுலா நிறுவனங்களும் Street Viewவை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.
Street View மூலம் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துதல்
2019ல் புகைப்படக் கலைஞர்கள் குழு ஒன்று சான்சிபாரை வரைபடமாக்கத் தொடங்கியது. சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் இந்தத் திட்டப்பணியின் தாக்கம் குறித்து மேலும் அறிக.
ஃபின்லாந்தில் சாலைப் பராமரிப்பில் பெரிய மாற்றத்தை Autori ஏற்படுத்தியுள்ளது
வீதி வாரியான தரவை மிகச் சிறப்பாகச் சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் ஒரு ஃபின்னிஷ் மென்பொருள் நிறுவனம் Street Viewவின் உதவியுடன் ஒரு வழியைக் கண்டறிந்தது.
அனைத்து நிலப்பகுதியிலும் செல்லும் வாகனங்கள் ஃபிரெஞ்சு பாலினேஷியாவின் தீவுகளைப் படமெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன
கோல்ஃப் வண்டிகள், ஜெட் ஸ்கீகள் மற்றும் குதிரைகளைப் பயன்படுத்தி ஓர் உள்ளூர் புகைப்படக் கலைஞர் ஃபிரெஞ்சு பாலினேஷியாவின் படங்களை வரைபடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். உள்ளூர் மீட்புப் பணியாளர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்திக்கொள்ள இது உதவுகிறது.
நாட்டை வரைபடமாக்கவும், Street View குறித்து உள்ளூர்வாசிகளுக்குக் கற்பிக்கவும், இந்தத் திட்டப்பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள அவர்களை அனுமதிக்கவும் அரசாங்கம் WT360 உடன் ஒன்றிணைந்துள்ளது.
மியான்மரின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க அந்நாட்டை டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்துதல்
மியான்மரின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பு நிறுவனம் அந்நாட்டை Street View மூலம் எப்படி டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
கார், பைக், படகு ஆகியவற்றின் மூலம் ஜிம்பாப்வே வரைபடமாக்கப்படுதல்
டவாண்டா கன்ஹீமா தனது நாட்டை வரைபடமாக்குகிறார். அவர் விக்டோரியா நீர்வீழ்ச்சியை எப்படிப் படமெடுத்தார், Street Viewவில் இன்னும் கூடுதல் இடங்களை எப்படிச் சேர்த்தார் என்று மேலும் அறிக.
கென்யாவின் அழகை உள்ளூர் வழிகாட்டிகள் உலகிற்கு வெளிப்படுத்துகின்றனர்
கென்யாவை வரைபடமாக்கி அந்நாட்டின் அழகை உலகிற்கு வெளிப்படுத்த உள்ளூர் வழிகாட்டிகளும் தொழில்துறைப் புகைப்படக் கலைஞர்களும் இணைந்து பணியாற்றினர். அவர்களின் பயணங்கள் குறித்து மேலும் அறிக.
பெர்முடா குறித்த ஆன்லைன் விவரங்களை மேம்படுத்துவது, உள்ளூர் பிசினஸ்கள் கண்டறியப்படுவதை அதிகப்படுத்துவது, சுற்றுலாப் பயணிகள் அவர்களது பயணங்களைத் திட்டமிட உதவுவது ஆகிய நோக்கங்களுக்காக பெர்முடா சுற்றுலா ஆணையமும் மைல்ஸ் பார்ட்னர்ஷிப் நிறுவனமும் இணைந்து பணியாற்றின.
டோங்கா மற்றும் பிற பசிஃபிக் தீவுகளின் கலாச்சாரத்தை ஹைலைட் செய்து காட்ட, மொத்தத் தீவுக்கூட்டத்தையும் வரைபடமாக்கி Street Viewவில் சேர்க்கும் ஒரு லட்சியத் திட்டத்தில் கிரிட் பசிஃபிக் நிறுவனர்கள் களமிறங்கினர்.
Google Mapsஸில் உங்கள் தெரு இல்லை எனில் எங்கள் Google Maps உள்ளடக்கக் கூட்டாளர்கள் பக்கத்திற்குத் தரவை வழங்கவோ அதில் உள்ள தரவை நிர்வகிக்கவோ வேறு வழிகளைக் கண்டறியவும்.