பூட்டிய அழகெல்லாம் திறந்த புத்தகமாய் இப்போது - புத்த சாம்ராஜ்யம் ஒன்று வீதிக் காட்சியின் மூலம் உலகிற்கு அறிமுகம் ஆனது எப்படி?

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள பூட்டானில் மலைப்பாதைகளும் பசுமையான பள்ளத்தாக்குகளும் அமைதியான அழகிய நதிகளும் ஏராளமாக உள்ளன. மறைந்துள்ள இந்த அரிய பொக்கிஷங்களை வெளிக்காட்டும் விதமாகவும் பூட்டானின் சுற்றுலா மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாகவும், Street View உடன் இணைந்து பன்னிரெண்டு மாதத் திட்டத்தை பூட்டான் அரசு முன்னெடுத்தது.

ஒப்புதலுக்கான பல்வேறு தடைகளைத் தாண்டி படப்பிடிப்பிற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றபிறகு சிங்கப்பூர் Googleளின் தொழில்நுட்ப உதவியுடன் மே 2020ல் பூட்டானின் சுற்றுலாக் கவுன்சில் இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. அதற்காக இரண்டு Ricoh Theta Vs கேமராக்களையும் ஒரு Insta360 Pro கேமராவையும் வழங்கியதோடு, நேரடிப் பயிற்சிகள், வழக்கமான பிழையறிந்து திருத்துதல் அமர்வுகள் ஆகியவற்றையும் அளித்ததன் மூலம் Street View அவர்களை ஆதரித்தது.

2,625.86 கிமீ

படமெடுக்கப்பட்டுள்ளது

23,98,285

படங்கள் வெளியிடப்பட்டுள்ளன

7.4 மீ

பார்வைகள்

பூட்டானின் அழகை டிஜிட்டல் வடிவத்தில் ஒன்றிணைத்தல்

Street Viewவின் இந்த முன்னெடுப்பிற்கு முன்னர், இது போன்ற இடங்களைச் சுற்றிப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களைத் தொடர்புகொள்வதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவமும் உபகரணங்களும் பூட்டானிடம் இல்லை. இதனால் பயணங்களைத் திட்டமிடுவது சுற்றுலாப் பயணிகளுக்குச் சவாலாக இருந்தது. இப்போது, புத்தமத யாத்ரீகர்களில் இருந்து சுற்றிப்பார்க்க ஆசைப்படுகிறவர்கள் வரை யார் வேண்டுமானாலும் திம்புவில் அமைந்துள்ள கோட்டை மடாலயங்களையும் புனகாவின் பழமை வாய்ந்த கிராமங்களையும் விர்ச்சுவலாகக் கண்டு ரசிக்க முடியும்.

உலகச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கான அரசின் திட்டத்தில் இது ஒரு மைல்கல் என்றாலும், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் (ICT - Information and Communications Technology) சார்ந்த சமூகத்தை நோக்கிய பூட்டானின் டிஜிட்டல் பயணத்தில் இது முதல் படி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகமானோர் பயணித்துள்ள பூட்டான் சாலை

Street Viewவின் ஸ்மார்ட் நேவிகேஷன் அம்சம் உலகம் முழுவதையும் சுற்றுலாப் பயணிகளின் கைகளுக்குள் அடக்கி அவர்களின் கண்முன்னே விரியச் செய்கிறது. மேலும், பயணிகள் எங்கிருந்தபோதும் எந்த இடத்தையும் சுற்றிப்பார்க்கும் சுதந்திரத்தையும் வழங்குகிறது. பார்வையாளர்கள் தங்களின் பயண எதிர்பார்ப்புகளைச் சரிவர அமைத்துக்கொண்டு அதன்படி பயணிக்க, நிகழ்நேர 360 டிகிரி வீடியோ காட்சி மற்றும் நிலப்பரப்பு நிலைமைகளின் விர்ச்சுவல் உலாக்களுக்கான அணுகல் உதவுகின்றது.

 

Google Street Viewவின் பூட்டான் பதிப்பு அந்த நாட்டுக்கு மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள பலருக்கும் உதவியுள்ளது. நில அளவையாளர்கள், பிசினஸ்கள், அரசு ஏஜென்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பலர் தங்களது சேவைகளை மேம்படுத்திக்கொள்ள இதைப் பயன்படுத்தலாம்.

-

டோர்ஜி த்ரதுல், பூட்டான் சுற்றுலாக் கவுன்சிலின் நிர்வாக இயக்குநர்

 

Street Viewவில் சேர்க்கப்பட்டுள்ள 500 புதிய பிசினஸ்களின் மூலமும் பூட்டான் வரைபடத்தில் செய்யப்பட்டுள்ள 4,000 புதுப்பிப்புகளின் மூலமும் நிகழ்நேரப் போக்குவரத்துத் தகவல்கள் மற்றும் வழிகளுக்கான பரிந்துரைகள் முதல் உள்ளூர் பிசினஸ்களை இன்னும் அதிகமாக வெளிக்காட்டுவது வரையிலான பல பலன்களை அந்நாட்டு மக்களும் பெற முடிகிறது.

Google Street View வரைபட வல்லுநர்கள் பூட்டானில் கார் மீது கேமராவைப் பொருத்துகின்றனர்

சிறந்த வீதிக் காட்சிகள்

உலகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு மட்டுமல்லாமல் வளர்ச்சிப் பணிகளைத் திட்டமிடுவதிலும் அரசின் Street View முன்னெடுப்பு மிகவும் உதவியாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக மறைவாக இருந்த நிலப்பகுதியைப் படமாக்குதல், பாரம்பரியத்தைப் பராமரிக்கின்ற பூட்டானின் உத்தியின் தொடக்கமாகத் திகழ்கிறது. Street View தரவின் மூலம் சாலை நிலைமைகளை ஆய்வு செய்து, தேவையானபோது அவற்றை மேம்படுத்தலாம்.

மேலும் பலரால் கண்டறியப்படும் இடமாக பூட்டான் திகழ்கிறது. ஆனால் 38,394 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வெறும் இருபது நகரங்கள் மட்டுமே இதுவரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பின் புதிய மேம்பாடுகளுடன் வரைபடங்களைத் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கும் திட்டத்துடன் உள்ள இந்த Street View முன்னெடுப்பு ஆரம்ப நிலையில்தான் உள்ளது.

உலகின் சின்னஞ்சிறு இடங்களைப் பெரிய வழிகளில் Street View இணைக்கிறது. மறைந்துள்ள பொக்கிஷங்களைத் தத்ரூபமான படங்களின் வழியாக வெளிக்கொணர்வது, ஒரு நாடு பயணிக்கும் பாதையை முற்றிலும் புரட்டிப் போடுவதுடன் அதன் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றும்.

மேலும் கண்டறியுங்கள்

உங்கள் சொந்த Street View படங்களைப் பகிருங்கள்