Street View மூலம் சான்சிபாரில் உள்ள உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துதல்

பொருளாதார வளர்ச்சிக்குச் சுற்றுலாவைச் சார்ந்திருக்கும் எந்தவொரு நாடும் உலகளவில் விழிப்புணர்வை அதிகரிக்க முன்னுரிமை தரும். இதற்கு சான்சிபாரும் விதிவிலக்கு இல்லை. தங்கள் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முயலும்போது சான்சிபார் திட்டக்குழு தங்களின் அழகிய தீவுக்கூட்டங்களை வெளி உலகிற்குக் காட்டத் தீர்மானித்தது. இதற்கு Street View தொழில்நுட்பம் உதவியது. World Travel in 360யின் (WT360) புகைப்படக் கலைஞர்களான ஃபெட்ரிகோ டிபெட்டோ, நிக்கலீ ஓமல்சென்கோ, கிறிஸ் டு பிளெஸிஸ் ஆகியோருடன் இக்குழு சேர்ந்து சான்சிபார் திட்டப்பணியைத் தொடங்கியது. மேலும் உள்ளூர் சமூகங்கள் தாங்களாகவே திட்டப்பணியைத் தொடரும் வகையில் அவர்களை ஊக்குவித்தது.

சான்சிபாரில் உள்ள உள்ளூர் சமூகங்களை Google Street View மேம்படுத்துகிறது

Watch the film

Link to Youtube Video (visible only when JS is disabled)

1,700 கிமீ

படமெடுக்கப்பட்டுள்ள நீளம்

9 லட்சத்து 80 ஆயிரம்

வெளியிடப்பட்டுள்ள படங்கள்

3.3 கோடி

பார்வைகள்

105 ஹோட்டல்கள்

விவரங்கள்

ஒன்றிணைந்து வளர்ச்சியை அதிகரித்தல்

அளவெடுத்து வரைபடமாக்குவது சவாலானது. இதனால் WT360 குழு சான்சிபார் மாநிலப் பல்கலைக்கழகத்தின் தன்னார்வமுள்ள பன்னிரெண்டு மாணவர்களுடன் இணைந்து உங்குஜா எனும் அழகிய தீவை மேப் செய்ய உதவியது. ஃபெட்ரிகோ, நிக்கலீ, கிறிஸ் ஆகிய நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி அவர்கள் 1700 கிலோமீட்டர் தூரத்தைப் படமெடுத்துள்ளனர்.

எங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்கு 30 சதவீதம் ஆகும். இதனால், எங்கள் இளைஞர்களுக்கும் சுற்றுலாத்துறையில் ஏற்கெனவே பணி செய்பவர்களுக்கும் பயிற்சியளிக்க முடிகிறது. சுற்றுலா என்றால் ஹோட்டல்களைப் பற்றிய துறை என மக்கள் ஒருகாலத்தில் கருதியது உண்டு. ஆனால் சுற்றுலா என்பது அதையும் தாண்டியது. சுற்றுலா என்பது ஓர் இடத்தைப் பற்றிய வரலாறு, விமானப் பயணங்கள் மற்றும் அவை சார்ந்த விமான நிறுவனங்கள், மார்க்கெட்டிங் ஆகிய பலவற்றை உள்ளடக்கியது. இந்தத் துறையில் சான்சிபார் மக்களை அதிகமாக ஈடுபடுத்துவது அரசாங்கத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அதிகப் பலன்களைத் தரும்.

-

சான்சிபார் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் சிமி முகமது செட்.

சான்சிபார் வளர வளர, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவவும் புதிய பார்வையாளர்களைத் தங்கள் நாட்டிற்கு ஈர்க்கவும் உள்ளூர் வீதிகளின் 360 டிகிரி படங்களை ஃபெட்ரிகோ குழு தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றனர்.

சான்சிபாரில் ஃபெட்ரிகோ டிபெட்டோவின் Google Street View வீதிப் படம்

360 டிகிரி படங்கள் மூலம் பிசினஸை உலகளவிற்கு எடுத்துச் செல்லுதல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பெம்பாவின் வடக்கத்தியத் தீவில் ஃபெட்ரிகோ பயணம் செய்ய ஆரம்பித்தார். முன்னாள் மாணவரும் தன்னார்வலருமான இப்ராஹிம் காலித் ஃபெட்ரிகோவுடன் இணைந்து 6 நாட்களில் 500 கிலோமீட்டர் தூரத்தின் படங்களையும் 40 வான்வெளி பனோரமாக்களையும் எடுத்துள்ளனர். இவற்றை Street View Studioவைப் பயன்படுத்தி Google Mapsஸில் பதிவேற்றியுள்ளனர்.

உலகளவில் தீவுகளை விளம்பரப்படுத்த, சுற்றுலாத் தளங்கள், பண்பாட்டுத் தளங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிசினஸ்களின் துல்லியமான வீடியோ காட்சியுடன் அவர்கள் உலகளாவிய சான்சிபார் தேசியச் சுற்றுலா எனும் பட பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளார்கள்.

மேப்பிங்கில் இருந்து வேலை உருவாக்கம் வரை

மாணவராக இருந்த ஷாமைம்யூ யாசினை ஃபெட்ரிகோ முதன் முதலில் சந்தித்தபோது அவர் எதிர்காலத்தில் டிரோன் பைலட்டாக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். சான்சிபாரின் எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அர்ப்பணிப்பு எண்ணத்தினால் உந்துதல் பெற்று WT360 குழுவில் இணைந்து Street View தொழில்நுட்பத்தைப் பற்றி ஷாமைம்யூ கற்றுக்கொண்டார். பயன்படுத்துவதற்கான சிறந்த கேமரா எது, எப்படிப் படமெடுக்க வேண்டும், அவற்றை எப்படி Google Mapsஸில் பதிவேற்ற வேண்டும் என அவருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்தத் திறன்களை ஷாமைம்யூ மிக விரைவாகக் கற்றுக்கொண்டு ஒரு தொழில்முறைப் புகைப்படக் கலைஞராகவே மாறிவிட்டார். இப்போது தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு சான்சிபார் தீவுகளில் பயணம் செய்து அவற்றை வரைபடமாக்கி வருகிறார்.

தற்சமயம் ஃபெட்ரிகோ, ஷாமைம்யூ, இப்ராஹிம் ஆகியோர் சான்சிபாரில் சமீபத்தில் வளர்ச்சியடைந்த பகுதிகள், புதிய பிசினஸ்கள், மாற்றியமைக்கப்பட்ட ஹோட்டல்கள் ஆகியவற்றை மையப்படுத்தி வான்வெளிப் படங்களைப் பதிவேற்றி வருகின்றனர். சான்சிபாரின் கேளிக்கைப் பூங்கா திறக்கப்பட்டதில் இருந்து அவர்களின் இலக்கும் அதிகரித்து வருகிறது.

சான்சிபாரை அளவெடுத்து மேப்பிங் செய்தல்: Street View Studio மூலம் ஸ்மார்ட்டாகவும் வேகமாகவும் தரவை வெளியிடுதல்

2019ம் ஆண்டிலிருந்து படம் மற்றும் கேமராவின் தரம் மேம்பட்டுள்ளது. அத்துடன் Street View Studio தொடங்கப்பட்டதில் இருந்து படங்களை வெளியிடுவது மிக எளிதாகவும் வேகமாகவும் மாறிவிட்டது. புகைப்படக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பல 360 டிகிரி வீடியோக்களைப் பதிவேற்றலாம், செயலாக்கத்தைக் கண்காணிக்கலாம், பதிவேற்றப்பட்ட படங்கள்/வீடியோக்களை இடத்தின் அடிப்படையிலோ அசல் ஃபைலின் பெயரின் மூலமோ தேடலாம், இன்டெராக்டிவ் வரைபட லேயர்களைப் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத் தொகுப்புகளுக்குத் திட்டமிடலாம்.

 

Street View Studioவைப் பயன்படுத்தி முழு பெம்பா தீவையும் படமாக வெளியிட்டுள்ளோம். கருவியின் முக்கிய மேம்பாடுகள் நிர்வகிப்பு சார்ந்தவையாக உள்ளன. இடைநிறுத்தப்பட்ட அல்லது தடைப்பட்ட பதிவேற்றங்களை மீண்டும் பதிவேற்றுவது, புதிய ஃபைல்களைச் சேர்ப்பதற்காகத் தனியே நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லாமல் பல வீடியோக்களை மொத்தமாகப் பதிவேற்றுவது போன்றவையும் இவற்றுள் அடங்கும். இதனால் நாங்கள் பல மணிநேரம் நன்றாக உறங்கினோம்!

-

ஃபெட்ரிகோ டிபெட்டோ, தொழில்முறை புகைப்படக் கலைஞர்

 

எதிர்காலத்தை உருவாக்குதல்

'சான்சிபார் திட்டப்பணி' என்பது உள்ளூர் மாணவர்களுக்குத் தங்கள் நாட்டை வரைபடமாக்கக் கற்றுக்கொடுக்கவும் வழிகாட்டவும் வேண்டும் என்ற இலக்கில் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் இத்திட்டம் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளில் உள்ளூர் பிசினஸ்களை இந்தத் திட்டப்பணி முன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளது. அத்துடன் ஷாமைம்யூ, இப்ராஹிம் போன்ற முன்னாள் தன்னார்வலர்களுக்குப் பணி வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

மேலும் கண்டறியுங்கள்

உங்கள் சொந்த Street View படங்களைப் பகிருங்கள்