Googleளில் உங்கள் தனியுரிமை

தரவு என்றால் என்ன? என்பது போன்ற தனியுரிமை பற்றி எங்களிடம் கேட்கப்படும் சில முக்கியக் கேள்விகளுக்கான பதில்களை இங்கே கண்டறியலாம் மேலும் அறிய விரும்பினால் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

உங்கள் இருப்பிடம்

தலைப்பிற்குச் செல்

Googleளில் பகிர்தல்

தலைப்பிற்குச் செல்

தரவு & பிரத்தியேமாக்கல்

தலைப்பிற்குச் செல்

முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளீர்கள்

தலைப்பிற்குச் செல்

உங்கள் இருப்பிடம்

Googleளுக்கு எனது இருப்பிடம் தெரியுமா?

நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போதெல்லாம் ஆப்ஸாலும் தளங்களாலும் உங்கள் இருப்பிடத்தைத் தோராயமாகக் கணிக்க முடியும். அதுபோல Googleளாலும் கணிக்க முடியும். சாதன அமைப்புகளைப் பொறுத்து உங்கள் துல்லியமான இருப்பிடத்தையும் Google அறிந்திருக்கக்கூடும். (என்னுடைய இருப்பிடத் தரவு எவ்வளவு துல்லியமானது? என்பதைப் பாருங்கள்)

Search, Maps, Google Assistant போன்றவற்றின் மூலம் Googleளில் நீங்கள் தேடும்போது மிகவும் பயனுள்ள முடிவுகளை வழங்க தற்போதைய இருப்பிடம் பயன்படுத்தப்படக்கூடும். உதாரணமாக, நீங்கள் உணவகங்களைத் தேடினால் பெரும்பாலும் உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள உணவகங்களைக் காட்டும் முடிவுகளே மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.

உங்கள் இருப்பிடத் தரவை எவ்வாறு நிர்வகிக்கலாம்? என்பதைப் பாருங்கள்

எனது இருப்பிடத்தை இயக்குவதும் முடக்குவதும் எப்படி?

நீங்கள் Googleளில் தேடும்போதெல்லாம், எந்தப் பொதுவான பகுதியிலிருந்து தேடுகிறீர்கள் என்பதை Google கணிக்கும். இணையத்துடன் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய ஏதேனும் ஆப்ஸ் அல்லது இணையதளத்தைப் போன்று, உங்கள் சாதனத்தின் IP முகவரியைப் பொறுத்து Googleளால் உங்கள் இருப்பிடத்தைக் கணிக்க முடியும். கூடுதல் விவரங்களுக்கு, எனது இருப்பிடம் Googleளுக்கு எப்படித் தெரியும்? என்பதைப் பாருங்கள்.

Googleளைப் பயன்படுத்தும்போது உங்கள் துல்லியமான இருப்பிடத்தைத் தகவலை அனுப்ப வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க தனிப்பட்ட ஆப்ஸ், இணையதளங்கள், உங்கள் சாதனம் ஆகியவற்றுக்கான இருப்பிட அனுமதிகளை நீங்கள் இயக்கலாம் அல்லது முடக்கலாம்.

நீங்கள் வீட்டின்/பணியிடத்தின் முகவரிகளை அமைத்திருக்கும்பட்சத்தில் வீட்டிலோ பணியிடத்திலோ நீங்கள் இருப்பதாக Google கணித்தால் உங்கள் தேடலுக்குத் துல்லியமான முகவரி பயன்படுத்தப்படும்.

எனது இருப்பிடம் எவ்வளவு துல்லியமானது?

உங்கள் பொதுவான பகுதி

நீங்கள் Googleளில் தேடும்போதெல்லாம், எந்தப் பொதுவான பகுதியிலிருந்து தேடுகிறீர்கள் என்பதை Google கணிக்கும். இதன் மூலம், பொருத்தமான முடிவுகளை Google வழங்க முடியும். புதிய நகரத்திலிருந்து உள்நுழைவது போன்ற வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டைக் கண்டறிந்து உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

பொதுவான பகுதி என்பது 3 சதுரக் கிலோமீட்டரை விடப் பெரிதாகவும் குறைந்தபட்சம் 1,000 பயனர்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்பதால் அப்பகுதியில் நீங்கள் மேற்கொள்ளும் தேடல் மூலம் உங்களை அடையாளம் காண முடியாது. இது உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க உதவும்.

உங்கள் துல்லியமான இருப்பிடம்

நீங்கள் அனுமதி வழங்கினால் Google உங்கள் துல்லியமான இருப்பிடத்தைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, “அருகிலுள்ள ஐஸ் கிரீம் கடை” போன்ற தேடல்களுக்கோ ஒரு கடைக்குச் செல்வதற்கான turn-by-turn நடக்கும் திசைகளுக்கோ மிகப் பொருத்தமான முடிவுகளை வழங்க Googleளுக்கு உங்கள் துல்லியமான இருப்பிடம் தேவை.

துல்லியமான இருப்பிடம் என்பது நீங்கள் இருக்குமிடத்தின் துல்லியமான விவரமாகும் (குறிப்பிட்ட முகவரி போன்றவை).

Google எப்படி எனது இருப்பிடத்தை அறிந்துகொள்கிறது?

நீங்கள் இருக்குமிடத்தைக் கணிக்க, வெவ்வேறு மூலங்களிலிருந்து பெறப்படும் உங்கள் இருப்பிடத் தகவல்களை ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்துவோம்.

உங்கள் சாதனத்தின் IP முகவரி

ஃபோன் எண்களுக்கான இருப்பிடக் குறியீடுகளைப் போன்றே IP முகவரிகளும் தோராயமாகப் புவியியலை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதாவது google.com உட்பட நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு ஆப்ஸ்/இணையதளத்தாலும் உங்கள் IP முகவரி மூலம் நீங்கள் இருக்கும் பொதுவான பகுதியைக் கணிக்க முடியும். உங்கள் சாதனத்தின் IP முகவரி உங்கள் இணையச் சேவை வழங்குநரால் உங்கள் சாதனத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும், இணையத்தைப் பயன்படுத்த இது தேவை.

உங்கள் சாதனத்தின் இருப்பிடம்

உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைப் பயன்படுத்த Google ஆப்ஸுக்கோ இணையதளத்திற்கோ அனுமதி வழங்கினால், நீங்கள் எங்குள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள அந்தத் தகவல் பயன்படுத்தப்படலாம். கிட்டத்தட்ட அனைத்துச் சாதனங்களின் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் இருப்பிட அமைப்பு உள்ளமைக்கப்பட்டிருக்கும், பொதுவாக இது அமைப்புகளில் காணப்படும்.

Googleளில் உங்கள் செயல்பாடு

உங்களது முந்தைய Google தேடல்களின் அடிப்படையில் நீங்கள் இருக்கும் பொதுவான பகுதியை Googleளால் கணிக்க முடியும். உதாரணமாக, சென்னையில் தோசை எங்குக் கிடைக்கும் என்று அடிக்கடித் தேடினால் சென்னையிலுள்ள தோசைக் கடைகளையே தேடல் முடிவுகளில் பார்க்க விரும்புகிறீர்கள் என்று புரிந்துகொள்ளப்படும்.

உங்களது லேபிளிடப்பட்ட இடங்கள்

நீங்கள் வீட்டின்/பணியிடத்தின் முகவரியை அமைத்திருந்தால், நீங்கள் எங்குள்ளீர்கள் என்பதைக் கணிக்க Google அதைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, நீங்கள் வீட்டு முகவரியை அமைத்திருக்கும்பட்சத்தில் உங்கள் IP முகவரியோ முந்தைய செயல்பாடோ இருப்பிடம் தொடர்பான பிற தகவல்களோ நீங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடும் எனப் பரிந்துரைத்தால், நீங்கள் இருக்குமிடத்தைக் கணிக்க உங்கள் வீட்டு முகவரியை நாங்கள் பயன்படுத்துவோம்.

எனது இருப்பிடத்தை யாரெல்லாம் பார்க்க முடியும்?

இது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நீங்கள் Google இருப்பிடப் பகிர்வைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், Google ஆப்ஸ் மற்றும் தளங்கள் முழுவதும் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உங்கள் நிகழ்நேர இருப்பிடத் தகவலைப் பகிரலாம்.

உங்கள் இருப்பிடத் தகவலைப் பகிர்கிறீர்களா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்

இயல்பாக, இருப்பிடப் பகிர்வு முடக்கப்பட்டிருக்கும். உங்கள் நிகழ்நேர இருப்பிடத் தகவலைப் பகிர விரும்புகிறீர்கள் எனில் யாருடன், எவ்வளவு நேரம் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்ய வேண்டும். நீங்கள் இருப்பிடத் தகவலைப் பகிர்வதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம்.

உங்கள் நிகழ்நேர இருப்பிடத் தகவலைப் பிறருடன் பகிர்தல் என்பதைப் பாருங்கள்.

தரவு & பிரத்தியேகமாக்கல்

என்னைப் பற்றிய எந்தெந்தத் தகவல்களை Google சேகரிக்கும்?

நீங்கள் Google ஆப்ஸையும் தளங்களையும் பயன்படுத்தும்போது அவற்றை உங்களுக்கு வழங்கவும், அவற்றை உங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் மாற்றவும், Google ஏன் தரவைச் சேகரிக்கிறது? என்பதில் விவரிக்கப்பட்டுள்ள பிற காரணங்களுக்காகவும் எங்களுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்போம்.

நாங்கள் சேகரிக்கும் தரவையும் அது பயன்படுத்தப்படும் விதத்தையும் உங்கள் அமைப்புகளில் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, உங்கள் YouTube செயல்பாடுகள் Google கணக்கில் சேமிக்கப்பட வேண்டாமெனில் YouTube செயல்பாடுகளை முடக்கலாம். Google எதைச் சேமிக்க வேண்டும் என்பதை நான் எப்படித் தீர்மானிப்பது? என்பதைப் பாருங்கள்

தரவு என்றால் என்ன?

நீங்கள் எங்களுக்கு வழங்குகின்ற, தனிப்பட்ட வகையில் உங்களை அடையாளம் காணக்கூடிய வகையிலான தகவல்களே உங்கள் தனிப்பட்ட தகவல்களாகும் (உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவை). Google உங்களுடன் தொடர்புபடுத்தக்கூடிய பிற தரவும் இதிலடங்கும் (உங்கள் Google கணக்கில் நாங்கள் உங்களுடன் தொடர்புபடுத்தும் தகவல்கள் போன்றவை).

உங்கள் தனிப்பட்ட தகவல்களில் இரு வகையான விஷயங்கள் இருக்கும்:

நீங்கள் வழங்குபவை அல்லது உருவாக்குபவை

நீங்கள் Google கணக்கை உருவாக்கும்போது உங்கள் பெயர், கடவுச்சொல் போன்ற தனிப்பட்ட தகவல்களை எங்களுக்கு வழங்குவீர்கள்.

நீங்கள் உருவாக்கும், பதிவேற்றும் அல்லது பிறரிடமிருந்து பெறும் உள்ளடக்கத்தையும் (மின்னஞ்சல் மெசேஜ்கள், படங்கள் போன்றவை) சேமிக்கலாம்.

Googleளில் உங்கள் செயல்பாடுகள்

சிறந்த அனுபவத்தை உங்களுக்கு வழங்க எங்கள் சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடு குறித்த தகவல்களை (நீங்கள் தேடும் வார்த்தைகள், பார்க்கும் வீடியோக்கள், யாரைத் தொடர்புகொள்கிறீர்கள், உள்ளடக்கத்தை யாருடன் பகிர்கிறீர்கள், Chrome உலாவியில் நீங்கள் இதுவரை பார்த்தவை போன்றவை) நாங்கள் சேகரிப்போம்.

Google சேவைகளை அணுக நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ், உலாவிகள், சாதனங்கள் ஆகியவை குறித்த தகவல்களை நாங்கள் சேகரிப்போம். உங்கள் சாதனத்தின் பேட்டரி குறைவாக இருக்கும்போது திரையை மங்கலாக்குவது போன்ற அம்சங்களை வழங்க இது எங்களுக்கு உதவும்.

நீங்கள் turn-by-turn வழிகள் போன்ற அம்சங்களைப் பயன்படுத்தும்போது உங்கள் இருப்பிடத் தகவலைச் செயலாக்குவோம். கூடுதல் விவரங்களுக்கு இருப்பிடம் பிரிவைப் பார்க்கவும்.

Google ஏன் தரவைச் சேகரிக்கிறது?

எங்கள் சேவைகளை வழங்கவும் அவற்றை உங்களுக்கு மிகப் பயனுள்ள வகையில் மாற்றவும் ‘தரவை நாங்கள் பயன்படுத்தும் வழிகள்’ என்பதில் விவரிக்கப்பட்டுள்ள பிற காரணங்களுக்காகவும் எங்களுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்போம்.

உதாரணமாக, நீங்கள் போக வேண்டிய இடத்திற்கான டிராஃபிக் இல்லாத வழியை வழங்க Google Mapsஸால் உதவ முடியும். ஏனெனில், உங்கள் இருப்பிடம் குறித்த தகவல்களை (உங்கள் தரவு) பொதுத் தரவுடன் (வரைபடங்களும் பொது இடங்கள் குறித்த தகவல்களும்) அது இணைக்கும்.

தரவை நாங்கள் பயன்படுத்தும் வழிகள்

எங்கள் சேவைகளை வழங்குதல்

எங்கள் சேவைகளை வழங்க தரவைப் பயன்படுத்துகிறோம் (நீங்கள் தேடும் வார்த்தைகளைச் செயலாக்கி அவற்றுக்கான முடிவுகளைத் தருவது போன்றவை).

எங்கள் சேவைகளைப் பராமரித்தல் & மேம்படுத்துதல்

எங்கள் சேவைகளைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் தரவு உதவும். உதாரணமாக, எங்களால் தடங்கல்களைக் கண்காணிக்க முடியும். மேலும் எந்தெந்தத் தேடல் வார்த்தைகள் பெரும்பாலும் எழுத்துப் பிழையுடன் டைப் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதால் எங்கள் சேவைகள் முழுவதிலும் ‘எழுத்துப் பிழைச் சரிபார்ப்பு’ அம்சங்களை நாங்கள் மேம்படுத்த முடியும்.

புதிய சேவைகளை உருவாக்குதல்

எங்கள் புதிய சேவைகளை உருவாக்க தரவு உதவும். உதாரணமாக, Google முதன்முதலில் படங்களுக்கென வெளியிட்ட Picasa ஆப்ஸில் மக்கள் தங்கள் படங்களை எவ்வாறு ஒழுங்கமைக்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டதால் நாங்கள் Google Photos ஆப்ஸை வடிவமைத்து வெளியிட முடிந்தது.

பிரத்தியேகச் சேவைகளை (உள்ளடக்கமும் விளம்பரங்களும் உட்பட) வழங்குதல்

பிரத்தியேக உள்ளடக்கத்தை (எ.கா. நீங்கள் விரும்பக்கூடிய வீடியோக்களுக்கான பரிந்துரைகள்) வழங்க நாங்கள் தரவைப் பயன்படுத்துகிறோம். உங்கள் அமைப்புகளையும் வயதையும் பொறுத்து, உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் பிரத்தியேக விளம்பரங்களை நாங்கள் உங்களுக்குக் காட்டக்கூடும்.

செயல்திறனை அளவிடுதல்

செயல்திறனை அளவிடவும் எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் கூட நாங்கள் தரவைப் பயன்படுத்துகிறோம்

உங்களைத் தொடர்புகொள்ளுதல்

சந்தேகத்திற்குரிய செயல்பாட்டை நாங்கள் கண்டறிந்தால் அதுகுறித்த அறிவிப்பை உங்களுக்கு அனுப்ப உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாங்கள் பயன்படுத்தக்கூடும்

Google, எங்கள் பயனர்கள், பொதுமக்கள் ஆகியோரைப் பாதுகாத்தல்

ஆன்லைனில் பொதுமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க (மோசடியைக் கண்டறிதல், தடுத்தல் போன்றவை) தரவைப் பயன்படுத்துகிறோம்

பிரத்தியேகமாக்க Google எப்படித் தரவைப் பயன்படுத்துகிறது?

“பிரத்தியேகமாக்கல்” என்பது நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பயன்படுத்தி உங்களுக்கேற்றவாறு எங்கள் ஆப்ஸையும் தளங்களையும் பிரத்தியேகமாக்குவதாகும். உதாரணமாக:

  • நீங்கள் விரும்பக்கூடிய வீடியோக்களுக்கான பரிந்துரைகள்
  • Google ஆப்ஸையும் தளங்களையும் நீங்கள் பயன்படுத்தும் முறைக்கேற்ற பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் (பாதுகாப்புச் சரிபார்ப்பு என்பதைப் பாருங்கள்)

விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கவும் (அமைப்பு முடக்கப்பட்டிருக்கும்போது, குறிப்பிட்ட வயதினருக்கானவை போன்ற சூழல்களைத் தவிர்த்து) நாங்கள் தரவைப் பயன்படுத்துகிறோம்.

நான் பார்க்கும் விளம்பரங்களை Google பிரத்தியேகமாக்குமா?

கூடுமானவரையில் பயனுள்ள விளம்பரங்களையே நாங்கள் காட்ட முயல்கிறோம். ஆனால் குறிப்பிட்ட வயதினருக்கோ விளம்பரப் பிரத்தியேகமாக்கல் அமைப்பை முடக்கியுள்ளவர்களுக்கோ விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க மாட்டோம்.

இருப்பினும், பிரத்தியேகமாக்காமலேயே விளம்பரங்களைப் பயனுள்ளவையாக எங்களால் மாற்ற முடியும். உதாரணமாக, “புதிய ஷூக்கள்” என்ற தேடலுக்கான முடிவுகளைக் காட்டும் பக்கத்தைப் பார்க்கிறீர்கள் எனில் அதில் ஒரு ஷூ நிறுவனத்தின் விளம்பரத்தை நீங்கள் பார்க்கக்கூடும். நேரம், உங்கள் பொதுவான இருப்பிடம், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தின் உள்ளடக்கம் போன்ற பொதுவான விஷயங்களைப் பொறுத்து விளம்பரம் காட்டப்படலாம்.

முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவீர்கள்

எனது கணக்கில் Google எதைச் சேமிக்க வேண்டும் என்பதை நான் எப்படித் தீர்மானிப்பது?

Photos போன்ற Google சேவையை நீங்கள் பயன்படுத்தும்போது, உங்கள் படங்களைக் காப்புப் பிரதி எடுத்து ஒத்திசைக்க வேண்டுமா என்பது போன்ற விஷயங்களில் நீங்கள் முடிவெடுக்க உதவும் அமைப்புகள் அதிலிருக்கும்.

Google ஆப்ஸ் மற்றும் தளங்கள் முழுவதிலும் உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க உதவும் அமைப்புகளும் அதிலிருக்கும். இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு, YouTube செயல்பாடுகள் ஆகியவை இரு முக்கிய அமைப்புகளாகும்.

இந்தக் கட்டுப்பாடுகள் இயக்கப்பட்டிருக்கும்போது:

  • Google ஆப்ஸ் மற்றும் தளங்களில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும்
  • சேமிக்கப்பட்ட தகவல்கள் உங்கள் Google அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கப் பயன்படுத்தப்படும்

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு

Search, Maps போன்ற Google தளங்களிலும் ஆப்ஸிலும் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைச் சேமிக்கும். இருப்பிடம் போன்ற தொடர்புடைய தகவல்களும் இதிலடங்கும். Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள், ஆப்ஸ், சாதனங்கள் ஆகியவற்றில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளையும் ஒத்திசைக்கப்படும் Chrome செயல்பாடுகளையும் இது சேமிக்கும்.

Maps, Search மற்றும் பிற Google சேவைகளில் விரைவான தேடல்கள், சிறப்பான பரிந்துரைகள், மிகப் பிரத்தியேக அனுபவங்கள் ஆகியவற்றை வழங்க உங்கள் செயல்பாடு பயன்படுத்தப்படும்.

YouTube செயல்பாடுகள்

YouTubeஐப் பயன்படுத்தும்போது நீங்கள் பார்க்கும் வீடியோக்களையும் தேடுபவற்றையும் சேமிக்கும்.

உங்கள் YouTube அனுபவத்தையும் பிற ஆப்ஸையும் பிரத்தியேகமாக்க (உங்கள் தேடல் முடிவுகள் போன்றவை) YouTube செயல்பாடுகள் பயன்படுத்தப்படும்.

'எனது செயல்பாடு' தொடர்பான தரவை எப்படி நீக்குவது?

உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தரவை நீங்கள் நீக்கலாம். நீங்கள் நிரந்தரமாக நீக்கும் தரவு எங்கள் சிஸ்டங்களிலிருந்து அகற்றப்படும். இந்தத் தரவை எங்கள் சேவையகங்களில் இருந்து முழுமையாக அகற்றவோ உங்களுடன் தொடர்புபடுத்த முடியாத விதத்தில் மட்டும் வைக்கவோ கவனமான செயல்முறையைப் பின்பற்றுகிறோம்.

உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை (நீங்கள் தேடியவை, படித்தவை, பார்த்தவை போன்றவை) பார்க்க எனது செயல்பாடு பக்கத்திற்குச் செல்லவும். குறிப்பிட்ட கால வரம்பிற்குட்பட்ட உங்கள் செயல்பாடுகளில் குறிப்பிட்ட சிலவற்றையோ அனைத்தையுமோ நீங்கள் நீக்கலாம்.

உங்கள் செயல்பாடுகள் தானாகவே நீக்கப்படுமாறும் நீங்கள் அமைக்கலாம்.

எனது உள்ளடக்கத்தை எப்படிப் பதிவிறக்குவது?

மின்னஞ்சல்கள், படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், தாள்கள், கருத்துகள், தொடர்புகள், கேலெண்டர் நிகழ்வுகள் போன்றவை உங்கள் உள்ளடக்கத்தில் அடங்கும்.

உங்கள் உள்ளடக்கத்திற்கான காப்பகத்தை உருவாக்க, உங்கள் தரவைப் பதிவிறக்குங்கள் என்பதற்குச் செல்லவும். உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடுக்கவோ வேறு சேவையைப் பயன்படுத்த விரும்பும்பட்சத்தில் உள்ளடக்கத்தை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றவோ இது உதவும்.

வெளியேறிய பிறகு என்னிடம் என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கும்?

வெளியேறிய பிறகும் கூட, Googleளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய உதவும் கட்டுப்பாடுகள் உங்களிடம் இருக்கும். வெளியேறிய பிறகு இந்த அமைப்புகளை மாற்ற g.co/privacytools பக்கத்திற்குச் செல்லவும்:

தேடல் பிரத்தியேகமாக்கல்

மிகப் பொருத்தமான முடிவுகளையும் பரிந்துரைகளையும் வழங்க, இந்த உலாவியில் நீங்கள் மேற்கொள்ளும் Google தேடல்களைப் பயன்படுத்தும்.

YouTube தேடல் மற்றும் இதுவரை பார்த்தவை

YouTubeஐ உங்களுக்கேற்றவாறு பிரத்தியேகமாக்க, YouTubeல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை (நீங்கள் பார்க்கும் வீடியோக்கள், நீங்கள் தேடுபவை போன்றவை) பயன்படுத்தும்.

உங்கள் உலாவியிலுள்ள குக்கீகளில் சிலவற்றையோ அனைத்தையுமோ நீங்கள் தடுக்கவும் முடியும். ஆனால் இதன் காரணமாக இணையம் முழுவதும் குறிப்பிட்ட சில அம்சங்கள் செயல்படாமல் போகலாம். உதாரணமாக, குக்கீகள் இயக்கப்பட்டிருந்தால் மட்டுமே பல இணையதளங்கள் நீங்கள் உள்நுழைய அனுமதிக்கும்.

குறிப்பிட்ட வயதினருக்கு நாங்கள் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்குவதில்லை என்றாலும், பிரத்தியேக விளம்பரங்களைப் பார்க்க வேண்டுமா என்பதையும் வெளியேறிய பயனர்கள் தேர்வுசெய்யலாம்.