Street Viewவின் நம்பகமான புகைப்படக் கலைஞர்கள் கொள்கை
Google தயாரிப்புகளில் பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்கள் சார்பில் படங்களைச் சேகரிக்கும் Street Viewவின் நம்பகமான திட்டப் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இந்தக் கொள்கை பொருந்தும்.
வீதிக் காட்சியின் நம்பகமான திட்டப் புகைப்படக் கலைஞர்கள் குறித்த எங்கள் கொள்கை நான்கு பகுதிகளைக் கொண்டது:
- வெளிப்படைத்தன்மைக்கான தேவைகள்: உங்கள் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் பகிரவேண்டிய தகவல்
- தடைசெய்யப்பட்டுள்ள நடைமுறைகள்: உங்கள் வாடிக்கையாளர்களின் சார்பாக Google தயாரிப்புகளில் பதிவேற்றப்பட்ட படங்களை வெளியிடவோ நிர்வகிக்கவோ விரும்பினால் நீங்கள் செய்யக்கூடாதவை
- பிராண்டிங் வழிகாட்டுதல்கள்: Google பிராண்டிங் கூறுகளின் சரியான பயன்பாடுகள்
- தரத்திற்கான தேவைகள்: உங்கள் வாடிக்கையாளர்களின் Google விளம்பரக் கணக்குகளை வரிசைப்படுத்த வேண்டிய முறை
வெளிப்படைத்தன்மைத் தேவைகள்
Google தயாரிப்புகளில் படங்களைப் பதிவேற்றுவதன் பலன்களை வாடிக்கையாளர்கள் முழுமையாகப் பெறுவதற்கு அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு முடிவுகளை எடுக்க உதவும் சரியான தகவல்கள் அவர்களுக்குத் தேவை. எனவேதான் வாடிக்கையாளர்களின் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய தகவல்களைப் பொறுத்தவரை எங்களின் நம்பகமான பங்கேற்பாளர்கள் அனைவரையும் வெளிப்படையாக இருக்குமாறு வலியுறுத்துகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவைகளை நிறைவுசெய்வதோடு வாடிக்கையாளர்கள் கோரும் தொடர்புடைய பிற தகவல்களைக் கொடுப்பதற்கும் நம்பகமான பங்கேற்பாளர்கள் முடிந்தவரை முயல வேண்டும்.
உங்கள் கட்டணப் புகைப்படச் சேவைகளைப் பிறருக்கு வழங்கும்போது பிற நபர்கள், பிராண்டுகள், உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவதும் அவை குறித்த உங்கள் கடமைகளையும் உரிமைகளையும் சரியாகப் புரிந்துகொள்வதும் அவசியம்.
சேவைக் கட்டணங்களும் விலைகளும்
பெரும்பாலும் நம்பகமான திட்டத்தின் பங்கேற்பாளர்கள் தாம் வழங்கும் மதிப்புமிக்க சேவைகளுக்காக நிர்வாகக் கட்டணம் விதிப்பார்கள். தங்களிடம் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படப்போகிறதா என்பது படங்களை வாங்குபவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொரு முதல் விற்பனைக்கு முன்பும் புதிய வாடிக்கையாளர்களிடம் இதை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துவிடுங்கள். மேலும் கட்டணம் இருப்பதையும் அது எவ்வளவு என்பதையும் வாடிக்கையாளர் இன்வாய்ஸ்களில் வெளியிடுங்கள்.
குறிப்பாகப் பெரிய பட்ஜெட்டில் படங்களை வாங்குபவர்களைப் போல வசதியோ அனுபவமோ இல்லாத, குறைந்த பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு, Street Viewவின் நம்பகமான திட்டப் புகைப்படக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும்போது என்ன எதிர்பார்க்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இது முக்கியம்.
நேர்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்துதல்
Street Viewவின் நம்பகமானோர் திட்டத்தின் பங்கேற்பாளரான நீங்கள், Google நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டுள்ள ஒரு புகைப்படக் கலைஞராகவோ ஏஜென்சியாகவோ உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது. உங்களை முழுவதும் தனிப்பட்ட பிசினஸ் அங்கமாக நேர்மையுடன் வெளிப்படுத்துவதுடன் Google ஒரு வெளியீட்டுச் சேவையாக மட்டுமே செயல்படுகிறது என்பதையும் வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கவும்.
தனிப்பட்ட பொறுப்பு
வெளியிடப்படும் படங்கள் சில வினாடிகளில் Google Mapsஸில் தோன்றக்கூடும், எனினும் இந்தப் படங்கள் Maps பயனர் பங்களித்த உள்ளடக்கக் கொள்கைக்கோ Google Maps சேவை விதிமுறைகளுக்கோ இணக்கமாக இல்லையென்றால் அதன் பின்னர் அவை நிராகரிக்கப்படலாம்.
- சேர்க்கப்பட்ட படங்கள் Google Mapsஸிலிருந்து அகற்றப்படுமானால், அப்பிரச்சனையைத் தீர்க்கும் பொறுப்பு புகைப்படக் கலைஞரையும் வணிக உரிமையாளரையும் சாரும்.
- எங்கள் கொள்கைகளுக்கு இணக்கமாக இல்லாத படங்களைப் புகைப்படக் கலைஞர்கள் முறையாகச் சரிசெய்யவோ மாற்றவோ பரிந்துரைக்கிறோம். மேலும் அவை Google Mapsஸில் வெளியிடுவதற்கேற்ப இருப்பதை உறுதிப்படுத்துமாறும், சிக்கலைத் தீர்க்கமுடியாத சூழலில் வாடிக்கையாளருக்குப் பணத்தை முழுமையாகத் திருப்பிச் செலுத்துமாறும் பரிந்துரைக்கிறோம்.
பட உரிமை
புகைப்படக் கலைஞர்களும் பிசினஸ் உரிமையாளர்களும் இணைந்து செயல்படும்போது சேவை விதிமுறைகள், உத்திரவாதம், எதிர்கால உடைமை உரிம விவரங்கள் ஆகியவை அடங்கிய எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தைத் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
- படப்பிடிப்பு முடிவடைந்ததும் படங்கள் யாருக்குச் சொந்தமாகும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளவும். புகைப்படக் கலைஞரிடம் உரிமை இருக்குமானால், புகைப்படக் கலைஞரின் பதிப்புரிமையை மீறாமல் வணிக உரிமையாளர் படங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அவருக்குத் தெரியப்படுத்தவும். ஒரே படத்தை இரண்டு கணக்குகளின் கீழ் இருமுறை வெளியிடக்கூடாது (அதாவது புகைப்படக் கலைஞரின் கணக்கிலும் பிசினஸ் உரிமையாளரின் கணக்கிலும்).
சட்ட இணக்கம்
வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றும்போது பொருந்தக்கூடிய சட்டங்கள் அனைத்தையும் கட்டாயமாகப் பின்பற்றவும். உங்கள் திறமையையோ நீங்கள் செய்யும் பணியின் இறுதித் தரத்தையோ தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தாதீர்கள். நீங்கள் பணியமர்த்தப்பட்ட வேலைக்குத் தேவையான தகுந்த காப்பீட்டைக் கட்டாயம் உடன் வைத்திருக்கவும்.
படம் காட்டப்படும் தன்மை
பிசினஸ் உரிமையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களிடையே உள்ள ஒப்பந்தங்கள் உட்பட மூன்றாம் தரப்புகளிடையே உள்ள எந்த ஒரு தொழில்ரீதியான ஒப்பந்தத்திற்கும் அப்பாற்பட்டு Google Mapsஸில் உள்ள படங்களுக்கு Google தர மதிப்பீடு வழங்கும். படப்பிடிப்பிற்காகத் தொழில்முறைப் புகைப்படக் கலைஞருக்கு பிசினஸ் உரிமையாளர் கட்டணம் செலுத்துவது, Google Mapஸில் படங்கள் மதிப்பிடப்படும் அல்லது காட்டப்படும் விதத்தைப் பாதிக்காது.
நல முரண்கள் இருக்கக்கூடாது
’உள்ளூர் வழிகாட்டிகள்’ போன்ற சில குறிப்பிட்ட Google திட்டங்களில் தொழில்முறை அல்லாத வகையில் நீங்கள் பங்கேற்க வேண்டியிருக்கும் (எ.கா. உங்கள் பங்களிப்பிற்கு ஊதியம் வழங்கப்படாது). நீங்கள் பணி அடிப்படையில் சேவைகளை வழங்கினால் (Street Viewவின் நம்பகமான வழங்குநராக உங்களை விளம்பரப்படுத்திக்கொள்வது போன்றவை), அந்தத் தொழில்முறைச் சேவைகளுடன் நடுநிலை தவறாமல் வழங்க வேண்டிய தொழில்முறை அல்லாத சேவைகளான மதிப்பீடு வழங்குதல், கருத்து எழுதுதல் போன்றவற்றைச் சேர்த்து வழங்கக்கூடாது.
Google பிராண்டுகளைச் சரியாகப் பயன்படுத்துதல்
நம்பகமானவர் என்ற நிலையைப் பெற்ற புகைப்படக் கலைஞர்கள் அல்லது நிறுவனங்கள் மட்டுமே Google Maps Street View பிராண்டு மற்றும் நம்பகமானவர் பேட்ஜை மார்க்கெட்டிங் உடைமைகளாகப் பயன்படுத்தலாம். ஒரு நம்பகமான புகைப்படக் கலைஞராக அந்த நிலையை முழுமையாகப் பயன்படுத்தி உங்கள் பிரபலத்தன்மையை மேலும் விரிவாக்க அழைக்கிறோம். Google Maps, Street View போன்ற பிராண்டிங் கூறுகள், நம்பகமானவர் பேட்ஜ், பெயர் முத்திரை அல்லது தொடர்புடைய பிற லோகோக்களை நம்பகமான நிபுணர்கள் பயன்படுத்தலாம். அவற்றை வைத்து நீங்கள் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்பது பற்றிய சில விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எங்கள் பிராண்டு சொத்துகள் தொடர்பான Google அனுமதித்த உபயோகங்களை யாராவது மீறுவதாகக் கருதினால், அது தொடர்பான சிக்கல்களை இங்கே புகாரளிக்கலாம். Google பிராண்டுக்குச் சொந்தமானவை குறித்த பிற முறையற்ற உபயோகங்கள் அனைத்தையும் இங்கே புகாரளிக்கலாம்.
நம்பகமானவர் பேட்ஜ் பயன்பாடு
- Street Viewவின் நம்பகமானோர் திட்டத்தின் சான்றிதழ் பெற்ற உறுப்பினராக இருந்தால் மட்டும் நம்பகமானவர் பேட்ஜ் மற்றும் பிராண்டிங் கூறுகளைப் பயன்படுத்தவும்.
- நம்பகமானவர் பேட்ஜை எங்குக் காட்சிப்படுத்தினாலும் கண்டிப்பாக வெள்ளை நிறப் பின்னணியில் போதுமான அளவு இடைவெளியோடு காட்ட வேண்டும்.
- உங்கள்/நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவுடன் சேர்த்து மட்டுமே நம்பகமானவர் பேட்ஜைப் பயன்படுத்த வேண்டும்.
- நம்பகமானவர் பேட்ஜையும் பிராண்டிங் கூறுகளையும் இணையதளங்கள், விளக்கக் காட்சிகள், வணிக ஆடைகள், அச்சிடப்பட்ட விளம்பர ஆவணங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.
- நம்பகமானவர் பேட்ஜையும் பிராண்டிங் கூறுகளையும் பக்கங்களிலோ ஆடைகளிலோ பிரதானமாகத் தெரியாதபடி பார்த்துக்கொள்ளவும்.
- Google Maps, Street View அல்லது நம்பகமானவர் பேட்ஜ், லோகோக்கள் அல்லது பெயர் முத்திரைகளில் கிராஃபிக்ஸைச் சேர்த்தல், படங்களின் அளவைப் பெரிதாக்குதல் அல்லது அவற்றை மொழிபெயர்த்தல் உள்ளிட்ட எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது.
- பேட்ஜைத் தவறான/முறைகேடான வழியில் பயன்படுத்தக்கூடாது. உதாரணத்திற்கு, ஏதேனும் தயாரிப்பு அல்லது சேவைக்கு Googleளின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் வகையில் பேட்ஜைப் பயன்படுத்துதல்.
உங்கள் சேவைகளை விற்கும்போது
- தொழில்முறை 360 டிகிரி படச் சேவையை உங்கள் பிசினஸ் சேவைகளுள் ஒன்றாக வழங்குங்கள்.
- வணிகங்களுடன் தொடர்புகொள்ளும்போது உண்மைக்குப் புறம்பாக உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ளவோ, நம்பகமானோர் திட்டத்தின் அங்கமாக உள்ளதை மறைக்கவோ செய்யாதீர்கள்.
- நீங்கள் வழங்கும் கட்டணச் சேவைகளை (எ.கா. Street Viewவின் நம்பகமான வழங்குநர் என்று உங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளுதல் போன்றவை) உங்கள் ’உள்ளூர் வழிகாட்டி’ மெம்பர்ஷிப்புடன் சேர்க்கக்கூடாது.
உங்கள் இணையதளத்தை பிராண்டிங் செய்தல்
- Google, Google Maps, Street View, நம்பகமானவர் பேட்ஜ் அல்லது பிற Google வர்த்தக முத்திரை அல்லது அதே போன்ற சின்னம் போன்றவற்றை டொமைன் பெயரில் பயன்படுத்தக்கூடாது.
- உங்கள் இணையதளத்தில் நம்பகமானவர் பேட்ஜைக் காட்சிப்படுத்தலாம்.
உங்கள் வாகனத்தில் பிராண்டிங் செய்தல்
- வாகனத்தில் படங்களைக் காட்சிப்படுத்தும்போது உங்கள் சொந்த பிராண்டையும் லோகோவையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- Street View ஐகான், பேட்ஜ் மற்றும் லோகோ உள்ளிட்ட எந்த Google பிராண்டிங் கூறுகளையும் வாகனத்தில் காட்சிப்படுத்தக்கூடாது.
360 டிகிரி படங்களின் கீழ்/மேல் பகுதிகளில் பிராண்டிங்கைச் சேர்த்தல்
- கீழ்/மேல் எல்லைப் பகுதியின் அளவிற்கு ஏற்ப உங்கள் நிறுவனத்தின் லோகோ/பெயரைப் பயன்படுத்தவும். வடிவமைப்பு சார்ந்த வரையறைகளுக்கு கொள்கை வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.
- உங்கள் படங்களுக்குக் கீழே அல்லது வாகனத்தின் கூரையில் பிராண்டிங்கைச் சேர்க்கும்போது இவை அவசியம்:
- பிராண்டிங்கைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை வைத்திருக்க வேண்டும்.
- உள்ளூர் சுற்றுலா விளம்பரங்களைப் போன்ற தொடர்புடைய உள்ளடக்கத்தையோ படைப்பாளர் பெயரைக் குறிப்பிட்டுப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய உள்ளடக்கத்தையோ மட்டுமே காட்சிப்படுத்தவும்.
- ஸ்பான்சர்ஷிப்/படைப்பாளர் பெயர் குறிப்பிடுதலில் காட்டப்படும் பிராண்டிங் இவ்வாறு இருக்க வேண்டும்:
- Google பிராண்டுக்குச் சொந்தமான எதையும் கொண்டிருக்கக் கூடாது.
- காட்டப்படும் இடத்துடன் தொடர்புடையதாக இருந்தால் தவிர அதில் விளம்பரப் படங்கள் அல்லது வாக்கியங்கள் எதுவும் இருக்கக்கூடாது.
- "ஸ்பான்சர் செய்தவர்" அல்லது அதற்குச் சமமான மொழிபெயர்ப்பைச் சேர்த்திருக்க வேண்டும்.
- உங்கள் 360 டிகிரி படங்களுக்குக் கீழ்/மேல் பகுதியில் நம்பகமானவர் பேட்ஜையோ வேறு ஏதாவது Google பிராண்டிங்கையோ பயன்படுத்தக் கூடாது (உங்கள் கேமராவில் தெரியக்கூடிய எந்தவொரு மேற்கூரை கிராஃபிக்ஸ் உட்பட).
இந்த வழிகாட்டுதல்களுடன் கூடுதலாக, முறையாகப் பயன்படுத்துவதற்கான Googleளின் விதிகள், பிராண்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், Geo பயன்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் Google வர்த்தக முத்திரைகளின் பயன்பாட்டிற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதை உறுதிசெய்யவும்.
Google Adsஸில் உங்கள் வணிகத்தை விளம்பரம் செய்தல்
நீங்கள் விரும்பினால் ’நம்பகமான புகைப்படக் கலைஞர் திட்டம்’ என்ற சொற்றொடருடன் Google Adsஸில் உங்கள் பிசினஸை விளம்பரம் செய்யலாம். ”Street View” பிராண்டையோ வேறு ஏதேனும் Google பிராண்டையோ உங்கள் விளம்பரங்களில் பயன்படுத்த அனுமதியில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
உங்கள் Google Business Profileலை பிராண்டிங் செய்தல்
உங்களிடம் Google Business Profile இருந்தால், Google Business Profile கொள்கைகளையும் குறிப்பாக Googleளில் உங்கள் பிசினஸைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான வழிகாட்டுதல்களையும் மதித்து நடக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
Google, Google Maps, வீதிக் காட்சி அல்லது பிற Google வர்த்தக முத்திரை அல்லது இது போன்றவற்றை உங்கள் Google Business Profileலின் பெயரில் பயன்படுத்தக்கூடாது.
நம்பகமானவர் என்ற நிலையை அடைந்தபிறகு ‘நம்பகமானவர் பேட்ஜை’ உங்கள் சுயவிவரத்தில் பதிவேற்றலாம்.
கவனத்திற்கு: இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லையெனில் திட்டத்தில் உங்கள் நிலையையும் நம்பகமானவர் பேட்ஜ், பிற பிராண்டிங் கூறுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் உரிமையையும் நீங்கள் இழக்க நேரலாம்.
நம்பகமான படங்களுக்கான தரத் தேவைகள்
படத்தின் தரம்
- 7.5 மெ.பி. அல்லது அதற்கு மேல் (3,840 x 1,920 பிக்)
- 2:1 படத் தோற்ற விகிதம்
- படத்தின் ஓரங்களில் இடைவெளிகள் இருக்கக்கூடாது
- குறிப்பிடத்தக்க வகையில் இணைப்புப் பிழைகள் இருக்கக்கூடாது
- வெளிச்சமான/இருண்ட பகுதிகள் தேவையான அளவு தெளிவுடன் இருக்க வேண்டும்
- கூர்மை: நகர்வு மங்கல்தன்மை இருக்கக்கூடாது, சரியான ஃபோக்கஸில் இருக்க வேண்டும்
- படத்தின் கீழ் எல்லை உட்பட எங்கும் கவனத்தைத் திசைதிருப்பும் ஃபில்டர்களோ எஃபெக்ட்டுகளோ இருக்கக்கூடாது
இணைப்பு
- இணைக்கப்பட்ட அனைத்து 360 டிகிரி படங்களும் தெளிவாகத் தெரிய வேண்டும்
- உட்புறங்களில் 1 மீட்டர் இடைவெளியிலும் வெளிப்புறங்களில் 3மீ இடைவெளியிலும் படம்பிடிக்கவும்
- எங்களுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பினை அதிகரிக்க உங்கள் படத்தொகுப்பில் தெருவும் இடம்பெறும் வகையில் அதை விரிவாக்கவும்
முறையான நடத்தை
- நபர்களையும் இடத்தையும் காட்டுவதற்கான ஒப்புதல்
- புவியியல் ரீதியாகத் துல்லியமாக இடத்தைக் குறிப்பிடுதல்
- படப் பிரதிபலிப்பு (மிர்ரரிங்) அல்லது படத்தில் உருவங்களில் மாற்றங்கள் செய்தல் (வார்ப்பிங்) உட்பட கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட ஸ்பேஸ்களோ ஸ்பெஷல் எஃபெக்ட்டுகளோ இருக்கக்கூடாது
- கீழ் எல்லையைத் தாண்டி எதுவும் இருக்கக்கூடாது
- வெறுப்பைத் தூண்டக்கூடிய அல்லது சட்டவிரோத உள்ளடக்கம் இருக்கக்கூடாது
தடைசெய்யப்பட்ட நடைமுறைகள்
பொருத்தமற்ற உள்ளடக்கம்
தடைசெய்யப்பட்ட மற்றும் வரம்பிடப்பட்ட உள்ளடக்கத்தை Maps பயனர் பங்களித்த உள்ளடக்கக் கொள்கையில் பார்க்கலாம்.
பொருத்தமற்ற உள்ளடக்கத்தை "சிக்கலைப் பற்றிப் புகாரளியுங்கள்" இணைப்பின் மூலம் புகாரளிக்கலாம்.
தவறான, தவறாக வழிநடத்தக்கூடிய அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்ற கூற்றுகள்
Street Viewவின் நம்பகமான திட்டப் புகைப்படக் கலைஞர்களுடன் அவர்களின் கிளையண்ட்டுகள் வேலை செய்யும்போது அனைத்து விஷயங்களையும் அறிந்து முடிவெடுக்க வேண்டும் என விரும்புகிறோம். அதாவது, உங்கள் நிறுவனத்தைப் பற்றி, உங்கள் சேவைகளைப் பற்றி, சேவைகளுக்குத் தொடர்புடைய கட்டணங்களைப் பற்றி, கிளையண்ட்டுகள் பெறக்கூடிய சேவைகளின் முடிவுகளைப் பற்றி முதலிலேயே அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தெரிவிக்க வேண்டும். தவறான, தவறாக வழிநடத்தும் அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்ற கூற்றுகளை வழங்கக்கூடாது.
எடுத்துக்காட்டுகள்:
- Googleளின் இணை நிறுவனம் என்று பொய்யாகக் குறிப்பிடுதல்
- Google Street Viewவிலோ Google Mapsஸிலோ முன்னிலைப்படுத்துவதாக உத்திரவாதமளித்தல்
தொல்லை தரக்கூடிய, தவறான அல்லது நம்பிக்கையைக் குலைக்கும் நடத்தை
Street Viewவின் கிளையண்ட்டுகள் Googleளிடம் இருந்து நேரடியாக எத்தகைய சேவையைப் பெறுவார்களோ அதேபோன்ற மிகச் சிறந்த சேவையை Street View புகைப்படக் கலைஞரிடம் இருந்தும் பெற வேண்டும். வாடிக்கையாளர்களிடமோ, வாடிக்கையாளர்களாகக் கூடியவர்களிடமோ தொல்லை தரக்கூடிய, தவறான அல்லது நம்பிக்கையைக் குலைக்கக் கூடிய வகையில் நடந்துகொள்ளாதீர்கள்.
எடுத்துக்காட்டுகள்:
- வாடிக்கையாளர்களாகக் கூடியவர்களுக்குத் தொடர்ச்சியாக மார்க்கெட்டிங் அழைப்புகளைச் செய்தல்
- உங்கள் ஏஜென்சியுடன் பதிவுசெய்யும்படியோ வணிகத்தைத் தொடரும்படியோ ஒரு விளம்பரதாரரைத் தேவையில்லாமல் வற்புறுத்துதல்
- Google சான்றிதழ் தேர்வுகளில் உங்கள் சார்பில் மற்றவர்களைப் பங்குபெறச் செய்தல்
- ஃபிஷிங்
- பணத்திற்கு ஈடாக Google Ads வவுச்சர்களை வழங்குதல்
எங்கள் கொள்கைகள் பற்றிய அறிமுகம்
Google Street Viewவின் நம்பகமான திட்டப் புகைப்படக் கலைஞர்களுக்கான கொள்கையை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்வதும் அது குறித்த சமீபத்திய தகவல்களை அறிந்துகொள்வதும் முக்கியமாகும். எங்கள் கொள்கைகளை நீங்கள் மீறுவதாக நாங்கள் நம்பினால் உங்கள் நடைமுறைகள் குறித்த விரிவான மதிப்பாய்வை மேற்கொள்ள உங்களைத் தொடர்புகொண்டு அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கோரலாம். பலமுறை கொள்கைகளை மீறினாலோ குறிப்பாகத் தீவிரமான கொள்கை மீறல்களைச் செய்தாலோ நம்பகமானோர் திட்டத்தில் இருந்து நீங்கள் விலக்கப்படலாம், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அத்தகவல் தெரிவிக்கப்படலாம். Google Mapsஸிற்கு நீங்கள் பங்களிப்பதும் தடை செய்யப்படலாம்.
ஏற்கனவே இருக்கும் விதிகளோடு கூடுதலாக இருக்கும் இக்கொள்கைகள் மூன்றாம் தரப்பினருக்குப் பொருந்தலாம், பின்வருபவற்றையும் சேர்த்து:
கொள்கையை மீறினால் என்ன நடக்கும்?
இணக்கத்தன்மை குறித்த மதிப்பாய்வு: Street Viewவின் நம்பகமான திட்டப் புகைப்படக் கலைஞர்களுக்கான கொள்கையுடன் உங்கள் பிசினஸின் இணக்கத்தன்மை குறித்து எப்போது வேண்டுமானாலும் நாங்கள் மதிப்பாய்வு செய்ய வாய்ப்புள்ளது. இணக்கத்தன்மை தொடர்பான தகவல்களைக் கோரி நாங்கள் உங்களைத் தொடர்புகொள்ளும்பட்சத்தில் தாமதிக்காமல் பதிலளிக்க வேண்டியதும், கொள்கையுடன் இணங்கும் வகையில் எதையேனும் சரிசெய்ய வேண்டியிருந்தால் அதை உடனே சரிசெய்வதும் அவசியம். இணக்கத்தன்மையைச் சரிபார்க்க உங்கள் வாடிக்கையாளர்களையும் நாங்கள் தொடர்புகொள்ளக்கூடும்.
இணக்கமின்மை குறித்த அறிவிப்பு: Street Viewவின் நம்பகமான திட்டப் புகைப்படக் கலைஞர்களுக்கான கொள்கையை நீங்கள் மீறுவதாக நாங்கள் நம்பினால், பொதுவாக அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு உங்களிடம் கோருவோம். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் நாங்கள் கோரியவற்றைச் செய்து, மீறலைச் சரிசெய்யவில்லை என்றால் நாங்கள் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கக்கூடும். தீவிரமான அல்லது பலமுறை செய்யப்படும் கொள்கை மீறல்களின்போது நாங்கள் உடனடியாகவும் அறிவிப்பின்றியும் நடவடிக்கை எடுக்கக்கூடும்.
மூன்றாம் தரப்பினருக்கான திட்டத்தை நிறுத்திவைத்தல்: Google Street Viewவின் நம்பகமான திட்டம் போன்ற Googleளின் மூன்றாம் தரப்பினருக்கான திட்டங்களில் உங்களின் பங்களிப்பு, Street Viewவின் நம்பகமான திட்டப் புகைப்படக் கலைஞர்களுக்கான கொள்கை உடனான உங்கள் இணக்கத்தை வைத்தே மதிப்பிடப்படும். கொள்கைகளை நீங்கள் மீறுவதாகத் தெரிந்தாலோ இணக்கத்தன்மை குறித்து உங்கள் வணிகத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்யும்போது ஒத்துழைக்கவில்லை என்றாலோ உங்கள் பங்களிப்பு வரம்புகளுக்கு உட்படுத்தப்படலாம் அல்லது நிறுத்திவைக்கப்படலாம்.
Maps கணக்கை நிறுத்திவைத்தல்: நீங்கள் தீவிரமான ஒரு கொள்கை மீறலைச் செய்தால் உங்கள் Google Maps கணக்குகள் நிறுத்திவைக்கப்படலாம். பலமுறை கொள்கையை மீறினாலோ குறிப்பாகத் தீவிரமான கொள்கை மீறல்களைச் செய்தாலோ உங்கள் Google Maps கணக்குகள் நிரந்தரமாக நிறுத்திவைக்கப்படலாம், உங்களால் Google Mapsஸிற்குப் பங்களிக்க முடியாமலும் போகலாம். மேலும் உங்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு நாங்கள் தகவல் தெரிவிக்கக்கூடும்.
மூன்றாம் தரப்பினருக்கான கொள்கை மீறலைப் பற்றிப் புகார் செய்தல்
இந்தக் கொள்கையை ஒரு மூன்றாம் தரப்புக் கூட்டாளர் மீறுவதாகக் கருதுகிறீர்களா? எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: