தேடல் முடிவுகள் அல்லாது,
விளம்பரங்களை ஏன் விற்கிறோம்.
உலகில் அனைத்திற்கும் விலை உள்ள போது, நாங்கள் வழங்கும் தேடல் முடிவுகளில் சிறப்பான இடத்தைப் பெற, விளம்பரதாரர்கள் ஏன் பணம் செலுத்தக்கூடாது?
பதில் எளிதானது. நீங்கள் Googleஐப் பயன்படுத்திக் கண்டறியும் விஷயங்களில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். பயனர்கள் தேடும் போது அதிகம் தொடர்புடைய பதில்களையும் முடிவுகளையும் வழங்க வேண்டும் என்பதே ஆரம்பகாலத்திலிருந்து நாங்கள் பின்பற்றும் அணுகுமுறையாகும்.
இணையப் பக்கத்தை யார் இணைக்கிறார்கள், உங்கள் தேடலுடன் அந்தப் பக்கத்தின் உள்ளடக்கம் எப்படிப் பொருந்துகிறது என்பதை Google தேடல் முடிவுகள் கவனத்தில் கொள்கிறது. நீங்கள் என்ன பார்க்க வேண்டும் என்று நாங்கள் அல்லது எங்கள் கூட்டாளர்கள் நினைப்பதை வழங்காமல், ஆன்லைன் சமூகம் முக்கியமானதாக நினைப்பதையே நாங்கள் வழங்கும் தேடல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
மேலும் அசல் தேடல் முடிவுகளைப் போலவே தொடர்புடைய விளம்பரங்களும் பயனுள்ளதாக இருப்பதாக நாங்கள் நம்பும் அதே வேளையில், பயனர்கள் இரண்டையும் குழப்பிக் கொள்வதையும் விரும்பவில்லை.
Google இல் காட்டப்படும் ஒவ்வொரு விளம்பரமும் தெளிவாகக் குறிக்கப்பட்டு, அசல் தேடல் முடிவுகளிலிருந்து தனியாக வைக்கப்படுகிறது. விளம்பரப் பகுதியில் தங்கள் விளம்பரம் முதன்மையாகத் தோன்றுவதற்கு விளம்பரதாரர்கள் அதிகப் பணம் செலுத்த விரும்பினாலும், தேடல் முடிவுகளில் முதன்மையான இடத்தைப் பணம் செலுத்தி யாரும் வாங்க முடியாது. அது மட்டுமில்லாமல், நீங்கள் உள்ளிட்ட தேடல் வார்த்தைகளுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே அந்த விளம்பரங்கள் காட்டப்படும். அதாவது பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே விளம்பரங்களைப் பார்ப்பீர்கள்.
தேடல் முடிவுகள் மற்றும் விளம்பரங்களுக்கு இடையே உள்ள தனித்துவத்துக்கு சில ஆன்லைன் சேவைகள் முக்கியத்துவம் வழங்குவதில்லை.
அந்த முக்கியத்துவத்தை நாங்கள் வழங்குகிறோம்.