ஜெனரேட்டிவ் AI - தடைசெய்யப்பட்ட பயன்பாட்டு கொள்கை
கடைசியாக மாற்றியது: 14 மார்ச், 2023
புதிய தலைப்புகளை ஆராயவும், உங்கள் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் ஜெனரேட்டிவ் AI உங்களுக்கு உதவலாம். இருப்பினும் அதை நீங்கள் பொறுப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் பயன்படுத்த மற்றும் அணுக வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதன் காரணமாக, இந்தக் கொள்கையைக் குறிப்பிடும் Google சேவைகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுக்கு நீங்கள் பயன்படுத்தக்கூடாது:
- ஆபத்தான, சட்டவிரோதமான, தீங்கிழைக்கக்கூடிய செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் அல்லது அவற்றுக்கு உதவுதல். இவை உட்பட:
- சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கோ சட்ட மீறல்களுக்கோ உதவுதல் அல்லது அவற்றை ஊக்குவித்தல். இவை போன்றவை:
- சிறார் பாலியல் வன்கொடுமை அல்லது அவர்களைத் தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது அல்லது உருவாக்குவது
- சட்டவிரோதப் பொருட்கள், தயாரிப்புகள், சேவைகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கோ அணுகுவதற்கோ வழிகாட்டுதல்களை வழங்குவது அல்லது அவற்றின் விற்பனையை ஊக்குவிப்பது அல்லது அதற்கு உதவுவது
- பயனர்கள் எவ்விதக் குற்றங்களையும் செய்ய உதவுவது அல்லது ஊக்குவிப்பது
- கொடூரமான தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் தொடர்பான உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது அல்லது உருவாக்குவது
- சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், மோசடி, குறுக்கீடு மற்றும் சிக்கல்களை ஏற்படுத்துதல் (அல்லது இவற்றை மற்றவர்கள் செய்ய உதவுதல்). இவை போன்றவை:
- ஸ்பேமை உருவாக்குவதையோ அனுப்புவதையோ ஊக்குவிப்பது அல்லது அவற்றுக்கு உதவுவது
- ஏமாற்றும் நோக்கம் கொண்ட அல்லது மோசடிச் செயல்பாடுகள், ஸ்கேம்கள், ஃபிஷிங், மால்வேர் உள்ளடக்கத்தை உருவாக்குவது.
- பாதுகாப்பு வடிப்பான்களை மீறிச் செயல்படுதல் அல்லது மீறிச் செயல்பட முயலுதல் அல்லது எங்கள் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்படுமாறு உள்நோக்கத்துடன் மாடலைப் பயன்படுத்துதல்
- தனிநபர்களுக்கோ குழுவிற்கோ தீங்கிழைக்கக்கூடிய அல்லது தீங்கிழைக்கத் தூண்டக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குதல். இவை போன்றவை:
- வெறுப்பைத் தூண்டும் அல்லது ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவது
- மற்றவர்களை மிரட்ட, கொடுமைப்படுத்த அல்லது அவமதிக்க, துன்புறுத்தும் அல்லது கொடுமைப்படுத்தும் முறைகளுக்கு உதவுவது
- வன்முறையைப் பரிந்துரைக்கும், தூண்டும், ஊக்குவிக்கும் வகையிலான உள்ளடக்கத்தை உருவாக்குவது
- தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வதை பரிந்துரைக்கும், ஊக்குவிக்கும் அல்லது அதற்கு வழிவகுக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவது
- விநியோகிப்பதற்காகவோ பிற தீங்கான நோக்கங்களுக்காகவோ ஒருவரை தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை உருவாக்குவது
- நபர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை டிராக் செய்வது அல்லது கண்காணிப்பது
- நபர்களின் மீது நியாயமற்ற அல்லது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவது (குறிப்பாக, பாதுகாக்கவேண்டிய அல்லது சட்டப்படி பாதுகாக்கப்பட்ட பண்புகளைப் பாதிக்கும் வகையில்)
- சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கோ சட்ட மீறல்களுக்கோ உதவுதல் அல்லது அவற்றை ஊக்குவித்தல். இவை போன்றவை:
- தவறான தகவல், தவறான பிரதிநிதித்துவம், தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்ட உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் விநியோகித்தல். இவை உட்பட:
- உள்ளடக்கம் மனிதனால் உருவாக்கப்பட்டது எனத் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துதல் அல்லது ஏமாற்றும் நோக்கத்தில், உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் அசலான உள்ளடக்கம் எனக் கூறுதல்
- ஏமாற்றுவதற்காக, வெளிப்படையாகத் தெரிவிக்காமல் பிறரைப் போன்று (உயிருடன் இருப்பவர் அல்லது இறந்தவர்) ஆள்மாறாட்டம் செய்யும் வகையிலான உள்ளடக்கத்தை உருவாக்குதல்
- குறிப்பாக, உணர்வுப்பூர்வமான விஷயங்களில் (எ.கா. ஆரோக்கியம், நிதி, அரசுச் சேவைகள், சட்டம்) அனுபவம் அல்லது திறமை தொடர்பாகத் தவறான தகவல் அல்லது வாக்குறுதிகளை வழங்குதல்
- ஒரு நபரின் உடைமையிலோ தனிநபர் உரிமைகளிலோ உடல் நலனிலோ பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களில் தானியங்கி முடிவுகளை எடுக்கச் செய்தல் (எ.கா. நிதி, சட்டம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், வீட்டு வசதி, காப்பீடு, சமூக நலம்)
- ஆபாசம் அல்லது பாலியல் இச்சையைத் தூண்டும் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் உட்பட, வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தை உருவாக்குதல் (எ.கா. பாலியல்ரீதியாகச் சாட்டிங் செய்யும் ரோபோக்கள்). அறிவியல், கல்வி, ஆவணப்படம் அல்லது கலை சார்ந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் இதில் அடங்காது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.