தனியுரிமைக் கொள்கை
கடைசியாக மாற்றப்பட்டது: 27 ஜூலை, 2012 (காப்பகப்படுத்தியப் பதிப்புகளைக் காண்க)
எங்கள் சேவைகளைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம் – தகவலை தேடுவதற்கும் தகவலைப் பகிர்ந்து கொள்வதற்கும், பிறருடன் தொடர்புகொள்ள அல்லது புதிய உள்ளடக்கத்தை உருவாக்கவும் பயன்படுத்தலாம். எங்களுடன் தகவலைப் பகிரும்போது, எடுத்துக்காட்டாக Google கணக்கை உருவாக்குதல், அந்த சேவைகளை மேலும் சிறப்பாக செய்வோம் – மிகவும் தொடர்புடைய தேடல் முடிவுகளையும் விளம்பரங்களையும் காண்பித்தல், நபருடன் இணைக்க உதவியாகவோ அல்லது மற்றவர்களுடன் விரைவாகவும் எளிமையாகவும் பகிரச் செய்தல். எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் பொழுது , தகவலை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதையும் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் வழிகளையும் நீங்கள் தெளிவாக அறிந்திருக்க விரும்புகிறோம்.
எங்கள் தனியுரிமைக் கொள்கை விளக்குவது யாதெனில்:
- எந்தத் தகவலைச் சேகரிக்கிறோம், மேலும் ஏன் சேகரிக்கிறோம்.
- அந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்தும் விதம்.
- நாங்கள் அளிக்கும் விருப்பத் தேர்வுகள், அந்த தகவலை கையாளும் வழிமுறை மற்றும் புதுப்பிக்கும் முறை உட்பட.
இதனை முடிந்தவரை எளிமையாக வைக்க முயற்சித்தோம், ஆயினும் குக்கீகள், இணைய நெறிமுறை முகவரிகள், பிக்சல் குறிச்சொற்கள் மற்றும் உலாவிகள் போன்ற சொற்களை பற்றி அறியாமல் இருப்பின் முதலில் இந்த முக்கியச் சொற்களைப் பற்றிப் படிக்கவும். உங்கள் தனியுரிமைக்கு Google முக்கியத்துவம் வழங்குகிறது. அதனால் நீங்கள் Google க்கு புதியவராயினும் அல்லது நெடுங்காலப் பயனாளராயினும், எங்கள் செயல்பாடுகளை அறிவதற்கு நேரம் ஒதுக்கவும் – மேலும் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்க.
நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்
எங்களின் எல்லா பயனாளர்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்க தகவலை சேகரிக்கிறோம் – நீங்கள் பேசும் மொழி போன்ற அடிப்படை விஷயங்கள் முதல் நீங்கள் எவ்வகை விளம்பரங்களை அதிகமாக பயன்படுத்துவீர்கள் அல்லது இணையத்தில் உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் யார் என்பது போன்ற கடினமான விஷயங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறோம்.
இரண்டு வழிகளில் தகவலை சேகரிப்போம்:
-
நீங்கள் எங்களிடம் வழங்கும் தகவல். எடுத்துக்காட்டாக, எங்களின் பல சேவைகளுக்கு, நீங்கள் Google கணக்கில் பதிவு பெறுவது அவசியமானது. நீங்கள் செய்யும்போது பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது கடன் அட்டைப் போன்ற தனிப்பட்ட தகவலைக்கேட்போம். நாங்கள் வழங்கும் பகிர்வு அம்சங்களில் முழு நன்மையைப் பெற விரும்பினால், உங்கள் பெயர் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட Google சுயவிவரம் பொதுவில் தெரியும்படி உருவாக்குமாறு கூறுவோம்.
-
எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதிலிருந்து நாங்கள் பெறும் தகவல். எங்கள் விளம்பரசேவைகளைப் பயன்படுத்தும் இனையதளத்தைப் பார்வையிடும்போதும் அல்லது எங்களின் விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றைப் பார்த்து தொடர்புகொள்ளும்போதும், நீங்கள் பயன்படுத்தும் சேவைகள் மற்றும் அதை பயன்படுத்தும் விதம் எப்படி என்பது பற்றிய தகவலைச் சேகரிப்போம். இந்தத் தகவலில் அடங்குவன:
-
சாதனத்தின் தகவல்
சாதனம் சார்ந்த தகவலைச் சேகரிப்போம் (வன்பொருள் வடிவம், இயக்க முறைமைப் பதிப்பு, தனிநபர் சாதன அடையாளங்காட்டிகள் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட மொபைல் நெட்வொர்க் தகவல்). Google கணக்குடன் உங்கள் சாதனத்தின் அடையாளங்காட்டிகளை அல்லது தொலைபேசி எண்ணை Google இணைக்கும்.
-
பதிவுத் தகவல்
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது அல்லது Google வழங்கிய உள்ளடக்கத்தை நீங்கள் பார்வையிடும்போது, சேவையக பதிவுகளில் சில தகவலை தானாகவே சேகரிப்போம். இதில் அடங்குவன:
- உங்கள் தேடல் வினவல்களைப் போன்று எங்கள் சேவையை எப்படி பயன்படுத்தினீர்கள் என்பதன் விவரங்கள்.
- தொலைபேசி எண், அழைக்கும்-தரப்பினர் எண், அனுப்பும் எண்கள், அழைப்புகளின் நேரமும் தேதியும், அழைப்புகளின் காலவரை, SMS அனுப்பும் தகவல் மற்றும் அழைப்புகளின் வகைகள் போன்ற தொலைபேசிப் பதிவுத் தகவல்.
- இணைய நெறிமுறை முகவரி.
- சிதைவுகள், கணினியின் செயல்பாடு, வன்பொருள் அமைப்புகள், உலாவி வகை, உலாவி மொழி, உங்கள் கோரிக்கையின் தேதியும் நேரமும் மற்றும் பரிந்துரைக்கப்படும் URL போன்ற சாதன நிகழ்வுத் தகவல்.
- உங்கள் உலாவி அல்லது Google கணக்கைத் தனித்து அடையாளங்காணும் குக்கீகள்.
-
இருப்பிடத் தகவல்
இருப்பிடம் செயலாக்கப்பட்ட Google சேவையைப் பயன்படுத்தும்போது, மொபைல் சாதனத்தால் அனுப்பப்பட்ட GPS சிக்னல்களைப் போன்ற உங்கள் அசல் இருப்பிடம் பற்றிய தகவலைச் சேகரிக்கலாம். இருப்பிடத்தை நிர்ணயம் செய்ய, உங்கள் சாதனத்தை உணரும் தரவுப் போன்ற பலவித தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டாக, அருகிலுள்ள Wi-Fi அணுகும் இடங்கள் மற்றும் கைபேசி டவர்கள் ஆகியவற்றின் தகவல்.
-
தனித்துவமான பயன்பாட்டின் எண்கள்
சில சேவைகள் தனிப்பட்ட பயன்பாட்டின் எண்ணையும் உள்ளடக்கும். அந்த சேவையை நீங்கள் நிறுவும்போதோ அல்லது நிறுவல் நீக்கம் செய்யும்போதோ அல்லது தன்னியக்கப் புதுப்பிப்புகளுக்காக தொடர்ந்து சேவையகங்களை தொடர்புகொள்ளும்போதோ, உங்கள் நிறுவலைப் பற்றிய எண் மற்றும் தகவல் (எடுத்துக்காட்டாக, இயக்க முறைமை வகை மற்றும் பயன்பாட்டுப் பதிப்பின் எண்) Google க்கு அனுப்பப்படும்.
-
அக சேமிப்பகம்
உலாவி வலை சேமிப்பகம் (HTML 5 உள்பட) மற்றும் பயன்பாட்டுத் தரவு தேக்ககங்கள் போன்ற இயக்கமுறைகளைப் பயன்படுத்தி உங்களின் சாதனத்தில் தகவலைச் (தனிப்பட்டத் தகவல் உள்பட) சேகரித்து சேமிப்போம்.
-
குக்கீகள் மற்றும் பெயரற்ற அடையாளங்காட்டிகள்
நீங்கள் Google சேவையைப் பார்வையிடும்போது தகவலைச் சேகரிக்கவும் சேமிக்கவும் பலவித தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோம், மேலும் இவை ஒன்று அல்லது அதிகமான குக்கீகளை அல்லது பெயரற்ற அடையாளங்காட்டிகளை உங்கள் சாதனங்களுக்கு அனுப்புவது போன்றவற்றை உள்ளடக்கும். நாங்கள் கூட்டாளர்களுக்கு வழங்கக்கூடிய விளம்பரப்படுத்தும் சேவைகள் அல்லது பிற தளத்தில் தோன்றும் Google அம்சங்கள் போன்ற, சேவைகளை நீங்கள் தொடர்புகொள்ளும்போதும் குக்கீகள் மற்றும் பெயரற்ற அடையாளங்காட்டிகளைப் பயன்படுத்துவோம்.
-
சேகரிக்கும் தகவலை நாங்கள் எப்படி பயன்படுத்துகிறோம்
எங்கள் சேவைகள் எல்லாவற்றிலும் சேகரிக்கும் தகவலை அந்த சேவைகளை வழங்கவும், நிர்வகிக்கவும், அதைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும், புதியவற்றை உருவாக்கவும், மேலும் Google ஐயும் பயனர்களையும் பாதுகாக்கவும் தகவலைப் பயன்படுத்துவோம். இந்த தகவலை, தொகுக்கப்பட்ட உள்ளடக்கத்தை வழங்க பயன்படுத்துவோம் – மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகள் மற்றும் விளம்பரங்களை உங்களுக்கு வழங்குதல் போன்று.
Google கணக்குத் தேவைப்படக்கூடிய நாங்கள் வழங்கும் எல்லா சேவைகளிலும் உங்கள் Google சுயவிவரத்திற்காக நீங்கள் வழங்கிய பெயரைப் பயன்படுத்துவோம். கூடுதலாக Google கணக்குடன் இணங்கும் பழைய பெயர்களை மாற்றுவோம், அப்போதுதான் எங்களின் எல்லா சேவைகளிலும் ஒரே மாதிரி தெடர்ந்து குறிப்பிடப்படுவீர்கள். பிற பயனர்கள் ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலை வைத்திருந்தாலோ அல்லது உங்களை அடையாளமிடும் பிற தகவல் இருந்தாலோ, பெயர் மற்றும் புகைப்படம் போன்ற உங்கள் Google சுயவிவரத் தகவலைப் பொதுவில் தெரியும்படி காண்பிப்போம்.
Google ஐ தொடர்புகொள்ளும்போது நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவியாக உங்களுடனான பரிமாற்றத்தை பதிவில் வைப்போம். எங்கள் சேவைகளில் வரும் மாற்றங்கள் அல்லது மேம்படுத்தல்கள் போன்றவற்றைப் பற்றி நீங்கள் அறிவதற்காக உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவோம்.
உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் எங்களின் சேவைகளின் தரத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தவும், குக்கீகள் மற்றும் பிக்சல் குறிச்சொற்கள் போன்ற பிற தொழில்நுட்பங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலை நாங்கள் பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டாக, உங்கள் மொழி விருப்பங்களைச் சேமிப்பதன் மூலம் நீங்கள் தேர்வுசெய்யும் மொழியில் எங்கள் சேவைகளை நாங்கள் வழங்க முடியும். உங்களுக்கென உருவாக்கப்பட்ட விளம்பரங்களைக் காண்பிக்கும்போது, இனம், மதம், பாலினம் தொடர்பான சார்நிலை அல்லது உடல்நலம் போன்று பாதிப்பு உண்டாக்கக்கூடிய வகைகளுடன் குக்கீயையோ அல்லது பெயரற்ற அடையாளங்காட்டியையோ நாங்கள் தொடர்புப்படுத்த மாட்டோம்.
தனிநபர் தகவல் உள்பட, ஒரு Google சேவையிலிருந்து வரும் தனிநபர் தகவலை பிற Google சேவைகளிலிருந்து வரும் தகவலேடு ஒன்றிணைப்போம் – எடுத்துக்காட்டாக, நீங்கள் அறிந்தவருடன் எளிமையாகப் பகிரும் வகையில் செய்வதற்கு. உங்கள் ஒப்புதலைப் பெறாமல், தனிப்பட்ட முறையில் அடையாளங்காணக்கூடிய தகவலுடன் DoubleClick குக்கீத் தகவலை ஒன்றிணைக்க மாட்டோம்.
இந்த தனியுரிமைக் கொள்கையில் அமைக்கப்பட்டிருப்பதை தவிர்த்து எந்த நோக்கத்திற்காகவும் உங்கள் தகவலைப் பயன்படுத்தும் முன்னர் உங்கள் அனுமதியைக் கேட்போம்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், எங்கள் சேவையகங்களில் தனிப்பட்ட தகவலை Google செயலாக்குகிறது. நீங்கள் இருக்கும் இடத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும் இடத்தில் உள்ள சேவையகத்தில் உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் செயலாக்கக்கூடும்.
ஒளிவுமறைவின்மையும் விருப்பமும்
ஒவ்வொருவரின் தனிப்பட்ட அக்கரைகளும் வேறுபட்டு இருக்கும். நாங்கள் சேகரிக்கும் தகவலைப் பற்றி உங்களுக்குத் தெளிவுப்படுத்துவதே எங்களின் நோக்கம், அதனால் அவை பயன்படுத்தப்படும் விதம் குறித்து உகந்த விருப்பங்களை நீங்கள் தேர்வுசெய்யலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் செய்யக்கூடியவை:
- Google டாஷ்போர்டைப் பயன்படுத்தி, உங்கள் Google கணக்கில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள சில தகவலை பரிசீலித்து கட்டுப்படுத்தலாம்.
- விளம்பர விருப்பத்தேர்வுகள் நிர்வாகியைப் பயன்படுத்தி, எந்த வகையிலானவற்றை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பது போன்ற உங்கள் விளம்பர விருப்பத்தேர்வுகளைக் கண்டு திருத்தலாம். இங்குள்ள சில Google விளம்பர சேவைகளிலிருந்தும் வெளியேறலாம்.
- ஒரு சிலருக்கு மட்டும் உங்கள் Google சுயவிவரம் எவ்வாறு தோன்றும் என்பதை சரிசெய்ய எங்கள் எடிட்டரைப் பயன்படுத்தலாம்.
- உங்கள் தகவலை யாருடன் பகிர்வது என்பதை கட்டுப்படுத்தலாம்.
- எங்களின் பல சேவைகளிலிருந்து தகவல் பெறலாம்.
உங்கள் உலாவியை எங்கள் சேவைகளுடன் உள்ள குக்கீகள் உள்பட எல்லா குக்கீகளையும் தடுக்கும் வகையிலும் அல்லது எங்களால் குக்கீ அமைக்கப்படுவதைத் தெரியப்படுத்தும் வகையிலும் அமைக்கலாம். எனினும், உங்கள் குக்கீகள் முடக்கப்பட்டிருந்தால் எங்களின் பல சேவைகள் சரியாக இயங்காது என்பதை நினைவில் கொள்க. எடுத்துக்காட்டாக, உங்கள் மொழி விருப்பத்தேர்வுகளை நாங்கள் மறக்கலாம்.
நீங்கள் பகிரும் தகவல்
எங்கள் சேவைகளில் பல உங்கள் தகவலைப் பிறருடன் பகிர்வதற்கு வழி செய்கிறது. நீங்கள் பொதுவான முறையில் பகிரும் எந்தத் தகவலும் Google உள்பட தேடு பொறிகளால் அட்டவணைப்படுத்தப்படலாம் என்பதை நினைவில்கொள்க. உங்கள் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கும் அகற்றுவதற்கும் வெவ்வேறான விருப்பங்களை எங்கள் சேவைகள் வழங்குகின்றன.
உங்கள் தனிப்பட்ட தகவலை அணுகுவது மற்றும் புதுப்பிப்பது
எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போதெல்லாம், உங்கள் தனிப்பட்ட தகவலை அணுகுவதற்கான வழிமுறைகளையும் தர விரும்புகிறோம். அந்த தகவல் தவறாக இருந்தால், அதை விரைவாக புதுப்பிக்க மற்றும் நீக்க நாங்கள் முயற்சிப்போம் – சட்டப்படியான வணிகம் அல்லது வணிக நோக்கங்களுக்காக நாங்கள் அந்த தகவலை வைத்திருந்தால் தவிர. உங்கள் தனிப்பட்ட தகவலைப் புதுப்பிக்கும்போது, உங்கள் கோரிக்கையின்படி செயல்படுவதற்கு முன்னர் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும்படி கேட்போம்.
காரணமின்றி தொடர்ந்துவரக்கூடிய, பொருத்தமற்ற தொழில்நுட்ப முயற்சி தேவைப்படும்படியான (எடுத்துக்காட்டாக, புதிய அமைப்பை உருவாக்குவது அல்லது ஏற்கனவே இருப்பதன் அடிப்படையை மாற்றுவது), பிறரின் தனியுரிமைக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய அல்லது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத (உதாரணத்திற்கு, காப்புப்பிரதி டேப்களில் உள்ள முக்கிய தகவலைக் கோருவது) கோரிக்கைகளை நாங்கள் புறக்கணிக்க நேரலாம்.
எதிரான விளைவை ஏற்படுத்தும் இடங்களை தவிர மற்ற இடங்களில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எதிர்பாராத அல்லது தீங்கான தாக்குதலில் இருந்து தகவலைப் பாதுகாக்கும் விதமாக எங்கள் சேவைகளை பராமரிக்க முயற்சிக்கிறோம். இதனால், எங்கள் சேவைகளில் உங்கள் தகவலை நீக்கிய பின்பும், எங்கள் செயலிலுள்ள சேவையகங்களில் தேங்கிய நகல்களை உடனடியாக நீக்க முடியாமல் போகலாம் மேலும் காப்புப் பிரதிக் கணினியிலிருந்து தகவலை அகற்ற முடியாமல் போகலாம்.
நாங்கள் பகிரும் தகவல்
பின்வரும் சூழ்நிலைகளில் ஒன்று பொருந்தும் வரையில் Google க்கு வெளியேயுள்ள நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களுடன் தனிப்பட்ட தகவலை பகிரமாட்டோம்:
-
உங்கள் ஒப்புதலுடன்
உங்கள் ஒப்புதல் எங்களிடம் இருப்பின், Google க்கு வெளியேயுள்ள நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்களுடன் தனிப்பட்ட தகவலை பகிர்வோம். உணர்ச்சியுடைய தனிப்பட்டத் தகவலைப் பகிர்வதற்கான உங்களின் ஒப்புதலை நாங்கள் பெற வேண்டும்.
-
கள நிர்வாகிகளுடன்
உங்கள் Google கணக்கு களத்தின் நிர்வாகியால் (எடுத்துக்காட்டாக, Google Apps பயனர்களுக்காக) உங்களுக்காக நிர்வகிக்கப்பட்டால், உங்கள் அமைப்பிற்குப் பயனர் ஆதரவை வழங்கும் களத்தின் நிர்வாகி மற்றும் மறுவிற்பணையாளர்கள், உங்கள் Google கணக்கின் தகவலுக்கான அணுகலைக் (உங்கள் மின்னஞ்சல் மற்றும் பிற தரவு உட்பட) கொண்டிருப்பார்கள். உங்கள் கள நிர்வாகி கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்:
- நீங்கள் நிறுவும் பயன்பாடுகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் போன்ற உங்கள் கணக்கு தொடர்புடைய புள்ளிவிவரங்களைக் காணலாம்.
- உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றலாம்.
- உங்கள் கணக்கின் அணுகலை இடைநீக்கலாம் அல்லது நீக்கலாம்.
- உங்கள் கணக்கின் ஒரு பகுதியாக சேமிக்கப்பட்ட தகவலை அணுகலாம் அல்லது தக்கவைத்துக் கொள்ளலாம்.
- பொருந்தக்கூடிய சட்டம், கட்டுப்பாடு, சட்ட செயலாக்கம் அல்லது பின்பற்ற வேண்டிய அரசுக் கோரிக்கை ஆகியவற்றுடன் இணங்கும் பொருட்டு உங்கள் கணக்கு தகவலைப் பெறலாம்.
- தகவல் அல்லது தனியுரிமை அமைப்புகளைத் திருத்துதல் அல்லது நீக்குவதற்கான உங்கள் திறனைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் தகவலுக்கு உங்கள் கள நிர்வாகியின் தனியுரிமை கொள்கையைப் பார்க்கவும்.
-
வெளிப்புற செயலாக்கத்திற்கு
எங்களை சார்ந்தவர்கள், பிற நம்பகமான வணிகங்கள் அல்லது நபர்களுக்கு, எங்கள் வழிக்காட்டுதல்கள், தனியுரிமைக் கொள்கை மற்றும் பிற தகுந்த ரகசியம் மற்றும் பாதுகாப்பு அளவீடுகள் ஆகியவற்றிற்கு இணங்கும் அடிப்படையில் தனிபட்ட தகவலை அதை முறையாக செயல்படுத்தும் பொருட்டு வழங்குகிறோம்.
-
சட்டபூர்வ காரணங்களுக்கு
தகவலின் அணுகல், பயன், பாதுகாத்தல் அல்லது வெளியிடுதல் ஆகியவை நல்லெண்ண நம்பிக்கையின் அடிப்படையில், பின்வரும் காரணங்களுக்காகத் தேவைப்பட்டால் தனிப்பட்ட தகவலை Google க்கு வெளியே உள்ள நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்களுடன் பகிர்வோம்:
- பொருந்தக்கூடிய சட்டம், கட்டுப்பாடு, சட்ட செயலாக்கம் அல்லது பின்பற்ற வேண்டிய அரசுக் கோரிக்கையை சந்தித்தல்.
- சாத்தியக்கூறு உள்ள மீறுதல்களை விசாரிப்பது உள்பட, பொருந்தும் சேவை விதிமுறைகளை செயலாக்குதல்.
- மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்ப சிக்கல்களைக் கண்டறிதல், தடுத்தல் அல்லது அவற்றைத் தெரியப்படுத்தல்.
- சட்டத்திற்கு தேவைப்படும்படி அல்லது அனுமதிக்கப்பட்டபடி Google-ன் தயாரிப்பு சொத்துக்கள் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி எங்கள் பயனாளர்கள் அல்லது பொதுமக்கள் ஆகியோரின் உரிமை மீறல்களை பாதுகாத்தல்.
ஒருங்கிணைக்கப்பட்ட, தனிப்பட்ட முறையில் அடையாளம் காணமுடியாத தகவலை பொதுப்படையாக வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள் அல்லது இணைக்கப்பட்ட தளங்கள் போன்ற கூட்டாளர்களுடன் பகிர்வோம். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளின் பொதுவானப் பயனைப் பற்றிய போக்குகளைக் காண்பிப்பதற்காக தகவலைப் பொதுவில் பகிர்வோம்.
இணைத்தல், கையகப்படுத்தல் அல்லது சொத்து விற்பனை போன்றவற்றில் Google ஈடுபட்டால், தனிப்பட்ட தகவலின் நம்பகத்தன்மையைத் தொடர்ந்து உத்தரவாதமளிப்போம், தனிப்பட்டத் தகவல் பரிமாற்றுவதற்கு முன்பு அல்லது வேறு தனியுரிமைக் கொள்கைக்கு பொருளாகும் போது பாதித்தப் பயனர்களுக்கு அறிவிப்போம்.
தகவல் பாதுகாப்பு
அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது அங்கீகரிக்கப்படாத மாற்றம், வெளியிடுதல் அல்லது நாங்கள் கொண்டிருக்கும் தகவலை அழித்தல் ஆகியவைகளில் இருந்து Google மற்றும் எங்களது பயனர்களைப் பாதுகாக்க கடுமையாக உழைப்போம். குறிப்பாக:
- எங்கள் சேவைகளில் பலவற்றை SSL பயன்படுத்தி முறைமையாக்குவோம்.
- உங்கள் Google கணக்கை அணுகும்போதும், Google Chrome இல் பாதுகாப்பு உலாவல் அம்சத்திலும், இரு படி சரிபார்த்தலை வழங்குகிறோம்.
- சேகரிக்கும் தகவல், சேமித்தல் மற்றும் பயிற்சிகளைச் செயல்படுத்தல், நிஜ பாதுகாப்பு அளவிடுகள், கணினிகளின் அங்கீகரிக்கப்படாத அணுகலின் பாதுகாப்பிற்காகத் மதிப்பாய்வு செய்வோம்.
- தனிநபர் தகவலை கையாளும் வழிமுறைகளை அந்த தகவலை எங்களுக்காகச் செயல்படுத்த விரும்பும் Google பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் முகவர்கள், மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடுமையான ரகசிய கேட்பாட்டிற்கு உட்பட்டவர்கள் மேலும் இந்த கடமைகளைச் செய்ய மறுத்தால் பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.
பயன்பாடு
Google Inc. மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள், பிற தளங்களில் (எங்கள் விளம்பர சேவைகள் போன்ற) வழங்கப்படும் சேவைகள் உள்பட வழங்கும் எல்லா சேவைகளிலும் எங்கள் தனியுரிமைக் கொள்கைப் பொருந்தும் ஆனால் தனிப்பட்ட தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டிருக்கும் சேவைகளுக்கும், இந்த தனியுரிமைக் கொள்கையுடன் இணைப்படாதவற்றிற்கும் மேற்சொன்னது பொருந்தாது.
பிற நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், தேடல் முடிவுகளில் உங்களுக்குக் காண்பிக்கப்படும் தயாரிப்புகள் அல்லது தளங்கள், Google சேவைகளில் அடங்கியுள்ள தளங்கள் அல்லது எங்கள் சேவைகளிலிருந்து இணைக்கப்பட்ட பிற தளங்கள் போன்றவற்றிற்கான சேவைகளுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கைப் பொருந்தாது. எங்கள் சேவைகளை விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், குக்கீகளைப் பயன்படுத்துபவர்கள், பிக்சல் குறிச்சொற்கள் மேலும் தொடர்புடைய விளம்பரங்களை வழங்க பிற தொழில்நுட்பங்கள் வழங்கக்கூடிய பிற நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் தகவல் நடத்தை முறைகளை எங்கள் தனியுரிமைக் கொள்கை ஏற்காது.
செயலாக்கம்
எங்களின் தனியுரிமைக் கொள்கையுடனான இணக்கத்தைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்வோம். பல சுய ஒழுங்குமுறை கட்டமைப்புகளுக்கும் நாங்கள் இணங்குகிறோம். எழுத்து முலம் புகார்களைப் பெறும்போது, அது தொடர்பாக புகாரளித்தவரைத் தொடர்புகொள்வோம். பயனர்களிடம் நேரடியாகச் சரிசெய்ய முடியாத தனிநபர் தரவின் பரிமாற்றம் குறித்த புகார்களை சரிசெய்ய, உள்ளார்ந்த தரவுப் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட தகுதியான அமைப்புகளுடன் பணிபுரிந்து தீர்த்து வைப்போம்.
மாற்றங்கள்
எங்கள் தனியுரிமைக் கொள்கை காலத்தைப் பொருத்து மாறலாம். இந்த தனியுரிமைக் கொள்கையின் கீழ், உங்களின் தெளிவான ஒப்புதல் இல்லாமல் உங்கள் உரிமைகளை குறைக்கமாட்டோம். தனியுரிமைக் கொள்கையின் மாற்றங்களை இந்தப் பக்கத்தில் இடுகையிடுவோம், மேலும் அந்த மாற்றங்கள் முக்கியமானதாக இருப்பின் மிகவும் முக்கியமான அறிவிப்பை (சில சேவைகளில் தனியுரிமை கொள்கையின் மாற்றங்கள் குறித்த மின்னஞ்சல் அறிவிப்பு உள்ளிட்டவை) வழங்குவோம். உங்கள் மதிப்பாய்விற்காக இந்த தனியுரிமைக் கொள்கையின் முந்தைய பதிப்புகளைப் காப்பகத்தில் வைத்திருப்போம்.
குறிப்பிட்ட தயாரிப்பு நடைமுறைகள்
நீங்கள் பயன்படுத்த இருக்கும் சில Google தயாரிப்புகள், சேவைகள் குறித்த குறிப்பிட்ட தனியுரிமை நடைமுறைகளை பின்வரும் அறிவிப்புகள் விளக்குகின்றன: