உங்கள் Android மொபைலையும் ஹெட்ஃபோன்களையும் மட்டும் பயன்படுத்தி அன்றாட உரையாடல்களையும் சுற்றியுள்ள ஒலிகளையும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் எளிதில் அணுக ஒலிபெருக்கி உதவுகிறது. உங்களைச் சுற்றியும் உங்கள் சாதனத்திலும் உள்ள ஒலிகளை வடிகட்டவும் வலுப்படுத்தவும் அதிகரிக்கவும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துங்கள்.
அம்சங்கள்• பேச்சைச் சரியாகப் புரிந்துகொள்ள, தேவையற்ற இரைச்சலைக் குறைக்கும்.
• இரைச்சலான இடங்களில் உரையாடல் பயன்முறை மூலம் பேசுபவரின் குரல் மீது கவனம் செலுத்தும். (Pixel 3 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கிடைக்கும்.)
• உரையாடல்கள், டிவி, விரிவுரைகள் போன்றவற்றைக் கேட்கலாம். தூரத்திலுள்ள ஆடியோ மூலங்களுக்கு புளூடூத் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. (புளூடூத் ஹெட்ஃபோன்களில் ஒலிப் பரிமாற்றத்தில் தாமதம் ஏற்படக்கூடும்.)
• சுற்றி நிகழும் உரையாடலுக்கோ உங்கள் சாதனத்தில் பிளே ஆகும் மீடியாவிற்கோ உங்கள் கேட்கும் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கலாம். இரைச்சலைக் குறைக்கலாம், குறைந்த அதிர்வெண், அதிக அதிர்வெண், மெல்லிய ஒலிகள் போன்றவற்றைக் கூட்டலாம். இரண்டு காதுகளுக்கும் அல்லது ஒவ்வொரு காதுக்கும் வெவ்வேறாக உங்கள் விருப்பத்தேர்வுகளை அமைக்கலாம்.
• அணுகல்தன்மை பட்டன், சைகை, விரைவு அமைப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒலிபெருக்கியை இயக்கலாம் முடக்கலாம். அணுகல்தன்மை பட்டன், சைகை, விரைவு அமைப்புகள் ஆகியவை குறித்து மேலும் அறிக:
https://support.google.com/accessibility/android/answer/7650693தேவைகள்• Android 8.1 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கிடைக்கிறது.
• உங்கள் Android சாதனத்தை ஹெட்ஃபோன்களுடன் இணைக்கவும்.
• உரையாடல் பயன்முறை தற்சமயம் Pixel 3 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கிடைக்கிறது.
ஒலிபெருக்கி குறித்த உங்களின் கருத்தை sound-amplifier-help@google.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். ஒலிபெருக்கியைப் பயன்படுத்த உதவி தேவைப்பட்டால்
https://g.co/disabilitysupportஎனும் பக்கத்திலிருந்து எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
அனுமதிகளுக்கான அறிவிப்பு•
மைக்ரோஃபோன்: மைக்ரோஃபோனுக்கான அணுகல் மூலம் ஒலிபெருக்கியால் ஆடியோவை அதிகரிக்கவும் வடிகட்டவும் முடியும். எந்தத் தரவும் சேகரிக்கப்படவோ சேமிக்கப்படவோ இல்லை.
•
அணுகல்தன்மை சேவை: இந்த ஆப்ஸ் அணுகல்தன்மை சேவையாக இருப்பதால் இது உங்கள் செயல்களைக் கண்காணிக்கும், சாளர உள்ளடக்கத்தை மீட்டெடுக்கும், நீங்கள் உள்ளிடும் வார்த்தைகளைக் கண்காணிக்கும்.